என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "comfort"
- தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.
- சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.
கும்பகோணம்:
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கொரநாட்டுக் கருப்பூர் ஊராட்சி, கீழத் தெருவில் வசித்து வரும் கவிதா சேகர் மற்றும் ஞானமணி, அருள்தாஸ் ஆகியோரது குடிசை வீடுகள் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு, மிகவும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும் அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்தார்.
நிகழ்வில், கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, துணைத் தலைவர் சரவணன், மாவட்ட திமுக பிரதிநிதி உதயம் கோவிந்த், ஒன்றிய அவைத்தலைவர் அபிராமிசுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பாஸ்கர், உலகநாதன், கருணாகரன், பழனிசாமி, சுரேஷ், பாலையா, ரமேஷ் உள்ளனர்.
- மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த ஏழுமலை வீடும் தீப்பிடித்து எரிந்தது.
- நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை,மண் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 48) கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த ஏழுமலை வீடும் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து தண்ணீரை ஊற்றி பொதுமக்கள் தீயை அனணத்தனர். இதில் கோவிந்தனின் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. ஏழுமலை வீடு பகுதி சேதம் மட்டும் அடைந்தது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தன் மற்றும் ஏழுமலை குடும்பத்தினரை சந்தித்து சொந்த பணம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் வீடு முழுவதும் சேதம் அடைந்த கோவிந்தனுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியாக அரிசி, வேட்டி, சேலை,மண் எண்ணெய் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கினர். இதேபோல் வீடு பகுதி சேதம் அடைந்த ஏழுமலைக்கு அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணெய் ரூ.2 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சேதமதிப்பு1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என வும் கூறப்படுகிறது.
- மின்சாரம் தாக்கியதில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார்.
- அவர்களது குடும்பத்தினரிடம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கிராமத்தில் கடந்த 7-ம் தேதி இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி நிகழ்ச்சியில் பரமக்குடி சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன்கள் கோகுல், ராகுல் (10) கபி லேஷ் (7) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய தில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதில் படுகாயம் அடைந்த கோகுல், ராகுலை மதுரை தனியார் மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களை அமைச்சர் ராஜகண்ண ப்பன் சார்பில் அவரது மகன் மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் இறந்த கபிலேஷ் குடும் பத்தினிரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கோகுல், ராகுலை பார்த்து விட்டு அவர்களது குடும்பத்தினரி டம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.
இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (51). விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெற்று வரும் பழனிசாமி உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
- மருத்துவமனையில் மாணவர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல் கூறினார்.
- மருத்துவ அதிகாரியிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. மாண வர்களுக்கு தனிக்கவனம் செலுத்துமாறு கூறி உள்ளோம்.
மதுரை
திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர்க ளுக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பிஸ்கட், ரொட்டி, பழங்கள், நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார். பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத் துக்குள் உள்ள பூவரசம் மரத்தின் பழக் கொட்டை களை சாப்பிட்டனர்.
பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்ற அவர்கள் அங்கு மயக்கம் அடைய தொடங்கினர். உடனடியாக பெற்றோர்கள் அவர்களை திருமங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். தரணிதரன், பாலாஜி, கோகுல பிரசாத் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாண வர்கள் மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.
இவர்களில் பாலாஜி, கோகுலபிரசாத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ அதி காரியிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. மாண வர்களுக்கு தனிக்கவனம் செலுத்துமாறு கூறி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லிக்குப்பம் அருகே மேல் பட்டாம் பாக்கத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர்.
- எம்.சி.சம்பத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அருகே மேல் பட்டாம் பாக்கத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 91 பேர் காயம் அடைந்து கடலூர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் நேரில் சந்தித்து பழங்கள், பிஸ்கட், பிரட் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். அப்போது மாவட்ட அவைத் தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் கந்தன், வெங்கட்ராமன், இலக்கிய அணி ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- கப்பலூர் தீ விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்களை சந்தித்து டி.ஜி.பி. ஆறுதல் தெரிவித்தார்.
- 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டம் கப்ப லுார் தொழிற் பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு கம்பெனியில் கடந்த 15-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம், மதுரை, தல்லா குளம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய தீயணைப்பு நிலைய ஊர்திகள் மூலம் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
தீயணைக்கும் பணியின் போது ஆலையில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு நிலைய அலு வலர் பாலமுருகன், சிறப்பு நிலைய அலுவலர் பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கார்த்திக், கல்யாண குமார் ஆகியோர் தீ காயம் அடைந்தனர். 4 பேரும் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மற்றும் அலுவலர்களை தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் வீரர்களின் குடும்பத்தி னரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து டி.ஜி.பி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தீயணைப்பு வீரர்களுக்கு ரூ. 3லட்சத்து 50ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்க ளுக்கு, தீயணைப்பு நிலையங்க ளுக்கு அதிநவீன உபகரண ங்கள் வாங்க திட்டமிட ப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். தீபாவளி பண்டி கைக்கு பொதுமக்கள் வணிக நிறுவனங்களில் கூடுவதால் தீயணைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
- பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
குடிமங்கலம்:
உடுமலையில் இருந்து தடம் எண் 22 டவுன் பஸ் நேற்று மாலை 4.30 மணிக்கு ஆமந்தகடவு அம்மா பட்டிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் சதீஷ்குமார் (வயது 45) என்பவர் ஓட்டினார்.
அந்த பஸ் குடிமங்கலம் அருகே சனுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக பஸ்வை டிரைவர் திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்பாராத விதமாக உப்பாறு ஓடையில் கவிழ்ந்தது. பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சின் ஒரு பக்கம் ஜன்னல் பகுதி தரையில் சிக்கிக்கொண்டது. இதனால் பஸ்சில் சிக்கிய மாணவ-மாணவிகளும், பயணிகளும் அபயக்குரல் எழுப்பினர். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று காயம் அடைந்த தேவிகா (வயது 55), விந்தியா (21), சரஸ்வதி (53), முத்தம்மாள் (65), மகேஸ்வரி (52), வாசுகி (17), அபிநயா (16), சஞ்சய் (16), தனலட்சுமி (42), கலைச்செல்வி (16), பிரியங்கா (16), வசுந்தரா (16), வித்யா விகாசினி (15) உள்பட 41 பயணிகளை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம் (வயது45) மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மட்டும் 25 மாணவ-மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று காலை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
- தலா ரூ.1 லட்சம் என மூன்று குடும்பத்திற்கு 3 லட்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு ரூ.35 ஆயிரமும் வழங்கினார்.
கும்பகோணம்:
அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள ப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். பாதிக்க ப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி தலைமை அரசு கொறடா கோவி.செழியன் தனது சொந்த நிதியிலிருந்து தலா குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் என மூன்று குடும்பத்திற்கு 3 லட்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கினார்.
இதில் எம்.பி.க்கள் கல்யா ணசுந்தரம், ராமலிங்கம், திருப்பனந்தாள்ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர்அண்ணா துரை, அவைத் தலைவர் கலியமூர்த்தி, மிசாமனோகர், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் பாலகுரு, இளவரசி, இன்பத்தமிழன், மாவட்ட பிரதிநிதி கஜேந்திரன், ஒன்றிய துணைச் செய லாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொ ண்டனர்.
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.
கல்லணை கால்வாய் சீரமைப்பு திட்டத்தை இப்பகுதிக்கு சுமார் ரூ.450 கோடி செலவில் பழனிமாணிக்கம் நிறைவேற்றியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தை மோடி பார்வையிடவில்லை. ஆறுதல் கூட தெரிவிக்க வில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய எந்த நிவாரண உதவியும் முறையாக வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்க எடப்பாடி அரசு லஞ்சம் கேட்டதால் வேறு மாநிலங்களுக்கு அவை சென்றுவிட்டன. பல பணக்காரர்கள் வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்து மோசடி செய்துவிட்டு பிரதமர் மோடியின் தயவால் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
எனவே மக்களுக்கு விரோதமான மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சியை அகற்ற நமது தஞ்சை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன், திருவோணம் ஒன்றிய செயலாளர் மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் காந்தி, செல்வராஜ், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். #vaiko #pmmodi
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். வேரோடு அழிக்கப்படவேண்டும். சிவச்சந்திரன் தனது மகனை ஐ.பி.எஸ். ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மகனை இழந்த சிவச்சந்திரனின் பெற்றோர் இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறிய போதும் நாட்டுக்காக செல்கிறேன் என கூறியுள்ளார்.
எனவே சிவச்சந்திரனின் மனைவி காந்திமதிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்ல அரசு வேலையை வழங்க வேண்டும். மேலும் சிவச்சந்திரனுக்கு சிலை அமைத்து நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வைகோ மலரஞ்சலி செலுத்தினார். இதேபோல் திரைப்பட நடிகர் தாமுவும் சிவச்சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்