என் மலர்
நீங்கள் தேடியது "Christmas"
- அவினாசி சாலையில் அமைந்துள்ளது பரி.பவுலின் ஆலயம்.
- ஆலயம் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
பெருமாநல்லூர் :
திருப்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ளது பரி.பவுலின் ஆலயம். இந்த ஆலயம் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஆலயத்தின் செயலாளர் ஜெபரூபன் ஜான்சன் தலைமையில் வெள்ளை அடித்தல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
- புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
- கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு கிறிஸ்து மண்ணுலகில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் நீங்கியிருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இன்றும் 22 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக வீடுகள்தோறும் வர்ணஜாலங்கள் காட்டும் வண்ண, வண்ண ஸ்டார்களால் தோரணங்கள் அமைக்கும் பணிகளிலும், இயேசுவின் பிறப்பை விளக்கும் வகையிலான குடில்கள் அமைக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்கள், அமைப்புகள் சார்பில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று பஜனை பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பஜனை பாடல்களைப் பொறுத்தவரையில் சில பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றும், சில பகுதிகளில் வாகனங்களில் சென்றும் பாடி வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பல வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்டார் விற்பனை செய்யும் கடைகளில் ஸ்டார்கள் தோரணங்களாக தொங்க விடப்பட்டுள்ளன. இதேபோல் குடில்களில் வைக்கப்படும் சொரூபங்களும் பல வடிவங்களில் விற்பனைக்காக வைத்துள்ளனர். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது என்று கூறலாம்.
இன்னும் சில தினங்கள் கழித்து கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் வாங்குவதிலும், பேக்கரிகளில் கேக் மற்றும் இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுப்பதிலும் ஈடுபடுவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், அதைத்தொடர்ந்து வரக்கூடிய புத்தாண்டு பண்டிகையையும் வரவேற்க தயாராகி விட்டார்கள்.
- வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடி வருவது வழக்கம்.
- மின்னணு விளக்குகளால் அமைக்கப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் ஆகியவை பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
திருப்பூர் :
ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி இயேசு பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ்பண்டிகை கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ்பண்டிகை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடி வருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடமும் கிறிஸ்துமஸ்பண்டிகை கொண்டாடும் வகையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடிவருகின்றனர். தேவாலயங்களில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து திருப்பூர், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் மற்றும் குடில்கள் விற்பனை தொடங்கியுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய நட்சத்திரங்கள், மின்னணு விளக்குகளால் அமைக்கப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் ஆகியவை பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.
- அ.தி.மு.க. சிறுபான்மை, மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது.
- புரட்சி தலைவி அம்மா கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.
சென்னை:
சென்னை வானகரத்தில் வருகிற 19-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இதுபற்றி அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. சிறுபான்மை, மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. புரட்சி தலைவி அம்மா கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டும், அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடந்தது.
- இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் பள்ளி சிறுவர்களின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி குருசேகரத் தலைவர் மற்றும் சபைகுரு பால்தினகரன் தலைமையில் நடந்தது. ஞாயிறு பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பால்ராஜ் வரவேற்றார்.
பள்ளி சிறுவர்கள் கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்களை பாடி, குறு நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சி.எஸ்.ஐ. மதுரை-முகவை திருமண்டலத்தின் இளையோர் திருச்சபை இயக்குநர் கிதியோன் சாம் தேவ செய்தியளித்தார். இதில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். ஞாயிறு பள்ளி பொறுப்பாளர் நிர்மலா குலோத்துங்கன் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தில் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி நடந்தது. வடக்குதெரு, நாயுடு தெரு, நடுத்தெரு, திலகாபுரி தெரு, பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருச்சபை மக்களின் குடும்பங்களை சந்தித்து சபை குரு வாழ்த்து தெரிவித்தார். சபை குருவானர் அருள்தனராஜ் ஜெபித்து தொடங்கி வைத்தார்.
இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரம் வேதாகம தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சபை போதகர் பரிசு வழங்கினார். கிறிஸ்மஸ் கீத பவனி வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து குடும்ப கீத ஆராதனை, ஐக்கிய சங்கங்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
- இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. மேலும் வருகிற ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் வரவேற்க தயாராக உள்ளனர். இதையொட்டி பண்டிகை தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த தால், எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு முதல் மிகவும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர். அதேபோல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, ஸ்டார்கள் தொங்கவிட்டு, அதனை மின்விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதனைக் குறிக்கும் விதமாக வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிட்டுள்ளனர்.
சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்ஷன், 4 ரோடு, 5 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புத்தகக் கடைகள், அழகு சாதன கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ரூ.50 , ரூ.60 முதல் ரூ.2500 வரை கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் வடிவங்களுக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகின்றன, என்றார்.
- கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.
வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக திகழ்கிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவ பேராலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற பெருமை மிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி மாதா பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்படும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்விளக்கு அலங்காரம் செய்ய பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
- பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் :
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலும், ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடுவர்.பண்டிகையை முன்னிட்டு வீடுகள் மற்றும் கட்டடங்களில் ஏசுநாதரின் பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் தொங்க விடப்படும். மேலும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
இதற்கான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், மாட்டுத் தொழுவம், குடில்கள், குழந்தை ஏசு, தாய் மரியன்னை, கிறிஸ்துமஸ் மரத்துண்டு, பரிசு பொருட்கள் என வாங்கி வீடுகள், ஆலயங்களில் அலங்கார விளக்குகள் பொருத்தி அலங்கரித்து வழிபடுவர். இந்த பொருட்கள் விற்பனை திருப்பூர் நகரப் பகுதி கடைகளில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் முக வடிவிலான கவசம் மற்றும் உடைகள் விற்பனையும் காணப்படுகிறது. இவ்வகைப் பொருட்கள் 50 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. கிறிஸ்துமஸ் குடில்கள் செட் ஆகவும், அதில் அமையவுள்ள உருவங்கள் மற்றும் நட்சத்திரங்கள், தேவதைகள் தனித்தனியாகவும் விற்பனையாகிறது.
பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏராளமானோர் டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி தங்கள் வீடுகளின் முன்புறத்தில் தொங்க விட்டுள்ளனர்.
- கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.
- கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. விழாவை நடத்துகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா லயோலா கல்லூரியில் 20-ந்தேதி நடைபெறுகிறது.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், ஆயர் நீதிநாதன், பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர், பெர்னாண்டஸ் ரத்தினராஜ், டேவிட் பிரகாசம், முகமது இம்ரானுல்லாஹ் பாகவி, ஜோ அருண், வின்சென்ட் மார் பவுலோஸ், மரிய பிலோமினா வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மேற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, வில்சன் எம்.பி. மற்றும் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
இதில் திருச்சி கலைக் காவிரி நுண்கலை கல்லூரி மாணவியர் வரவேற்பு நடனம், போதகர் பால் தயாநிதி ஜெப வழிபாடு பெல்லா கிறிஸ்துமஸ் கேரல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. விழாவை நடத்துகிறார். ஹேமில்டன் வில்சன், நிக்சன், ஜான் பிரகாஷ், யேசுதாஸ் எடிசன் பெரேரா, பிரபு சாலமோன், ஜே.எம்.அந்தோணி, ஆன்டோ உள்ளிட்ட விழாக் குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- களக்காடு சி.எஸ். ஐ நியூ சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி சபை ஊழியர் சுஜின் தலைமையில் நடைபெற்றது.
- இதில் தன்ராஜ், கலைச்செல்வன், ராஜன், வில்சன், ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து பவனி சென்றனர்.
களக்காடு:
களக்காடு சி.எஸ். ஐ நியூ சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி சபை ஊழியர் சுஜின் தலைமையில் நடைபெற்றது. நகரின் முக்கிய பகுதிகளான கோவில்பத்து, களக்காடு பழைய பஸ் நிலையம், நான்குநேரி பிரதான சாலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடியவாறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சென்று வீடுகள் தோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கினர். இதில் தன்ராஜ், கலைச்செல்வன், ராஜன், வில்சன், ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து பவனி சென்றனர்.
- சென்னையில் ‘ஸ்டார்’, அலங்கார தோரணங்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
- ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னையில் ஸ்டார், அலங்கார பொருட்கள் விற்பனை தீவிரம் அடைந்து உள்ளது.
கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் 'ஸ்டார்', அலங்கார தோரணங்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னையில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில் அலங்காரங்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை விழாக்கோலம் பூண்டு களை கட்டி உள்ளது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டப்பட்டு உள்ளன. வருகிற 2023-புத்தாண்டு பிறக்கும் வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசலிலும் 'ஸ்டார்கள்' அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளில் வண்ண அலங்கார தோரணங்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அழகிய சீரியல் விளக்குகள் பொருத்தி அழகுபடுத்தி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி நண்பர்கள், உறவினர்கள், சிறுவர்- சிறுமிகளுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்.
சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி பீனிக்ஸ் மால், 'ஸ்பென்சர்' பிளாசா, 'எக்ஸ்பிரஸ் அவென்யூ' போரம் மால், "ஸ்கைவாக்" உள்ளிட்ட ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் சிகரம் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிகரம் இயக்குனர் சுரேஷ் குமார் வரவேற்றார். அருட்தந்தை அந்தோணி இருதயராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
இயேசுநாதர் இந்த மண்ணில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். மனிதர்களிடையே நற்பண்பு, அன்பு, சகிப்புத்தன்மை, மன்னிப்பு போன்றவற்றை போதித்தார். குறிப்பாக பிறரை நேசித்து வாழ கற்றுத் தந்தார். மக்களின் பாவங்களைப் போக்க தாமே துயரங்களை சுமந்தார். அவரது போதனைகளை உலகத்தின் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தேவாலயம் சார்பில் நடத்தப்படும் பள்ளி குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ.1 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை தனது சொந்த செலவில் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
இந்த விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, நிர்வாகிகள் பெனட் அந்தோணி ராஜ், கே.ஆர்.ராஜலிங்கம், கள்ளிக்குடி சுந்தரம், வடக்கு மாவட்ட பொருளாளர் இளையராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.