search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaining"

    • சம்பவத்தன்று பூங்கொடியின் மகளைதிடீரென்று காணவில்லை.
    • சிலர் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிய வருகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம்.புதூைர சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி பூங்கொடி (வயது 34). இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் மகள் இருந்து வருகிறார். சம்பவத்தன்று பூங்கொடியின் மகளைதிடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் அவரது உறவினர்கள் தனது மகளை தேடிய போது அவரது தந்தை ஆரங்கி வீட்டில் மகள் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரில், எனது தந்தை அரங்கிடம் பணம் கொடுத்திருந்தேன். அந்த பணம் தொடர்பாக கேட்டபோது பணம் தரவில்லை. இந்த நிலையில் எங்களுக்கு தெரியாமல் எனது மகளை ஆரங்கி மற்றும் சிலர் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிய வருகிறது. சம்பவத்தன்று எனது மகளை காணவில்லை என்று தேடிய போது எனது தந்தை ஆரங்கி மற்றும் சகோதரர்கள் வீட்டில் கடத்தி வைத்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக எனது கணவர் பழனிவேல் கேட்டதற்கு அவரையும் என்னையும் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கம் படுத்தினர். இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். சம்பவத்தின் போது தாக்கியதில் பூங்கொடி அவரது கணவர் பழனிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ஆரங்கி, அவரது மகன்கள் பாண்டித்துரை, முருகவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்,:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி உருவாக்க பட வேண்டும். அமைக்கப்படாத நிறுவனங்களில் உடனடியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு, நிரந்தர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி டிரைவர், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    மோகனூர் அருகே உள்ள செவந்திப்பட்டி பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவர் நேற்று தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்த கிருஷ்ணன், திடீரென 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ம் ஆண்டு ராமனுஜம் வகையறாகளிடம் இருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ம் ஆண்டு நிலஅளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.

    எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால், நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும், சிவில் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

    நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை அரசு அப்பீல் செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்சினையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார். #tamilnews
    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்றதாக திருநங்கை மீது போலீசில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி , மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.

    சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கி விட்டார்.

    மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்தி மதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

    இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம் மாவை தேடி வருகிறார்கள். #tamilnews
    ராஜபாளையம் அருகே காதல் திருமணம் கசந்து அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுதால் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இதனால் விரக்தியடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீஸ் சரகத்துக்குட்பட்ட குடல்குடி நத்தத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (18)என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது. பின்னர் இருவரும் மதுரையில் குடியேறினர். இருவரது குடும்பத்தினரும் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

    திருமணம் செய்து சில நாட்களிலேயே காதல் கசந்து அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் விரக்தியுடனே இருந்து வந்தார். இந்த நிலையில் இருவரும் பிரிந்து அவர்களது வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காளீஸ்வரி குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவர் மீது சாத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் தினேசை அடிக்கடி அழைத்து விசாரணை நடத்தினர். மனைவி போலீசில் புகார் கொடுத்ததால் மேலும் விரக்தி அடைந்த தினேஷ் சம்பவத்தன்று ஊரின் அருகே உள்ள சிவலிங்காபுரம் குளக்கரை அய்யனார் கோவிலுக்கு சென்று வி‌ஷம் குடித்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்டது. மனைவி கொடுத்த புகாரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×