search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cylinder accident"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் கியாஸ் சிலிண்டர் கசிவு இருந்தது. இதனை அறியாத அவர் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இதில் வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்தது.

    கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றி தீக்காயமடைந்த பாபநாசத்தை மீட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டியில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பிடித்தது எரிந்தது. இதில் தாய், மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பஜாரில் 3 மாடி கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் 3 வீடுகள் என்ற முறையே மொத்தம் 9 வீடுகள் உள்ளன.

    தரை தளத்தில் உள்ள முதல் வீட்டில் பிரேம் குமார், அவரது மனைவி மணிமேகலை(30) மற்றும் அவரது மகன் வருண்(4) ஆகியோர் வசித்து வருகிறார்கள். பக்கத்தில் அருகருகே இருந்த 2 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததால் அவை பூட்டப்பட்டு கிடந்தன.

    இந்த நிலையில் நேற்று மாலை கும்மிடிப்பூண்டியில் மின் தடை ஏற்பட்டு மீண்டும் மாலை 6 மணியளவில் மின்சப்ளை வழங்கப்பட்டது.

    வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வருண் மீண்டும் மின்சப்ளை வந்ததால் வீட்டிற்கு சென்று தனது தாயை கூப்பிட்டு கதவை தட்டி உள்ளான். அப்போது வெளியே வந்த மணிமேகலை அருகே உள்ள வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர் தனது மகனுடன் அங்கிருந்து வெளியேறி சாலைக்கு வந்தார். மேலும் அந்த வளாகத்தில் இருந்த அனை வரையும் உஷார்படுத்தினார். அவர்கள் அருகே உள்ள மற்றொரு குடியிருப்பு வளாகத்திற்கு மேல் மாடி வழியே இடம் மாறி சென்றனர்.

    அதற்குள் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி பஜார் முழுவதும் மின் சப்ளை உடனடியாக துண்டிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் குறுகலான அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் பிடித்த தீயை அணைத்தனர்.

    சிறுவன் வருண் மின்சாரம் வந்ததுமே வீட்டிற்கு சென்றதால் வீட்டுக்குள் இருந்த அவனது தாய் மணிமேகலை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்சப்ளை வந்தவுடன் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

    சம்பவ இடத்தில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்போரூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன், மனைவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 72). இவரது மனைவி கஸ்தூரி பாய் (65). இவர்களுடைய ஒரே மகள் திருமணமாகி கணவருடன் விருதுநகரில் வசித்து வருகிறார்.

    ஆனந்தராஜும், அவரது மனைவியும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பெட்டிக் கடை நடத்தி வந்தனர்.

    நேற்று இரவு கடையை மூடி விட்டு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் தீப்பிடித்தது.

    மேலும் கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆனந்தராஜ், அவரது மனைவி கஸ்தூரி பாய் ஆகியோர் உடல் துண்டாகியும், கருகியும் பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் மறைமலைநகர், சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் குடிசை முழுவதும் இடிந்து தரை மட்டமானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. மின் கசிவினால் ஏற்பட்ட தீயில் கியாஸ் சிலிண்டர் வெடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    2 பேரின் உடலையும் காயார் போலீஸ் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீக்காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சிட்லபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி செண்பகவள்ளி(வயது 47). இவர் கடந்த 1-ந் தேதி மாலையில் வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடிக்க தொடங்கியது. இதைஅறிந்ததும் செண்பக வள்ளி அலறிக் கொண்டு வெளியே ஓடிவந்தார். அப்போது சிலிண்டர் டமார் என்று வெடித்து வீடு தீ பிடிக்க தொடங்கியது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த கமலக்கண்ணன் என்பவரது வீட்டிலும் தீ பிடித்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தீ அணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்ததில் செண்பகவள்ளி கமலக் கண்ணன், ஜெயலட்சுமி உள்பட 8 பேர் தீக்காயம் அடைந்து உடல்கருகினர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயலட்சுமி, கமலக்கண்ணன் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.

    இந்தசம்பவம் குறித்து பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நெல்லை மாவட்டம் சிவகிரியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பெண் படுகாயமடைந்தார். ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சிவகிரியில் வெள்ளையம்மாள் என்பவரது வீடு உள்ளது. இன்று காலை அவர் வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டில் திடீரென்று கியாஸ் கசிந்து தீ பிடித்தது. அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்தது. இதில் வெள்ளையம்மாள் வீடும் இடிந்து சேதமானது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சிவகிரி தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வமுருகேசன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×