என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cigarettes"

    • புதுவை மிஷன் வீதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்கும் கடையில் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • எலக்ட்ரானிக் சிகரெட்டை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மிஷன் வீதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்கும் கடையில் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பெரியகடை போலீசார் சோதனையிட்டதில் மிஷன் வீதியில் 2 கடையில் விற்க ப்பட்டது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் ரெயின்போநகரை சேர்ந்த நித்துஷ்(38), புஸ்சி முல்லா வீதியை சேர்ந்த சையது முஸ்தபா(65) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிகரெட்டை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
    • முகாமில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பாகூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் தேவி, சுவாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மருத்துவர்கள் பேசுகையில், சிகரெட் உபயோகம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதுடன், இளைய சமுதாயத்திற்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினால் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். புகை பிடிப்பதை நிறுத்துவதை விட தடுப்பது எளிதானது.

    ஒவ்வொரு சிகரெட்டி லும் குறைந்தபட்சம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான உடல் நலத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய ரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது.

    ஒருவர் புகைப்பிடிப்பதால் அவருக்கு வரக்கூடிய பாதிப்புகளை விட அவருக்கு அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகம். ஏனென்றால் ஒவ்வொரு சிகரெட்டின் வாய்ப்பகுதியில் பில்டர் என்று சொல்லக்கூடிய அதாவது வடிகட்டி உள்ளது.

    எனவே புகை பிடிக்காத வர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, புகை பிடிப்பவர்களுக்கு பாதிப்பு குறைவு. வெளியில் உள்ள நெருப்பு பகுதியில் இருந்து வரக்கூடிய புகை அருகில் உள்ளவர்களுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வு கூறுகிறது என்றனர்.

    இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நமணசமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடி க்கப்பட்டது.

    • வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • மருந்து விலை குறையும்- மின்சார வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கிறது.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. விகிதங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மந்திரிகள் குழு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் பயன்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் உணவு பொருட்களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றிற்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    வரி குறைக்கப்படும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட சில பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதன்படி சில டிராக்டர்களின் விலை 5 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மருந்துகளுக்கான வரி 5 சதவீதம் வரை குறைய உள்ளது. அதே நேரம் மின் வாகனங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த வாகனங்களின் விலை உயரும்.

    தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உள்ளது. இது 12 சதவீதமாக குறையும் என தெரிகிறது. சிமென்ட் மீதான வரியில் மாற்றம் இருக்காது. அதே நேரம் அழகுசாதன பொருட்கள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி உயர உள்ளது.

    இதுதொடர்பாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து வரி விகிதங்களில் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது
    • தமிழ்நாட்டில் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 164 ஆக உள்ளது

    டெல்லியில் மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அரியானா, உத்தரப் பிரதேசம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.

    டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது. இதனால் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இவை மட்டுமின்றி சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில் காற்றின் தரம் தாறுமாறாக குறைந்து வருகிறது. இதற்கிடையே மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் உடல்ரீதியான பலவித நோய்களும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் சிகெரெட் புகைப்பதால் ஏற்படும் அபாயங்களான புற்று நோய் உள்ளிட்ட  தீங்குகள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் ஏற்படுகிறது என்ற ஒப்பீடு வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியாவிலேயே டெல்லி காற்றின் தரம் 978 என்ற மோசமான நிலையில் உள்ளது. டெல்லியில் இருப்பது ஒரு நாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று தெரியவந்துள்ளது. அரியானாவில் இருப்பது ஒரு நாளைக்கு 29 சிகெரெட்டுகளை சுவாசிப்பதற்கு சமமாகும்.

    தமிழ்நாட்டில் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 164 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இருப்பது ஒரு நாளைக்கு 2 சிகெரெட்டுகளை புகைப்பதால் ஏற்படும் தீங்குகளை விளைவிக்கும். இதேபோல், ஆந்திர தெலுங்கானாவில் தினம் 2 சிகெரெட்டுகள், கேரளா, கர்நாடகாவில் தினம் 1 சிகெரெட்டுகள் புகைப்பதற்கு ஈடாக காற்றின் தரம் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

    • பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல், புளி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி-குளத்தூர் கடற்கரை வழியாக பீடி இலை உள்ளிட்ட சில பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் நேற்று இரவு முதல் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை குளத்தூர் அருகே கல்லூரணி கிராம கடற்கரை பகுதியில் லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டை பீடி இலைகளும் (மொத்தம் 1200 கிலோ), இங்கிலாந்து நாட்டின் சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் லோடு ஏற்றி வந்த வாகனத்தில் இருந்த ஓட்டப்பிடாரம் மேலசுப்பிர மணியபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் (வயது 25), ஒசநூத்து சிவன்கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கைப்பற்றபட்ட சிகரெட் மற்றும் பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.

    மேலும் கடத்தலுக்கு உடந்தையாக அவர்களுடன் வந்து தப்பி ஓடிய தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.
    • பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.

    கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    பேரணியில் மாணவர்களுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவுஷாத், நாகூர் தர்கா மேனேஜி டிரஸ்டி காமில் சாஹிப், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், நாகை நகர்மன்ற உறுப்பினர் நத்தர், கௌத்தியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.

    • எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் இறக்குமதி சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 30 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
    • 4 கடைகளில் மட்டும் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமை–யில் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சேலம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், செவ்வாய்பேட்டை, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர், மேட்டூர் பகுதிகளில் உள்ள கடைகளில் சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் இறக்குமதி சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 30 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    அதில், 4 கடைகளில் மட்டும் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அதேபோல், பழைய இரும்பு வியாபாரம் மற்றும் பழைய பேப்பர் வியாபாரம் மேற்கொள்ளும் 32 கடைகளில் ஆய்வு செய்ததில், 12 கடைகளில் விதிமீறல்கள் காணப்–பட்டன. இதைத்தொடர்ந்து மொத்தம் 16 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

    கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும், போதை மருந்து உட்கொண்டாலும் அது பிறக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுடெல்லி:

    ஆசிய மக்கள் தொகையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 1.7 சதவீதம் குழந்தைகள் பிளவுபட்ட உதட்டுடன் பிறக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை இதுகுறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டுதோறும் 35 ஆயிரம் குழந்தைகள் பிளவுபட்ட உதடு மற்றும் உள்வாயின் மேற்புறம் அண்ணம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறப்பதாக உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஆய்வு குறித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவ நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் 3 கட்டமாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

    அதில் பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்கத்தில் சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், போதை மருந்து உட்கொள்ளுதல், மற்றவர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசித்தல் உள்ளிட்ட காரணங்களால் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சி பாதிக்கிறது. அதன்மூலம் உதடு பிளவுபட்ட மற்றும் வாயின் உள்புறத்தில் அண்ணம் சரிவர வளர்ச்சி இல்லாமை போன்ற குறைகள் ஏற்படுகின்றன.

    இதனால் குழந்தைகள் சரிவர உணவு சாப்பிட முடியாது, சுவாசிக்கவும் மிகவும் சிரமப்படுவர். அதன் காரணமாக பல நோய்கள் ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும், போதை மருந்து உட்கொண்டாலும் அது பிறக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்சி அருகே மது போதையில் சிகரெட் தீயினால் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முரு கேசன் (வயது 68). இவர் அதே பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மகன் சேகர். அனைவரும் ஒரே வீட் டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அனைவரும் தீபாவளி பண் டிகையை கொண்டாடினர். பின்னர் இரவில் அவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். அப்போது முரு கேசன் மது குடித்திருந்தார்.

    அளவுக்கு அதிகமான போதையில் வீட்டின் வெளியே கிடந்த கட்டிலில் படுத்தார். முன்னதாக புகைப்பிடித்த அவர் போதையில் சிகரெட்டை அணைக்காமல் தூங்கினார்.

    இதனால் சிகரெட்டின் தீ கட்டிலில் இருந்த நைலான் வயர் மீது பட்டு தீப்பிடித்தது. பின்னர் அந்த தீ முருகேசன் உடலிலும் பிடித்து எரிந்தது. மது போதையில் முருகேசன் இருந்ததால் தீயின் வெப்பம் அவருக்கு தெரிய வில்லை. இதனால் தீ தொடர்ந்து எரிந் தது.

    நள்ளிரவில் கட்டிலுடன் முருகேசன் தீப்பிடித்து எரிந் ததை பார்த்த அக்கம் பக்கத் தினர் விரைந்து வந்து பாதி உடல் எரிந்த நிலையில் முரு கேசனை மீட்டு சிகிச்சைக் காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் முரு கேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து மண்ணச்ச நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மது போதையில் சிகரெட் தீயினால் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    ×