என் மலர்
நீங்கள் தேடியது "cheetah"
- மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
- கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை வலம்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மேங்கோ ரேஞ்ச் பகுதியில் குழந்தையை தாக்கி தேயிலை தோட்டத்திற்கு சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது.
பிறகு, படுகாயங்களுடன் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஏற்கனவே, 5 பேரை சிறுத்தை தாக்கிய நிலையில், தற்போது வடமாநில தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளது. இதனால், அங்கு பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை வலம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
- தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
- மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 1 மாதம் முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் வேட்டையாடி கொன்றது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்த சிறுத்தை கொன்று வந்தது. அதேபோல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்ற போது கூண்டுக்குள் சிக்கியது.
இந்த நிலையில் இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர்.
பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறை யினருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது. வனத்துறையினர் வந்து பார்த்த போது கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கூண்டுடன் சிக்கிய ஆண் சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
- வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது.
- பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பால்காரர் பைக்கில் வந்துகொண்டிருக்கும்போது சாலையை கடக்க வேகமாக ஓடிவந்த சிறுத்தை அவர்மீது மோதியதில் பால்காரர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பால் அனைத்தும் தரையில் கொட்டி வீணானது.
வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.
சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்த இருவர் சாலையில் காயமடைந்த கிடந்த பால்காரரை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- சீட்டா வகை சிறுத்தைகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூண்டில் அடைக்கப்படுகிறது.
தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து இன்று 8 சீட்டா வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு வரப்பட்டன.
இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் விடுவிக்க உள்ளார். இதற்காக அவர் இன்று மத்திய பிரதேசம் வருகிறார்.
இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், குனோ தேசிய பூங்காவில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தனிமையான குடில் போன்ற வீட்டில் சீட்டா வகை சிறுத்தைகள் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு, சீட்டா வகை சிறுத்தைகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூண்டில் அடைக்கப்படுகிறது.