என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chain theft"
- 2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந் திரன் மனைவி சுமதி (வயது 55). இவர் நேற்று ஆம்பூர் இந்திரா நகர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் தாங்கள் போலீஸ் எனக்கூறி சுமதியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தாங்கள் அணிந்திருக்கும் செயினை கழற்றிபையில் வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக செல்லுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி சுமதி தான் அணிந்திருந்த செயினை கழற்றி பைக்குள் வைத்துள்ளார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பி, அவருக்கு தெரியாமல் செயினை எடுத்து சென் றுள்ளனர். சுமதி சிறிது தூரம் சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த 5 பவுன் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
- புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் :
தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட குடியிருப்பில் வசித்து வருபவா் ஜெயசுதா (வயது 38). இவா் கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், ஜெயசுதா வீட்டின் அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் ஜெயசுதா அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பயின்று வருகிறார்.
- இவர் தளவாய்பட்டினத்தில் இருந்து தாராபுரத்திற்கு தனியார் பேருந்தில் சென்றார்.
தாராபுரம் :
தாராபுரம் தளவாய்பட்டினம் கிராமம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (வயது 22). சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பயின்று வருகிறார். சம்பவத்தன்று இவர் தளவாய்பட்டினத்தில் இருந்து தாராபுரத்திற்கு தனியார் பேருந்தில் சென்றார்.தாராபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இது குறித்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கீர்த்தனா கூறினார். தனியார் பேருந்தில் உள்ள சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அடையாளம் தெரியாத சுடிதார் அணிந்த 2 பெண்கள் மாணவி கீர்த்தனாவை திசை திருப்பி திருடியது சிசிடிவி. கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது . தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிய பெண்களை தேடி வருகின்றனர்.
- 9 பேர் கும்பலை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.
- சம்பவத்தன்று இரவு, தாஜூதீன் விடுதியின் வரவேற்பறையில் இருந்தார்.
கோவை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்தவர் தாஜூதீன் (வயது 33).
இவர் கடந்த 9 மாதங்களாக கோவை கணபதி அலமேலு மங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து சிவில் என்ஜினியரிங் வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அலுவலகமும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர் தங்கி இருக்கும் தனியார் விடுதியை மெர்வின் மற்றும் பரத் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர்.
இவர்களின் நண்பர் ஹரி என்பவர் அடிக்கடி விடுதிக்கு வந்து சென்றார். இதையறிந்த விடுதியின் உரிமையாளரான தண்டபாணி 3 பேரையும் அழைத்து தாஜூதினுக்கு ஆதரவாக பேசி, ஹரியை இனிமேல் இங்கு வரக்கூடாது என விரட்டி விட்டார்.
இதனால் அவரது நண்பர்கள் பரத், மெர்வின் ஆகியோர் கோபத்துடன் வெளியில் சென்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு, தாஜூதீன் விடுதியின் வரவேற்பறையில் இருந்தார்.
அப்போது அங்கு பரத், மெர்வின் உள்பட 9 பேர் கும்பல் காரில் வந்து இறங்கினர். அவர்கள் தாஜூதீனிடம் சென்று உன்னிடம் பேச வேண்டும் என அவரது அறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் அறையில் இருந்த ஸ்பீரேவை எடுத்து அடித்து, தீ பற்ற வைத்தனர். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் அறையில் இருந்த ரூ.5 லட்சம், வைரம், 3 பவுன் தங்க நகை, மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை எடுத்தனர்.
மேலும் தாஜூதீனை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
தொடர்ந்து அவரது தந்தைக்கு போன் செய்து, உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். மகன் உயிருடன் வேண்டும் என்றால், எங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர்.
இதனை தொடர்ந்து அவர் பணத்தை கொடுத்து மகனை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே தாஜூதீன் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பரத், மெர்வின் உள்பட 9 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்த தலைமறைவான 9 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- சரஸ்வதி நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.
- திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி பகுதியை அடுத்த பாப்பான்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 59). இவர் நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.
திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுபோன செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
- தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
- செயின், கம்மல், மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
வடவள்ளி:
வடவள்ளி அருகே உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் சிவசந்திரன் (வயது 38). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டில் குளத்துபாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி (46) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி அவர் திடீரென மாயமானார்.
இதனையடுத்து சிவசந்திரன் வீட்டில் உள்ள பீரோவை பார்த்த போது அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
இதனை கலைச் செல்வி திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சிவசந்திரன் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேராசிரியர் வீட்டில் நகைகளை திருடிய கலைச்செல்வியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி பழனியப்பா தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவர், தேனியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி அகிலா (வயது 22). அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி செல்வக்குமாரி (36). இவர், தனது வீட்டில் அழகு நிலையம் நடத்தி வந்தார்.
கடந்த 3-ந்தேதி இந்த அழகு நிலையத்துக்கு அகிலா சென்றார். அங்கு அவர் முகப்பொலிவு செய்தார். அப்போது அவர், தனது 5 பவுன் தங்க சங்கிலியை அங்கு கழற்றி வைத்தார். முகப்பொலிவு செய்த பிறகு பார்த்தபோது, தான் வைத்திருந்த இடத்தில் தங்க சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அகிலா புகார் செய்தார். அதன்பேரில் செல்வக்குமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்க சங்கிலியை அவர் தான் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரியை கைது செய்தார். அவரிடம் இருந்து 5 பவுன் தங்கசங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி சத்யா (வயது 30). இவர் பண்ருட்டி அருகே சேந்தநாடு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சத்யா தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அவர் குடியிருப்பு - விசூர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
திடீரென அந்த மர்ம நபர்கள் சத்யாவை கீழே தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் ஆசிரியை காயமடைந்தார். காயமடைந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து முத்தாண்டி குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியையிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் லால்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலவாளாடி, வாளாடி, புறத்தாக்குடி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தனியாக நடந்து சென்ற பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக 2 போலீஸ் நிலையங்களிலும் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபரை பிடிக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் பிரிவு ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் திருச்சி அண்ணாசாலை கைலாஷ்நகர் 3-வது கிராசை சேர்ந்த சுப்பையா மகன் சுரேஷ்குமார்(வயது 34) என்பதும், புகைப்பட கலைஞரான அவர் சொந்தமாக கேமரா வைத்து திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து கொடுக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அந்த தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், ஆடம்பரமாக வாழ நினைத்த அவர் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக தனியாக சென்ற பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து சென்றதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதும், விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 30 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவரை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட புகைப்பட கலைஞரை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
பெரியகுளம்:
பெரியகுளம் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த குமார் மனைவி மணிமாலா(வயது41). வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டு கதவை தட்டினார். மணிமாலாவிடம் பேப்பர் வேண்டுமா எனக்கேட்டுள்ளார்.
வேண்டாம் எனக் கூறியதால் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதற்காக உள்ளே சென்ற மணிமாலாவை பின்தொடர்ந்த மர்மநபர் அவரது நகைகளை பறிக்க முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த மணிமாலா சங்கிலியை கையால் பிடித்துக்கொண்டு போராடினார். ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமாலாவின் கழுத்து, முகம், கைகளில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
அந்த வாலிபர் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். மணிமாலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தம்பாடியை அடுத்த கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராணி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். ராணி கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை கழட்டி மேசை மீது வைத்து விட்டு தூங்க சென்றார். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது மேசையின் மீது வைத்திருந்த 2பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர் யாரோ வீட்டுக்குள் புகுந்து மேசையின் மீதுவைத்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்