என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation"

    • சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதியில் ரோந்துபணி ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த சுரேந்திரன்(27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றிக் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது அரிசி ஏற்றுக் கொண்டிருந்த மினி வேன் 840 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனபால் (27 ) உரிமையாளர் சின்னதுரை (43) ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு வசம் ஒப்படைக்க உள்ளனர்.

    • ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நாமக்கல் ராமாவரம் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 49), அண்ணா நகர் காலனியை சேர்ந்த தமிழ்செல்வன் (41) ஆகியோரை கைது செய்தனர்.

    விசாரணையில் நாமக்கல், நல்லிபாளையம், ராமாவரம் புதூர் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வட மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பொம்மியம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இந்த மூட்டைகளை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகரத்தில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் பேரில் திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தீவிர சோதனை மேற்கொண்டதில் திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் நிலைய சரகத்தில் 68 மோட்டார் சைக்கிள்களும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய சரகத்தில் 30 மோட்டார்சைக்கிள்களும், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 60 மோட்டார்சைக்கிள்களும், தெற்கு காவல் நிலைய சரகத்தில் 294 மோட்டார்சைக்கிள்களும், மத்திய போலீஸ் நிலைய சரகத்தில் 12 மோட்டார் சைக்கிள்களும், நல்லூர் போலீஸ் நிலைய சரகத்தில் 37 மோட்டார்சைக்கிள்களும் வீரபாண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 57 மோட்டார்சைக்கிள்களும் என மொத்தம் 564 மோட்டார்சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    • புகையிலை பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்து செல்ல தயார்.
    • ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே தைக்கால் கிராமம் ஜாகிர்உசேன் தெருவை சேர்ந்தவர் முஹம்மதுயாசின் (வயது 44).

    இவர் தைக்காலில் உள்ள அவரின் வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான காரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்துகொண்டிருந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில், எஸ்.பி.யின் தனி பிரிவு படையினர் மற்றும் கொள்ளிடம் சிறப்பு பிரிவு போலீசார் திலகர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் விற்பனைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த முகமதுயாசினை கைது செய்து, காருக்குள் வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலைப் பொருட்களை பறிமுதல்செய்தனர்.

    • திருநாவலூர் அருகே மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவலர் மனோகரன் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கிழக்கு மருதூர் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்றபோது, கிழக்கு மருதுறையை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), ஜெகதீசன் (44) சோமாசிபாலயம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) ஆகிய 3 பேரும் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசாருக்கு அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
    • 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒருவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சனிக்கிழமை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு இடத்தில் பண்ணையில் இறால்களுக்கு தீனி போடுவதற்காக ரேஷன் அரிசி 1000 கிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பட்டுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    • மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • முத்துராஜ் (26) என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    உடுமலை:

    உடுமலை ெரயில்வே சாலை சந்திப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது தொடா்பாக உடுமலை ஜானிபேகம் காலனியில் வசித்து வரும் முத்துராஜ் (26) என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இவா் உடுமலை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்தவா்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    • 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல்.
    • போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரிடம், 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு சிவன்கோவில் தெருவை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 58) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் வைத்தியநாதனை கைது செய்தனர்.

    • மதுபான கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பல்.
    • சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர், திருவா ரூர் பெரம்பலூர் மாவட்ட ங்களில் தொடர்ந்து வழிப்பறி செய்தும், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடியும் அரசு மதுபான கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜெகபர்சித்திக் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் கவியரசன் போலீசார் ரமணி, விக்னேஷ் தினேஷ் இவர்களை கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருவாடுதுறை குமார், தஞ்சாவூர் மாதவனை ஆகியோர் ஆடுதுறை பஸ் நிறுத்ததில் இருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. மேலும் அவர்கள் பயன் படுத்திய மோட்டர் சைக்கிள் பிறமுதல் செய்யப்பட்டது.

    • தாரமங்கலம் அருகே புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்டிபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் லாரியில் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி பிரசாத் தலைமையிலான அதிகாரிகள் குழு தாரமங்கலம் அருகே புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் லாரியில் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது பற்றி டிரைவரிடம் விசாரிக்க முயன்ற போது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீசார் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வண்டியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×