search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "certificates"

    • மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    சென்னை மாவட்டத்தில், மிச்சாங் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் ( 1 முதல் 15 வரை) உள்ள 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    இதைதொடர்ந்து, தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்பட முக்கிய ஆவணங்களும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

    இதை கருத்தில் கொண்டு, கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகள் www.mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
    • கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறை வடைகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கூட்டு சாலை அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்தநாளி னை முன்னிட்டு, சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி லட்சுமணன் ஆகியோா இன்று (14.10.2023) கொடி யசைத்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி யும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல்படி, அண்ணா பிறந்த நாளினை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று, விழுப்புரம் மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு, மிதி வண்டி போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி யானது, 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலி யனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தி லும், 13 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலியனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம் வீரன் கோவிலி லும், 15 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி யானது, கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பக்கம், காகுப்பம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 15 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்திலும், 17 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலி யனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் வழி யாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறைவடைகிறது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்க ளுக்கு ரூ.5000-, 3,000-, 2,000-, எனவும் 4 முதல் 10 வரை இடங்களை பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.250- வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், கோலி யனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சி தாநந்தம், மாவட்ட விளை யாட்டு அலுவலர் வேல்முரு கன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    வைத்தீஸ்வரன்கோயிலில் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் 4வயது முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது. 

    போட்டிக்கு பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞா னசெல்வன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த தியாகராஜன், மதன்,விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் சிவசங்கர் போட்டிகளை தொடங்கிவைத்தார். 

    நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் நான்கு வயது குழந்தைகள் முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

    இயற்கை ஓவியங்கள், உதவும் கரங்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் ஓவியங்கள் வரைந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
    வேதாரண்யம் அருகே சிலம்ப கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி கிராமத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். 

    சிலம்பாட்டக் கழக மாவட்டச் செயலாளர் கருணாகரன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி, கவிஞர் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா ரவிச்சந்திரன், துணைத் தலைவர் தியகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மூத்த ஆசான் ராமையா, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், துணைத் தலைவர் பார்த்தசாரதி, சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் செந்தில், முனைவர் ராமஜெயம், தலைமையாசிரியர் பாஸ்கரன், நாடக ஆசிரியர் ராசேந்திரன், கவிஞர் ராசேந்திரன், விவசாய சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சங்கரன், சுப்ரமணியன், கவிஞர் அசோக், ஆசிரியர் சத்தியசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.

    • தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் தென்காசி சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினர்.
    • முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி கால்பந்து கழகம் சார்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் கடந்த மே 15-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்று முடிந்தது. பயிற்சியின் நிறைவாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண வர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடைபெற்றது.

    தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் தென்காசி சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் தென்காசி கால்பந்து கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க துணை தலைவர் சிதம்பரம், பொறியாளர் கார்த்திக், தென்காசி தி.மு.க. நகர பொருளாளர் பரித் மற்றும் தென்காசி தி.மு.க. நகர மாணவர் அணி தலைவர் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி கால்பந்து கழக செயலாளர் பிஸ்வாஸ் வரவேற்று பேசினார்.

    கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. முடிவில் தென்காசி கால்பந்து கழக ஒருங்கிணைப்பாளர் காமேஷ் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு வருவாய் துறை சான்றுகள் கிடைக்கப்பெறுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
    • அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர், புல்லமடை, எருமைப்பட்டி ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கிராம மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் திருவாடனை ஊராட்சி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறுகிறீர்களா? என்று கேட்டறிந்ததுடன், மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனா ளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற கலெக்டர் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா? என்றும், நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    தங்களுக்கு தேவையான கோரிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டால் இதுகுறித்து எனக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், புல்லமடை ஊராட்சி மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் எருமைப்பட்டி ஊராட்சியில் பொது மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பயன் குறித்து கேட்டறிந்த கலெக்டர் விஷ்ணுசந்திரன் தங்களின் அத்தியாசிய கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும் என்றார்.

    அதேபோல் தகுதியுடைய நபர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    • வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி.
    • அடிப்படை பிரச்சினைகளுக்கு புகார் அளிப்பது எப்படி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த செம்போடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இலவச பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் அருள் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    இதில் நீதிமன்ற வழக்குகள் மற்றும் நடைமுறைகளை எதிர்கொள்ளுவது எப்படி? தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் இலவசமாகவும், விரைவாகவும் பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி? அடிப்படை பிரச்சினை களுக்கு புகார் அளிப்பது எப்படி? சமூக வலைதளங்களை பயன்படுத்தி புகார் அளிப்பது எப்படி? போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கங்காதுரை, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், கீழையூர் ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், வேதாரண்யம் பேரூராட்சி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாரத்தான் போட்டி பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.
    • அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    விழுப்புரம், மே.2-

    விவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மஞ்சப்ைப அவசியம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவி லான மினி மாரத்தான் போட்டி விழுப்புரத்தில் நடை பெற்றது. இப்போட்டி யை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள், பள்ளி- கல்லூரி மாண வர்கள், பள்ளி- கல்லூரி மாணவிகள், பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் வளாகத்தில் இருந்து தொடங்கி திருச்சி நெடுஞ்சாலை, நான்கு முனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாக பின்புறம் உள்ள சாலை வழி யாக மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் முடி வடைந்தது. இப்போட்டி யில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், திருநங்கை கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓடி இலக்கை அடைந்தவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ஆயிரம் மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது. இதனை அமைச் சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கி னார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்பழனி, டாக்டர் பொன்.கவுதமசிகா மணி எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சு மணன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மென்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    • கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மென்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், சேதுராமன், விஜயகுமார், ராஜ்குமார் தமிழ்நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி முன்னிலை வைத்தனர். ஆசிரியர் இன்பாலன் வரவேற்றார்.

    மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் உமா மகேஸ்வரன் மாணவர்களுக்கு தன்னை அறிதல், இலக்கினை நிர்ணயித்தல், பொறுப்புணர்வுகளை நினைத்து செயல்படுதல், நினைவாற்றல் தேர்வினை எதிர்கொள்ளும் வழிமுறைகள், படிப்பதற்கான வழிமுறைகள், படித்தவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், தேர்வினை எழுதும் போது செய்ய வேண்டியவை போன்றவை குறித்து பயிற்சி அளித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

    • அரசர் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
    • தொல்காப்பியப் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கப்பட்டன.

    திருவையாறு:

    திருவையாறு அரசர்க் கல்லூரியில் தொல்காப்பியத் திருவிழா கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    தஞ்சாவூர் நாகம்மாள் ஆறுமுகம் கல்விக் குழுமமும், திருவையாறு அரசர் கல்லூரியும் இணைந்து நடத்திய தொல்காப்பிய விழாவில் தொல்காப்பியப்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் தஞ்சாவூர் நாகம்மாள் ஆறுமுகம் கல்விக் குழுமம் நிர்வாகி மல்லிகா மகாலிங்கம் மற்றும் முனைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அம்மன்பேட்டை குப்பு. வீரமணி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

    முன்னாள் அரசர் கல்லூரி பேராசிரியர் முனைவர் திருஞானசம்மந்தம் வாழ்த்துரை நல்கினார்.

    விழா நிறைவில் திருவையாறு அரசர்க்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ரஜினி தேவி நன்றி தெரிவித்தார்.

    • 1000, 700, 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • பெங்களூர், கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் டெல்டா ஓபன் ரேஸ் பந்தயபுறா போட்டியில் வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பண்டாரவாடையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சென்னை கிளப் தலைவர் ஏ.ஆர்.தன்சிங் தலைமை வகித்தார். அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலாளர் துளசி ஐயா, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவர் அணி பொறுப்பாளர் முகமது மகரூப், மாவட்ட கவுன்சிலர் ராயல் அலி மற்றும் புறா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் 2019 முதல் 2022 வரையிலான பந்தய புறா போட்டிகளில் 1000, 700, 500 கிலோ மீட்டர் தூரம் என அதிக தூரம் வரை பறந்து முதல், இரண்டாவது மற்றும் மூன்றாம் இடம் பெற்று, வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பந்தய புறா வளர்ப்போர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சென்றனர்.

    ஏற்பாடுகளை பாபநாசம் பந்தய புறா வளர்ப்போர் சங்க டெல்டா கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • மூவலூர் ராமாமிர்த அம்மையார் என்ற திட்டத்தை அரசு தொடங்கியது.
    • சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 303 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    பெண் கல்வியை ஊக்கப்படுத்த தமிழக அரசு கல்லூரியில் பயலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க மூவலூர் ராமாமிர்த அம்மையார் என்ற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 303 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் 100 மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு சமூகநலத்துறை அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீபா, மகாலட்சுமி ஆகியோரின் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    ×