என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Competition"

    • தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது
    • அரசு பள்ளி 10ம் வகுப்பு படித்து வருகிறார்

    கரூர்,

    கரூர் மாவட்ட அளவிலான தடகள் போட்டியில் சிறப்பிடம் பெற்ற, அரசு பள்ளி மாணவரை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    கரூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் விஷ்ணு, உயரம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றார். மாணவர் விஷ்ணுவை, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ரூபா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் 'ஆகியோர் பாராட்டினர்.

    • வள்ளலார் முப்பெரும் விழா போட்டிகள் நடந்தது
    • 6-ந் தேதி பரிசளிப்பு விழா

    அரியலூர்:

    வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 26 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வரும் 6 ஆம் தேதி ரிதன்யா திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் உதவி ஆணையர் என்.நாகராஜ், கோயில் செயல் அலுவலர் எஸ்.சரவணன் மற்றும் வடலூர் வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கரூர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது
    • பள்ளிக்கல்வித்துறை சார்பில்

    கரூர்:

    தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள அமுதசுரபி தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கரூர் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது, போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்,

    60 கிலோ எடை பிரிவில் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் செயிண்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆதித்யா மாவட்டத்தில் அளவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர் 60 கிலோ எடை பிரிவில் மாவட்ட அளவில் திலீப் முதலிடம் பெற்றுள்ளார்,

    17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் மாவட்ட அளவில் ஸ்ரீ கிருஷ்ணா முதலிடம் பெற்றுள்ளார். 14 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் கனிஷ்கா மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர்கள் அடுத்த மாதம் மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இவர்களை செயிண்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் கிரேஸி, விளையாட்டு ஆசிரியர் பூமொழி சிலம்பரசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று காலை சேலம் காந்தி ஸ்டேடியத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    இதை துணை கமிஷனர்கள் ராதா–கிருஷ்ணன், மாடசாமி, லாவண்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மினிமாரத்தான் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து 4 ரோடு, புதிய பஸ் நிலையம், ஏ.வி.ஆர் ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கலைப்பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது
    • மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

    திருச்சி

    தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான கலைப் போட்டிகள் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் உள்ள அரசு இசைப்பள்ளியில் நடந்தது.

    இதில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடந்தது. பரதநாட்டியத்தில் 22 பேரும், கிராமிய நடனத்தில் 11 பேரும், குரலிசையில் 36 பேரும், ஒவியப் போட்டியில் 64 பேரும் என மொத்தம் 133 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கலைப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடத்தில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 9-12, 13-16 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.

    போட்டிக்கான ஏற்பாட்டினை திருச்சி மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் (பொ) நீலமேகன், கலை பண்பாட்டுத்துறை ஊழியர்கள், சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி சீனிவாசநகர் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வரும் வகையில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பொதுபிரிவாக வெற்றி பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டு நிறைவடைந்தயொட்டி நூற்றாண்டு விழா சிறப்பு மினிமாரத்தான் போட்டி, பாளையங்கோட்டையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி சீனிவாசநகர் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வரும் வகையில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைக்கிறார்.

    போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பொதுபிரிவாக வெற்றி பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் 18 வயது நிறைந்த ஆண், பெண்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 98942 81771, 94886 72194 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • பொன்-புதுப்பட்டி அரசு பள்ளியில் கலை போட்டி நடைபெற்றது.
    • மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில்

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பாக தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா, வட்டார கல்வி மேற்பார்வையாளர் நல்லநாகு, பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவிகள் பங்கேற்று மாணவிகள் ஓவியம் வரைதல், களிமண் சிற்பம் செய்தல், வண்ணம் தீட்டுதல், காய்கறி,பழங்கள் மூலம் கலைப்பொருட்களான பொம்மைகள் வடிவமைத்து போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவிகளின் கலை படைப்புகளை ஆசிரியர்கள் பார்வையிட்டு தேர்வு செய்தனர்.

    • சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அன்னைசத்யா விளையாட்டு அரங்கில் இன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி களுக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இதனை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட செவிதிறன், பார்வையாற்றோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகிறது.

    இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாற்று திறனாளிகள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுவாமிநாதன் செய்திருந்தார்.

    • பள்ளிகளில் கலை திருவிழா போட்டிகள் நடந்து வருகிறது
    • ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட

    புதுக்கோட்டை:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆவுடையார்கோவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நிகழ்ச்சி இன்று முதல் 5 நாட்களுக்கு ெதாடர்ந்து நடைபெறுகிறது.

    இதில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் கவின் கலை, இசை(வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட 6 தலைப்புகளில் மொத்தம் 36 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 5 நாட்கள் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மாவட்ட அளவில் நடைபெறுகின்ற போட்டிகளிலும், அதனை தொடர்ந்து மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி, வட்டாரக்கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், மலர்விழி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரன்,உதயம் சரண், தலைமை ஆசிரியர்கள் ராமு, தாமரைச்செல்வன், பெரிய இருளப்பன், மனோகரன், நல்லமுத்து, அறிவழகன், துரைபிரபாகர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவ, மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சி ேபாட்டிகள் நடைபெற்றன.
    • உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மீமிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், வட்டார மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.விழாவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளோடு சக மாணவர்கள் இணைந்து நடனம், பாட்டு, கவிதைகள் வாசிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கான நடைபெற்ற ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிரப்புதல், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி, பந்து தூக்கி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுக்கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசீலன் கூறினார்.

    • ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான பள்ளியில் டென்னிஸ் போட்டி தொடங்கியது.
    • 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி- வல்லம் சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி தொடங்கியது.

    இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடக்க விழாவிற்கு ரம்யா சத்தியநாதன் கல்வி குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். ரம்யா சத்தியநாதன் கல்வி குழும செயலாளர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

    ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

    பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் விளையாட்டு போட்டி பணிகளை செய்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டாரம் அளவில் கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
    • கடந்த மாதம் 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளை மரவனேரி தனியார் பள்ளியில் இன்று தொடங்கியது.

    மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டாரம் அளவில் கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்களை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை, பட்டிமன்றம் உள்ளிட்ட பல போட்டிகள் பள்ளி அளவில் கடந்த மாதம் 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டன.

    தற்போது வட்டார அளவில் வெற்றி பெற்று முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று முதல் 10-ந்தேதி வரை 4 நாட்கள் புனிதபால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணக்காடு நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுமலர் துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் இக்கலைத் திருவிழாவில் 207 வகையான போட்டிகளில் 15,365 மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அவர்கள், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், சேலம் மாநகராட்சி 29-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா குமரேசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.         

    ×