என் மலர்
நீங்கள் தேடியது "criminal"
- கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
- குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.
கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.
இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
- செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளர்.
சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் பிரதாப் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயம் அடைந்த காவலர் மற்றும் குற்றவாளி சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளனர்.
- வளர்ப்பு மகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
- குற்றவாளிக்கு 7.85 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் வளர்ப்பு மகளை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரும் அவரது வளர்ப்பு மகளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
தாய் வீட்டில் இல்லாத சமயத்தில் தந்தை தனது வளர்ப்பு மகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமி தனது நண்பரின் ஆலோசனையின் பேரில், இறுதியாக தனது தாயிடம் இதை கூறியதை அடுத்து குற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஷ்ரப் ஏஎம், போக்சோ, ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் குற்றவாளிக்கு மொத்தம் 141 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
முதலில் அவருக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சிறை தண்டனையான 40 ஆண்டுகள் அவர் சிறையில் இருப்பார். அதன்பின் தொடர்ந்து மீதியுள்ள காலமும் அவர் சிறை தண்டனை அனுபவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிக்கு 7.85 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
- குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலை டவுன், கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மண்டல துணை தாசில்தார் கையெழுத்தினை போலியாக போட்டு நத்தம் பட்டா மாறுதல் வழங்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தற்சார்ப்பு விவசாயிகள் இயக்க தலைவர் பொன்னையன், மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் , புரட்சிகர இளைஞர் முன்னணி, உட்பட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னிமலை கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் உயர் அதிகாரி–களின் கையெழுத்தை தானே போட்டு போலியாக பட்டா தயார் செய்து பொது–மக்களுக்கு வழங்கியுள்ளது ஆர்.டி.ஓ. விசாரணையில் உறுதிப்படுத்த–ப்ப–ட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
குடிமக்களுக்கு தேவையான வருவாய் துறை ஆவணங்களை வருவா–ய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால எல்லை–க்குள் வழங்கு–வதற்கான கடுமையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் போட்டு அதை கண்காணிக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.
- மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- நீதிமன்றத்தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமை யியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை உத்தரவுபடி தேசிய மக்கள் நீதிமன்றம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த நீதிமன்றத் தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.
உரிமையியல் வழக்குகள் வாடகை பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வழக்குகள் சமரசமாக பேசியும், குற்றவியல் வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு உள்பட வழக்குகளை உடனடியாக விசாரணை செய்தும் அபராத தொகை விதித் தும் மொத்தம் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில் உரிமையியல் வழக்கு மற்றும் குற்றவியல் வழக்குகளில் ரூ.21 லட்சத்து 13 ஆயிரத்து 241 பெறப்பட்டது.
கிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்களில் சுமார் 20 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது.
கடந்த சில ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களின் போதும் நிறைய கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட்டனர். இதையடுத்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் கர்நாடகா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2655 வேட்பாளர்களில் 883 பேர் தீவிர கிரிமினல் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், “கிரிமினல்களை போட்டியிட அனுமதிக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெறலாம்” என்றனர்.
இதற்கு மத்திய அரசு தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், “அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் சின்னத்தை மறுப்பது புதிய சட்ட சிக்கல்களை உருவாக்கும். மேலும் இது பற்றி பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் செய்ய முடியும். இதில் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை” என்றார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்க மறுத்தனர். கிரிமினல் குற்றவாளிகளால் அரசியலில் துர்நாற்றம் வீசுகிறது. அது சரி செய்யப்பட வேண்டும் என்றனர்.

நீதிபதிகளின் இந்த கருத்துக்கு மத்திய அரசு வக்கீல் வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். இது சட்டத்துக்கு எதிரானது என்றார். அவர் மேலும் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு இப்படியொரு உத்தரவை பிறப்பிப்பதால் அரசியல்வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வேண்டும் என்றே கிரிமினல் குற்ற வழக்குகளை தொடுப்பார்கள். இது அரசியலில் அபாயகரமானதாக மாறி விடும்” என்றார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. உரிய நடவடிக்கைகள் எடுத்தால்தான் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார்கள்.
நீதிபதி ரோகிண்டன் நாரிமன் கூறுகையில், “இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு முடிவு எடுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. எனவே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையில் கூடுதலாக ஒரு நிபந்தனையை சேர்க்க எங்களால் உத்தரவிட முடியும். அதன்படி ஒரு வேட்பாளர் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருப்பது தெரிய வந்தால், அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிசின்னம் கிடையாது என்று அறிவிக்கலாம்” என்றார்.
இந்த யோசனைக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. #Supremecourt #criminal #election