என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child"

    • அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
    • தனது குழந்தைகளை காப்பாற்றிய தாயின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்திற்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிய தனது குழந்தைகளை மீட்க போராடிய ஒரு தாயின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    பெண் ஒருவர் பால்கனியில் நின்றுகொண்டு, தன உயிரை பற்றி கவலைப்படாமல் கீழே தரையில் இருந்தவர்களிடம் தனது 2 குழந்தைகளை கவனமாக ஒப்படைத்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, தனது குழந்தைகளின் உயிரை துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய தாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 

    • பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.

    அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

    இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

    மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சென்னையில் இருந்து, ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.
    • தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    தாராபுரம், எம்.எஸ்.பி., நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ஆர்த்தி இவர்களுக்கு, யாழினிஎன்ற ஒரு வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் இருந்து,ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அதிகாலை வந்தனர்.

    தொடர்ந்து, தாராபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் குழந்தைஉட்பட, 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையத்தை அடைந்த போது, வேகத்தடை இருப்பதுதெரியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஏற்றினார். அப்போது, வண்டியில் அமர்ந்திருந்த ஆர்த்தியின் கையில் இருந்த குழந்தை கை தவறி ரோட்டில் விழுந்து படுகாயமடைந்தது.

    இதையடுத்து தாராபுரம் அரசுமருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,பின், திருப்பூருக்கு கொண்டு செல்லும் போதுகுழந்தை பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் காங்கயத்தில் நடைபெற்றது.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இப்பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம கோவில்களில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி, மகளிா் திட்ட நிா்வாகிகள், காங்கயம் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிவிண்ணப்பிக்கலாம்.இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.18,536 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    இதில் விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி (பிசிஏ) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணியானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதனை அடிப்படையாக கொண்டு எந்தவிதமான அரசுப் பணியும் கோர இயலாது.

    ஆகவே, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபா்கள் கல்விச் சான்று நகல்கள், அனுபவச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு டிசம்பா் 10 ந்தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அம்மன் கோவில் தெருவில் பெண் குழந்தை திடீர் பலி.
    • இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 26). இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு வர்தினி (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அதை தொடர்ந்து குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலின் பேரில் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் குழந்தை எவ்வாறு இறந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
    • மருத்துவரின்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். (35.) விவசாயியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ரம்யா (26) என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    2-வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    நேற்று காலை 11 மணி அளவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், சேயையும் மருத்துவமனை செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக மயி லாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்க்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர் இன்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி இறந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியவாறு நள்ளிரவு வரை தலைமை மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையிலான போலீசார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி முன்னிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பிரசவம் நடந்த போது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஹரிணி அருவி தடாகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாள்
    • தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் துவாரம் இருந்ததால் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி பழைய குற்றால அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அருவி தடாகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஹரிணி என்ற 4 வயது சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர் பத்திரமாக மீட்டார்.

    இந்நிலையில் அருவிப் பகுதியில் இருந்து தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் துவாரம் இருந்ததால் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலை உடனடியாக அருவிக் கரையில் நேரில் பார்வையிட்டு தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் இருந்த துவாரத்தில் உடனடியாக இரவோடு இரவாக இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியில் ஊழியர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார்.

    துரிதமாக செயல்பட்டு தடுப்பு கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுத்த ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
    • 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது டி.வி. சாய்ந்து அந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.

    இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் குழந்தை மூளைச்சாவு அடைந்தது. அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது. கூலித் தொழிலாளர்களான அந்த குழந்தையின் பெற்றோரும் அதற்கு உடன்பட்டனர்.

    இதையடுத்து உடல் உறுப்புகளை ஆபரேசன் செய்து அகற்றுவது தொடர்பாகவும், தானம் தேவைப்படுபவர்கள் பற்றிய பட்டியலும் தயாரிக்கப் பட்டது.

    மிகவும் சிறிய வயது குழந்தையின் உறுப்புகள் என்பதால் பொருத்தும் தகுதி உடையவர்கள் கிடைப்பதற்கு சில மணி நேரங்கள் ஆனது.

    இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.

    அந்த 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

    • ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தையுடன் காதலரை பட்டதாரி பெண் கரம் பிடித்தார்
    • நர்மதாவை சந்துரு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து மீன்சுருட்டி அருகே உள்ள குட்டைக்கரை காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் சந்துரு (வயது24). டிப்ளமோ படித்த இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வில்வகுளம் ரெட்டித்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் பட்டதாரியான நர்மதா(21) என்பவரை கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து காதலரிடம் தன்னை திருமணம் செய்ய கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் நர்மதா அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரித்தனர்.

    விசாரணையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தது தெரிய வந்தது. பின்னர் இருதரப்பு பெற்றோரிடம் கூறி கோயிலில் வைத்து திருமணம் செய்து மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டுமென அனுப்பி வைத்தனர். இதையடுத்து நர்மதாவை சந்துரு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார். இதையடுத்து போலீசார் இருவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி காதல் கணவர் சந்துருவுடன் நர்மதாவை அனுப்பி வைத்தனர்.


    • குழந்தை பிறந்து சுமார் 10 நாட்களே இருக்கும் என்று கூறப்பட்டது.
    • குழந்தையை மீட்டுச் சென்று குழந்தைகள் நலக்குழு ஆலோசனைப்படி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு இரவு சுமார் 8.30 மணியளவில் அரசு பேருந்து ஒன்று வந்தது. பேருந்து நிலையத்தை அடைந்ததும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர்.

    இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பேருந்தை பிளாட்பாரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக சென்றனர். இதையடுத்து மீண்டும் பஸ்சை இயக்க அதில் ஏறியபோது பஸ்சுக்குள் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஆனால் பயணிகள் யாரும் இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் சென்று பார்த்தபோது பஸ்சின் பின்புற இருக்கையில் ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுற்று முற்றும் பார்த்தும், விசாரித்தும் யாரும் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி வரவில்லை.

    அந்த குழந்தை பிறந்து சுமார் 10 நாட்களே இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் குழந்தை கிடந்த இருக்கையின் அருகே ஒரு பையில் பால் பாட்டில், உடைகள் மற்றும் பேம்பர்ஸ் ஆகியவையும் இருந்தன.

    எனவே புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிதான் யாரோ குழந்தையை விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பேருந்து ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டு பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக அவர்களும் குழந்தை பசியில் இருக்கும் என்பதை அறிந்து பாட்டிலில் இருந்த பாலை கொடுத்தனர்.

    பின்னர் இதுபற்றி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆலோசகர் பிரியா ஆகியோர் வந்து குழந்தையை மீட்டுச் சென்று குழந்தைகள் நலக்குழு ஆலோசனைப்படி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

    அங்கு சிசு வார்டில் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்க்குபேட்டரில் வைத்து சிகிச்சையும் அளிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×