என் மலர்
நீங்கள் தேடியது "Cycle"
ஊட்டி,
கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவா் சுனில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கங்காதரன், மேலாண்மை குழுத் தலைவா் மஞ்சு, துணைத் தலைவா் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
- வெட்டன் விடுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
- எம்.எல்.ஏ. முத்துராஜா, மாணவர்களுக்கு வழங்கினார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வெட்டன் விடுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோ ட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 170 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவ ண்டியை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:- தமிழக முதல்வர் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்து வம் அளித்து மாணவ, மாணவியரின் நலனில் அக்கறை கொண்டு பல்வே று திட்டங்களை நடைமுறை ப்படுத்தி வருகிறார். அதனை நன்கு பயன்படு த்தி மாணவர்கள் தங்களு டைய கல்வித்தரத்தை உய ர்த்திக் கொள்ள வேண்டும். என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலை வரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான தவ.பாஞ்சாலன், அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் காசிநாதன், தலைமை ஆசிரியர் வின்செ ன்ட், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்கு மார், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ராம சரவணன், தியாக இளஞ்செ ழியன் மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவ மாணவியர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
- புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலகம்பட்டி, வி.புதூர், கட்டுகுடிப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி, கரிசல் பட்டி, முசுண்டப்பட்டி, புழுதிப்பட்டி மற்றும் கட்டுகுடிபட்டி ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 270 மாணவர்கள், 6ஆயிரத்து 323 மாணவிகள் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 593 பேருக்கு இந்த ஆண்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 அரசு பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 511 மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் நலம், சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், தமிழக அரசால் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகையும், புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சைக்கிளின் மீது ஏறி சிறிது தூரம் ஓட்டி செல்லும் காட்சிகளும், அதனை அங்கு இருப்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டும் காட்சிகளும் உள்ளது.
- பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கி உள்ளனர்.
பிரான்சை சேர்ந்த நிக்கோலஸ் பாரியோஸ் மற்றும் டேவிட் பெய்ரூ என்ற 2 வாலிபர்கள் உலகின் மிக உயரமான சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
'ஸ்டார்பைக்' என்ற புனைப்பெயர் கொண்ட அவர்களது சைக்கிள் 7.77 மீட்டர் (25 அடி, 5 அங்குலம்) உயரம் கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், பாரியோஸ், டேவிட் ஆகிய இருவரும் ஒரு சாலையில் தங்களது சைக்கிளை நவீன எந்திரங்கள் உதவியுடன் உயரமான சைக்கிளாக மாற்றும் காட்சிகள் உள்ளது.
பின்னர் அந்த சைக்கிளின் மீது ஏறி சிறிது தூரம் ஓட்டி செல்லும் காட்சிகளும், அதனை அங்கு இருப்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டும் காட்சிகளும் உள்ளது. இந்த சைக்கிள் அலாய் மற்றும் எக்கு மூலம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் இதனை உருவாக்கி உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்பு ஒரு மதுபான விடுதியில் மது அருந்தியபோது பாரியோஸ், டேவிட் ஆகியோர் இந்த சைக்கிள் உருவாக்கம் தொடர்பாக யோசனை தோன்றியதாகவும், அதன்படி சுமார் 3 மாதங்களாக இதற்கான பொருட்களை வாங்கி வடிவமைத்ததாகவும் கூறுகிறார்கள்.
- பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்தது.
- வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
14 ஆண்டுகளாக நெதர்லாந்து பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்ததும், புதிய பிரதமர் டிக் ஸ்கூஃப் இடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சைக்கிளில் புறப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து கிரண்பேடி தனது எக்ஸ் தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட்டே தனது வாரிசான டிக் ஸ்கூஃப்க்கு அதிகாரபூர்வமாக அதிகாரம் வழங்கும் விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் என்று கூறி மார்க் ரூட் பதிவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சைக்கிலில் மகிழ்ச்சியுடன் வெளியேறிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
- அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
- மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிய வீடியோவை ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "பிரதர்.. நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது?" என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பதிவை பகிர்ந்து அவரது கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "அன்புக்குரிய சகோதரரே.. எப்போது நேரம் கிடைக்கிறதோ, சென்னையை சைக்கிளில் சுற்றி அந்த தருணத்தை அனுபவிக்கலாம்.
ஏற்கனவே ஒரு ஸ்வீட் பாக்ஸ் நான் தர வேண்டிய பாக்கி உள்ளது. சைக்கிள் உலா முடிந்ததும், என் வீட்டில் தென்னிந்திய மதிய உணவை, ஸ்வீட் உடன் ருசிக்கலாம்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு இருந்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் முன்னிலை வகித்தார்.
தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி மற்றும் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் தலைவர் சரவணன் மூலிகை மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் பற்றி துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உரையாற்றினார். உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள், பசுமைஇலத்தூர் மற்றும் பசுமைவலசை ஆர்வலர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாசு இல்லாத வாகனத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பொருட்டு கழுநீர்குளம் கிராமத்தை சேர்ந்த சிறுமி அப்னதஸ்ஸின், சிறுவன் ரெஸ்மான்செய்ன் பேட்டரியால் இயங்கும் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சுற்றுச்சூழலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி இலத்தூர் லட்சுமிஅரிகரா உயர்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது.
- நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.
- ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி
திருவெண்காடுசுவேதாரணேஸ்வரர்அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.
சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், தொழிற்சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர் சி கே பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மூத்த ஆசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
- போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அலுவலர் கோகிலா முன்னிலை வகித்தார்.
இந்த சைக்கிள் போட்டி கள், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. ஆகிய பிரிவுகளில் நடந்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு - ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு - ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு பரிசு - ரூ.250/- காசோலையையும் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படுகின்றன.
- வீரகேரளம்புதூர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டயானா ஆனி ராஜம்மாள் தலைமை தாங்கினார்.
சுரண்டை:
வீரகேரளம்புதூர் அண்ணா ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டயானா ஆனி ராஜம்மாள் தலைமை தாங்கினார். ஊத்துமலை ஜமீன்தாரரும், ஒன்றிய கவுன்சிலருமான முரளி ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் டேவிட் லிவிங்ஸ்டன், கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் காவேரி, வீரகேரளம்புதூர் பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.
அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, தர்மராஜ், காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி தாயார் தோப்பு ராமர், அண்ணாமலை செட்டியார், நவநீதகிருஷ்ணன், தி.மு.க. கிளைச் செயலாளர் மணி, மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரஞ்சித் மற்றும் ஆசிரியர்கள் மாரியப்பன், டென்னிசன் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.