search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Checkpost"

    • கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    அதிரடிப்படை வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதேபோல கடந்த வாரமும் அதிரடிப்படை வீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சிலர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கேரள மாநில எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் அதனை ஒட்டிய நீலகிரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓவேலி, நாடுகாணி, சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவாடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களை தீவிர சோதனை நடத்தி அனுமதிக்கின்றனர்.

    கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை உஷார்படுத்தினார். பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    • சமூக விரோத செயல்கள் தடை இன்றி நடைபெற வாய்ப்புள்ளதாக இருந்தது.
    • புகாரின் பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    உடுமலை:

    உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் சாலையில் குதிரையாறு சோதனை சாவடி உள்ளது.

    இங்கு குமரலிங்கம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இந்த சோதனை சாவடியில் சமீப காலமாக போலீசார் யாரும் பணியில் இல்லை. இதனால் மணல் கடத்தல், அதிவேகமாக வாகனத்தில் செல்லுதல், மரங்களை வெட்டி கடத்துதல், பாதுகாப்பு பட்டியலில் உள்ள வனவிலங்களை வேட்டையாடுதல் போன்ற சமூக விரோத செயல்கள் தடை இன்றி நடைபெற வாய்ப்புள்ளதாக இருந்தது.

    இது குறித்து இந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் குமரலிங்கம் சோதனை சாவடியில் போலீசாரை கண்காணிப்பு பணிக்கு நியமித்து உள்ளனர்.

    • சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் தமிழகத்தின் உடுமலை பேட்டை வழியாக கேரளாவின் மறையூருக்கு ஒரு கார் வந்தது. சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கஞ்சா மற்றும் போதை பவுடர் இருந்தது. அதனை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரில் இருந்த தாம்சன் செபாஸ்டியான் (வயது 23) மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேர் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தேவிகுளம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். போதை பொருள் கடத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுபோல கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர். இவர்களில் ஒருவர் மாணவர் ஆவார். 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் எங்கிருந்து போதை பொருளை கடத்தி வந்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல கொச்சியை அடுத்த கலூர், பச்சலம், எமலக்கரை பகுதியில் போதை பொருள் விற்றதாக வடமாநில தொழிலாளி ஒருவரும் சிக்கினார். அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்தும் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் கொச்சி மற்றும் மறையூர் பகுதிகளில் போதை பொருள் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அரவேணு

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதன் அடிப்படையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, ஏட்டு சுமதி, முருகேசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அதிகளவில் இருந்தது.

    இதையடுத்து டிரைவர் ஜோசப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து அரிசிகளை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தப்பட்ட 2 டன் அரிசியை பறிமுதல் செய்து, ஊட்டியில் உள்ள அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்உத்தரவின் பேரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசியில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம் அவினாசி புது பஸ் நிலையம் அருகில் அனைப்புதூர், மங்கலம் ரோடு, தெக்கலூர், நரியம்பள்ளி ஆகிய இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்குமாறு சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அலுவல் நியமித்து அனைவரும் தொய்வின்றி பணி செய்ய தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் தணிக்கை செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்.

    • ஏற்காடு சோதனைச்சாவடி வன ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • ஏற்காடு அடிவார பகுதியில் பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் தனியார் எஸ்டேட்களில் இருந்து பல வகை மரங்களை வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தது. மலைப் பாதை வழியே மர லோடு ஏற்றி வரும் லாரிகளை சோதனையிட அடிவாரப்பகுதியில் வனத்து றையின் சோதனைச்சாவடி இருக்கிறது.

    இங்கு பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் ஏற்காடு அடிவார சோதனைசாவடியில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் புகழேந்தியை அஸ்தம்பட்டி சந்தன மர குடோனுக்கு அதிரடியாக இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். அேதபோல் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் அசோகனை ஏற்காடு சோதனைசாவடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (வயது 29) என்பவரை நிறுத்தி, மோட்டார்சைக்கிளை சோதனை செய்தார்.
    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகனிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அறிவழகன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கொண்ட லாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அறிவழகன். இவர் நேற்று கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் அருகே செக்போஸ்டில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (வயது 29) என்பவரை நிறுத்தி, மோட்டார்சைக்கிளை சோதனை செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த பழனிசாமி, பாப்பாரப்பட்டியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகனிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அறிவழகன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார், தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×