என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coronavirus"

    • கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும்.
    • அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை.

    வாஷிங்டன் :

    கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசின் தாக்கம் அங்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் செலுத்தி கொண்டார்.

    அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த வைரஸ் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் புதிய மாறுபாடுகள் தோன்றியுள்ளன. உங்கள் பழைய தடுப்பூசி அல்லது உங்கள் முந்தைய கொரோனா தொற்று உங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்காது.

    அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை. வானிலை குளிர்ச்சியாகி வருகிறது. மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவார்கள்.

    எனவே கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும். நாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 400 பேர் கொரோனாவால் இறக்கின்றனர். இந்த குளிர்காலத்தில் அந்த எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது" என எச்சரித்தார்.

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,892 பேர் நலம் பெற்றுள்ளனர்.
    • இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 862, நேற்று 830 ஆக இருந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 46 ஆயிரத்து 880 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,892 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது 20,821 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் நேற்று மேகாலயா, மிசோரத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 4 பலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,28,987 ஆக உயர்ந்துள்ளது.

    • 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது.
    • ஒரு வேளை மேத்யூ வேட் கீப்பிங் பன்ன முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள்.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சூப்பர்12 சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமானது. தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது. அதனால் மேத்யூ வேட் கொரோனா தொற்றுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஒரு வேளை முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள். நேற்று சிறிது நேரம் மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

    இன்னொரு பக்கம் மழையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 691 பேர் குணமாகி உள்ளனர்.
    • தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,423 குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    கடந்த 22-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 2,112 ஆக இருந்தது. மறுநாள் 1,994, 24-ந்தேதி 1,334, 25-ந்தேதி 862, 26-ந்தேதி 830, நேற்று 1,112 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 49 ஆயிரத்து 88 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 691 பேர் குணமாகி உள்ளனர். இதில் நேற்று நலம் பெற்று வீடு திரும்பிய 3,619 பேர் அடங்குவார்கள்.

    தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருவோர் எண்ணிக்கை 1,423 குறைந்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி 19,398 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரத்தில் மட்டும் 3 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கை 9 சுகாதாரத்துறை கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,28,999 ஆக உயர்ந்துள்ளது.

    • ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது.
    • மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

    பீஜிங் :

    சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது. இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

    இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை அமலில் இருந்தன. இதன் காரணமாக அங்கு பொருளாதார சீர்குலைவு, உணவு தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

    இந்த நிலையில் ஷாங்காய் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட யாங்பூ மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து அந்த மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் பேரும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நபர்கள் முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட உகான் நகரில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து, அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,081 பேர் நலம் பெற்றுள்ளனர்.
    • இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,574 ஆக இருந்த நிலையில், இன்று 1,604 ஆக உயர்ந்துள்ளது.

    இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 266 ஆக உயர்ந்தது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,081 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது 18,317 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 485 குறைவு ஆகும்.

    கொரோனா பாதிப்பால் கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 2 பேர், மிசோரத்தில் ஒருவர் என 5 பேர் நேற்று இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,29,016 ஆக உயர்ந்துள்ளது.

    • ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள்.
    • தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து அந்தந்த மாகாண நிர்வாகங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

    இந்த நிலையில் செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்ல தொடங்கினர். அவர்கள் சாலையோரம், வயல்வெளிகள், மலைகளிலும் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தபடி மெதுவாக நடந்து செல்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லும் ஊழியர்களுக்கு உள்ளூர் மக்கள் இலவச விநியோக நிலையங்கள் அமைத்து உணவு வழங்குகிறார்கள்.

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,287 பேர் மீண்டுள்ளனர்.
    • இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 943 ஆக உயர்ந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 1,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,604ஆக இருந்தது. நேற்று 1,326 ஆக குறைந்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது.

    மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 54 ஆயிரத்து 638 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,287 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 943 ஆக உயர்ந்தது. தற்போது 17,618 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லி, அரியானா, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கோவாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் விடுபட்ட பலி எண்ணிக்கை 46-ஐ கணக்கில் சேர்த்தள்ளனர். இதேபோல கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் என மேலும் 53 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,29,077 ஆக உயர்ந்துள்ளது.

    • ஒமைக்ரான் தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்தது.
    • இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.

    சென்னை

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல மனித உயிர்களை பறித்தது. மக்களை கடும் அச்சத்திலும் ஆழ்த்தியது. இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்த தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்று டெல்டா, ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களாக உருமாறியது. ஒமைக்ரான் தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்தது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.

    தற்போது ஒமைக்ரான் பி.எப்.7 என்ற வைரசாக உருப்பெற்றிருப்பதாகவும், இந்த தொற்று வேகமாக பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்று நுழைந்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்று உருமாறி எந்த வைரஸ் வடிவில் வந்தாலும் அதனை கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி மாநில அரசுகளிடையே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இந்த கருவி ஒன்றிய அரசு சார்பில் 14 இடங்களில் இருக்கிறது.

    கொரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் இருந்தால் அவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரையில் ஒமைக்ரான் பி.எப்.7 தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    தமிழ்நாட்டில் அந்த தொற்று நுழையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா தொற்றால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 590 ஆக உயர்ந்தது.
    • தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 16,098 ஆக சரிந்துள்ளது

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1,046 ஆக இருந்தது. நேற்று 1,188 ஆக உயர்ந்த நிலையில் இன்று 1,321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரத்து 149 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 2, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என நேற்று 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 5-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,461 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,457 பேர் மீண்டுள்ளனர்.

    இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 590 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 16,098 ஆக சரிந்துள்ளது. இது நேற்றைவிட 145 குறைவாகும்.

    • கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர்.
    • மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 லட்சம் பேர் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்ததற்கு காரணம் அதில் குறைந்த கல்வி கட்டணம் மட்டுமின்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் முறை படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதும் முக்கிய காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். அதனால் பல பேர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினார்கள்.

    இப்போது நடுத்தர குடும்பத்தினரும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    மாநில அளவில் 37,636 அரசுப் பள்ளிகளில் 81 சதவீதம் கணினிகளை கொண்டிருந்தாலும் 79 சதவீத பள்ளிகளில்தான் அவை இயங்கும் நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

    • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,479 பேர் மீண்டுள்ளனர்.
    • கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 15 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நேற்று 1,082 ஆக இருந்தது. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,132 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 60 ஆயிரத்து 579 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரத்தில் 3, கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், டெல்லி, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என 9 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 5-ஐ கணக்கில் கொண்டு வந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,500 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,479 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 15 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14,839 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 361 குறைவு ஆகும்.

    ×