என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cell phone shop"
- மனைவி வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார்
- பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
நாகப்பட்டினம்,
நாகூர் அருகே உள்ள சன்னமங்களம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆமீர் ஹம்சா மகன் ஹாஜா மெய்தீன் (வயது 30). இவர் நாகையில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார்.
ஹாஜா மெய்தீனுக்கு ஆயிஷா நூர் என்ற மனைவியும், ஆஷீதீன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சிஇருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆயிஷா நூர் அவரது தந்தை வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் நேற்று காலை அவரது மனைவி வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார்.
வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை. தூக்குப்போட்டு தற்கொலை உடனே அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாஜா மெய்தீன் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிணமாக கிடந்த ஹாஜா மெய்தீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சி.சி.டி.வி காட்சி மூலம் விசாரணை
- கடையின் மேற்கூரை பெயர்ந்து கிடந்தது
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அறியநாற்றி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அனிதா (வயது 25). இவர் வேப்பூர் அடுத்த கூட்டுரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் வேலை முடிந்து இரவு அனிதா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து நேற்று காலை அனிதா தனது கடைக்கு சென்றார். கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனிதா கடையில் சோதனை செய்தபோது 25 விலையுயர்ந்த செல்போன், 2 லட்சம் ரொக்க பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இன்று காலை அனிதா வேப்பூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு நடந்த கடைக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகள் மூலம் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
- 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார்.
- ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.
வெள்ளகோவில்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது (வயது 38) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது வெள்ளகோவில் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் திருமுருகன் என்பவர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.
தஞ்சாவூரில் பதுங்கி இருந்த திருமுருகனை வெள்ளகோவில் போலீசார் பிடித்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை கைப்பற்றி, திருமுருகனை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது.
- மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு புகார் வந்ததது.
புதுச்சேரி:
காரைக்கால் திருநள்ளாறு சாலையில் பிரபல செல்போன் கடை. இயங்கி வருகிறது. இந்த செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது. இந்த செல்போன் கடையில் உரிய கணக்கு மற்றும் வரி செலுத்தாமல் செல்போன்களை விற்பதாகவும், மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு புகார் வந்ததது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி வணிகவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், கடையில் திடீரெ ன நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத செல்போன் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சுமார்6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை செய்து, சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள திருநள்ளாறு சாலை கடைவீதியில் வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திண்டிவனத்தில் செல்போன் கடையில் திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- திருடனை கைது செய்த போலீசாருக்கு ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்தார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் . இவர் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் இன்று காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது , கடையில் உள்ள ஷட்டருக்கு மேல் உள்ள இடைவெளியை பயன்படுத்தி உள்ளே சென்ற மர்ம நபர்களால் கடையில் இருந்த 18 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்ளையடி க்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று அங்குள்ள சி.சி.டிவி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து அந்த சி.சி.டிவி காட்சி அடிப்படையில் ரோசனை பகுதியை சேர்ந்த வினோத் (22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சில மணி நேரத்தில் திருடனை கைது செய்த போலீசாருக்கு ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்தார்.
- தியாகதுருகம் அருகே செல்போன் கடையில் தகராறு- 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- செல்போன் கடைக்குச் சென்று பொருள் வாங்கியுள்ளார். இந்நிலையில் பொருள் வாங்கியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் ஜெய்சங்கர் (வயது 29)இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த காண்டீபன் (45) என்பவர் செல்போன் கடைக்குச் சென்று பொருள் வாங்கியுள்ளார். இந்நிலையில் பொருள் வாங்கியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு காண்டீபன் மகன்கள் திருக்குமரன் (23) தமிழ் குமரன் (27) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஜெய்சங்கர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெய்சங்கரின் அண்ணன் பெருமாள் சண்டையை விலகியதாக கூறப்படுகிறது.
அப்போது காண்டீபன், திருக்குமரன், தமிழ் குமரன் ஆகியோர் பெருமாளை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த பெருமாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . இதுகுறித்து இரு தரப்பினரும் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் காண்டீபன், திருக்குமரன், தமிழ்குமரன் ஆகிய 3 பேர் மீதும், தமிழ்குமரன் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள் அவரது மனைவி ராஜேஸ்வரி, ஜெய்சங்கர் அவரது மனைவி கவிதா பேர் மீதும், ஆக மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டு இருந்தன.
- 2வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கினர்.
பல்லடம் :
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த சனுப் என்பவர் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, லட்சுமி நகர் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 27ந்தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றவர் மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று பல்லடம் அருள்புரம் பகுதியில் உள்ள சேடபாளையம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைகளை தூக்கிக்கொண்டு வந்த 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கினர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் லட்சுமி நகர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில் சகானி மகன் சுதிர் குமார் (22) மற்றும் சங்கர் தாகூர் மகன் சஞ்சித் தாகூர் (32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 34 ஸ்மார்ட் செல் போன்கள், 31 சாதா செல்போன்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் அற்பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் திலகராஜ் (வயது 28). இவர் வளவனூரில் புதுவை-விழுப்புரம் சாலையில் செல்போன்கடை மற்றும் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை செல்ேபான் கடை திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் திலகராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சிய டைந்த அவர் கடைக்கு விரை ந்தார். அப்போது கடை யில் இருந்த விலை உய ர்ந்த செல்போன்கள், சிம்கா ர்டுகள், பழுதுபார்க்க வந்த செல்போன்கள் கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வளவனூர் போலீசில் திலகராஜ் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை பற்றி துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் விஜயகுமார் (31). இவர் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை செல்போன் கடை அருகில் சலூன் கடைக்காரர் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜயகுமாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
விரைந்து வந்த விஜயகுமார் கடையை திறந்து பார்த்தபோது விலை உயர்ந்த 7 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பஸ் நிறுத்தத்தில் செல்போன் கடை வைத்திருப்பவர் சங்கர்(வயது 32). அரச்சலூர் அடுத்த பூ மாண்டன் வலசு 60 வேலாம்பாளையத்தை சேர்ந்தவர்.
இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்து உள்ளனர்.
பிறகு கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த துணிகர சம்பவம் லக்காபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரனை நடத்தி, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்