என் மலர்
நீங்கள் தேடியது "Collector Survey"
- புத்தக திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
- ராமநாதபுரத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது.
இதில் 100 அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நாள் தோறும் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரங்கம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார முறையில் உணவகம், குடி நீர், கழிப்பறை, பார்க்கிங் வசதிகள், உள்ளே வெளியே செல்வதற்கு தனி வழிகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு உதவி செயற் பொறியாளர் குருதி வேல், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய குமார், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மானிய உதவியுடன் தொழில் நிறுவனங்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- பெண் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டுள்ள விசைத்தறிக் கூடத்தையும் பாா்வையிட்டாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி.) கீழ் 107 பேருக்கு ரூ.4.08 கோடி மானிய உதவியுடன் சுமாா் ரூ.12.30 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், புதிய தொழில் முனைவோா் தொழில் நிறுவன வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 31 பேருக்கு ரூ.10.53 கோடி மானிய உதவியுடன் ரூ.52.65 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் திருப்பூா் மாநகராட்சி மற்றும் பல்லடம் வட்டாரப் பகுதிகளில் ரூ.88.13 லட்சம் மானிய உதவியுடன் ரூ.4.57 கோடி திட்ட மதிப்பீட்டில் பி.எம்.இ.ஜி.பி., நீட்ஸ் திட்டங்களில் வங்கிக் கடன் பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.
இதில், பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் ரூ.6.25 லட்சம் மானிய நிதியுதவியுடன் ரூ.25 லட்சம் முதலீட்டில் வித்யாலயம் பகுதியில் தனிநபா் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தையும், நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.44.10 லட்சம் மானியத்துடன், ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் பல்லடம் வட்டத்தில் தனிநபா் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள பின்னலாடை நிறுவனத்தையும் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தாா். அதேபோல, தெற்குபாளையம் பிரிவில் நீட்ஸ் திட்டத்தின்கீழ் ரூ.37.78 லட்சம் மானியத்தில் ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் பெண் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டுள்ள விசைத்தறிக் கூடத்தையும் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின்போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் (தொழில்நுட்பம்) கிரீசன், உதவிப் பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊராட்சி மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி விழுப்பனூர் ஊராட்சி கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், பிள்ளை யார்நத்தம் ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு தொடர்பான பணியையும் ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வேளா ண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திருப்பாற்கடல் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2020-21-ன் கீழ், ரூ.107 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி உட்புறம் கான்கிரீட் அமைத்து குளத்தை சுற்றிலும் நடை பாதை மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதையும், மடவார் வளாகத்தில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில் நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
படிகாசுவைத்தான்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், விவசாயிகள் பயிற்சி மைய வளாகத்தில் 5 ஆயிரம் முசுக்கொட்டை மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும் கலெக்டர் ஜெய்சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார். ராஜபாளையம் அரசு மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகர்நல அலுவலர் கவிபிரியா, நகராட்சி மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, ராஜபாளையம் அரசு தலைமை மருத்துவர் மாரியப்பன், சந்திரா, நகராட்சி செயற்பொ றியாளர் தங்கபாண்டியன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.
- அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், வெண்ணத்தூர் ஊராட்சி ஒன்றியம், சம்பை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் மாணவர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வெளிக்கொணரும் வகையில் தற்போது 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, மஞ்சள், ஊதா, பச்சை என 4 வண்ணங்களில் 4 அணிகளாக பிரித்து மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்கும் வகையில் செயல்பட தொடங்கி உள்ளன. 4 அணிகளிலும் உள்ள மாணவ, மாணவர்களின் கல்வித்திறன், விளையாட்டு, பொது அறிவு குறித்தும் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேலும் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவான பயிற்சிகள் வழங்குவதே இந்த அணிகள் தொடங்கியதன் நோக்கமாகும். அந்த வகையில் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் உருவாக்கப்பட்டு ஆசிரியர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் நல்ல முறையில் திட்டத்தை பயன்படுத்தி திறனை மேம்படுத்தி தங்கள் சார்ந்த அணிக்கு முதலிடம் பெற்றுத் தரும் வகையில் திறமையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- தேவகோட்டை யூனியனில் ரூ.16.99 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
- இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அந்த ஊராட்சி ஒன்றி யங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் வகையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக் கப்பட்டு வரும் கோப்புகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவல கங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டி டங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை யூனியன் சார்பில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.16.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்தம் 496 வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மிளகாய் வத்தல் வணிக வளாகத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
- ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் எட்டிவயல் ஊராட்சியில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் ஒருங்கிணைந்த மிளகாய் வத்தல் வணிக வளாகத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 2 ஆயிரம் மெட்ரிக்டன் குளிர்பதன கிட்டங்கியில் விவசாயிகள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள்-உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள 47.80மெ.டன் (2369 மூடைகள்) அளவுள்ள மிளகாய் வத்தல், 12.3மெ.டன் (1315 பெட்டிகள்) அளவுள்ள புளி, .03மெ.டன் தட்டைப்பயறு விளைபொருட்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காதபட்சத்தில் மேற்கண்ட கிட்டங்கியில் வாடகை அடிப்படையில் இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும்போது நல்ல விலைக்கு விற்று பயனடையலாம் என தெரிவித்தார். ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
- கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மின் நகர் மற்றும் ஆஞ்சிநேயா நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அப்பகுதி மக்களிடம் பூங்காவை நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மொடச்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.173 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணி மற்றும் சக்தி மெயின் ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.699.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி அங்காடி கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். கோபிசெட்டி பாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய ஆஸ்பத்திரி சாலை பகுதி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.194.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையப் பணியினையும்,
தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நகர் பகுதியில் ரூ.30.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை மேம்பாட்டுப் பணியையும், கம்பர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணி மற்றும் சாலையின் தரத்தினையும் என மொத்தம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி நல்லகவுண்டன்பாளையம் இந்திரா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளு க்குளி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பணியினையும், அளுக்குளி கிராம சேவை மையத்தையும்,
பார்வையிட்டு மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பா டுகள் குறித்து கேட்டறிந்ததுடன் மகளிர் சுய உதவிக் குழு மூலம், சுழல் நிதி கடன் ரூ.50 ஆயிரம் பெற்று பாக்கு மட்டை தயாரிக்கும் குழுக்க ளின் பணியினையும் என பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ரூ.51.87 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலிங்கியம் ஊராட்சி மல்லிகை நகரில், கோபிசெட்டிபாளையம் வட்டார அளவிலான நர்சரியில் புங்கமரம், பூவரசு, வேப்பமரம், முருங்கை, பப்பாளி, பாதானி, சீதாமரம், மாதுளை, எலுமிச்சை, நாவல், கொய்யா உள்ளிட்ட செடிகள் பதியம் செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம மேல்மலையனூரில் அமை ந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 17-ந் தேதி ஆடி அமாவாசை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு துறையினரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதன்படி காவல்துறையினர் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். சுகாதார துறையினர் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி தெளிப்ப தோடு தெருக்களில் கொட்ட ப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அவ்வப் போது அகற்ற வேண்டும்.
மின்சார துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் கோவில் வளாகம் மற்றும் அக்னி குளம் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து கோவிலுக்கு அருகில் தற்காலி கமாக அமைக்கப்படும் பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சகாய், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம்சப்- கலெக்டர் கட்டா ரவி தேஜா, தாசில்தார் பாலசுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி,சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்த பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பேரோடு ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி, ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை புதுப்பிக்கும் பணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை முதல் குமரன் நகர் கடைசி வரை உள்ள சாலையை மெட்டல் போட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் கரட்டுப்பாளை யம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணி, மேட்டு நாசுவம்பாளையம் ஊரட்சி காலிங்கராயன் பாளையம் பகுதியில் 15-வது நிதிக் குழு மாணியத் திட்டத்தின் கீழ், ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலு வலக கட்டிடம், கட்டப்பட்டு வருகிறது.
லட்சுமி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசயி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.52 லட்சம் மதிப்பீ ட்டில் அமைக்க ப்பட்டுள்ள நாற்றுப்பண்ணை, தெற்கு தெருவில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகள் மற்றும் மண க்காட்டூர் பகுதியில் ரூ.16.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வளர்ச்சி திட்ட ப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பு றங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.
இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர்கள் (பயிற்சி) பொன்மணி, வினய்குமார் மீனா, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி மற்றும் அலு வலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
- கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம், மகப்பேறு பிரிவு, பிரசவ அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
மேலும் பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள், வளாகங்கள் மற்றும் கழிப்பறைகளை தூய்மை யாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை கலெக்டரின் நேரடி கவனத்திற்க்கு வாட்ஸ் அப் (82487 74852) எண் மூலம் அளிக்கபடுவதனை துறை சார்ந்த அலுவலர்களுக்கு பிரித்தனுப்பப்பட்டு தீர்வுகாணும் வகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினை பார்வையிட்டு, வளாக பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், இணை இயக்குனர் (சுகாதாரம்) சாரா செலின் பால், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக்பாஸ்கர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மாதத்திற்கு எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
- 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார்
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு அரசுத்துரைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேரு நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் தினமும் வருகிறார்கள்? மாதத்திற்கு எவ்வளவு நோயாளி கள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகள் தங்குவதற்காக 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார், அறை உபயோகத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும், தினசரி சுத்தமாக பராமரிக்கவேண்டும். போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்து கொள்ளவேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு மாதந்திர தடுப்பு ஊசியை அவசியம் போட வேண்டும். சுகாதாரநிலையம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றார்.
- மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.
தேனி:
தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அரண்ம னைபுதூர் பகுதியில், ரூ.301.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணி களையும், 15-வது நிதிக்குழு மானியம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளையும்,
கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளையும், ரூ.3.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை பணிகளையும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர்கள் கழிப்பறை கட்டிடத்தினை யும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆசிரியர்கள் கழிப்பறை கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வின்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.