என் மலர்
நீங்கள் தேடியது "Dargah"
- 24-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- ஜனவரி 2-ம்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது.
- 3-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடை பெறுவது வழக்கம்.
அதன்படி வருகிற 24-ந்தேதி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.
அப்போது, கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் கற்கண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 3-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது.
- உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா நாகூரில் உள்ளது.
- சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.
நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா கடந்த 24-ந்தேதி கொடியற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி தர்கா உள்புறத்தில் சந்தனம் அரைக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தலைமை தாங்கினார்.
பரம்பரை டிரஸ்டி அபுல் பதஹ் சாஹிப் முன்னிலையில் பரம்பரை டிரஸ்டிகள் கலந்து கொண்டு சந்தனம் அரைத்தனர்.
- சந்தனக்கூடு ஊர்வலம் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.
- நாகூர் நாயகம் மறைந்த நாளை கந்தூரி விழாவாக நாகூரில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வட இந்தியாவில் அயோத்திக்கு அருகில் உள்ள மாணிக்கப்பூர் என்னும் ஊரில் கி.பி. 1491-ம் ஆண்டு ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப்- பீபி பாத்திமா ஆகியோருக்கு ஹஜ்ரத் சாகுல் ஹமீது நாயகம் (நாகூர் நாயகம்) மகனாக பிறந்தார். இவர் தனது 8 வயதிலேயே அரபிக் கல்வியை இலக்கண சுத்தமாக கற்றுத் தேர்ந்தார்.
பின்னர் ஆன்மிக கல்வி பெற குவாலியர் சென்று ஹஜ்ரத் சையத் முகமது கவுஸ் சாகிப் என்பவரின் கல்விக்கூடத்தில் சேர்ந்தார். அங்கு 10 ஆண்டுகள் கல்வி பயின்றார். பின்னர் 404 மாணவர்களுடன் அங்கிருந்து சென்று மாணிக்கப்பூர், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆன்மிக பரப்புரை செய்தார்.
பிரார்த்தனை செய்தார்
அதன் பின்னர் மெக்கா மாநகரம் நோக்கி பயணம் செய்தார். வழியில் லாகூரில் தங்கி இருந்தபோது, ஹாஜி ஹஜ்ரத் நூருதின் சாஹிப் எனும் செல்வந்தர் நாகூர் நாயகத்தைச் சந்தித்து தமக்கு பிள்ளை செல்வம் இல்லாமல் இருப்பது பற்றி கூறினார். அவருக்காக நாகூர் நாயகம் அல்லாவிடம் பிரார்த்தனை செய்தார். இதன் பலனாக ஹாஜி ஹஜ்ரத் நூருதின் சாஹிபுக்குசையத் முகமது யூசுப் சாகித் என்னும் இறைநேசர் பிறந்தார்.பின்னர் நாகூர் நாயகம் அவரது மகனார், மாணவர்கள் அனைவரும் இணைந்து இலங்கை, காயல்பட்டினம் கீழக்கரை, தென்காசி என பல்வேறு இடங்களுக்கு பயணித்து ஆன்மிக பரப்புரை செய்தனர். இறுதியாக நாகூர் நாயகம் தஞ்சாவூர் வந்தடைந்தார்.
மன்னரின் நோயை சரி செய்தார்
அப்போது தஞ்சையை ஆட்சி செய்த மன்னர் அச்சுதப்ப நாயக்கர் நீண்ட நாளாக தீர்க்க முடியாத நோயால் போராடிக் கொண்டிருந்தார். மன்னரின் அமைச்சர்கள் நாகூர் நாயகத்தை அணுகி மாளிகைக்கு வந்து மன்னனை பார்க்குமாறு வேண்டினர். அங்கு சென்ற நாகூர் நாயகம், மன்னனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். மன்னரின் நோய் தீர்ந்தது . அதேபோல் அதுவரை பிள்ளை பேறு இல்லாத மன்னர் நாகூர் நாயகத்தின் பிரார்த்தனையால் புத்திர பாக்கியம் பெற்றார்.இதற்கு கைமாறாக அம்மன்னர் ஏராளமான செல்வத்தையும், சொத்துக்களையும் கொடுக்க முன் வந்தார் .
40 நாட்கள் நோன்பு நோற்றார்
நாகூர் நாயகமோ கடலோரத்தில் தமக்கு ஒரு துண்டு நிலம் போதும் என்று கூறினார். அதன்படி மன்னர் 30 ஏக்கர் நிலத்தை கடலோரத்தில் வழங்கினார். அதுதான் இன்றைய நாகூர்
நாகூர் நாயகம் ரஜப் மாதத்தில் நாகூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாஞ்சூருக்கு சென்று மரப்பலகையால் மூடப்பட்ட ஒரு குழிக்குள் அமர்ந்து 40 நாட்கள் நோன்பு நோற்றார். அங்கு தான் தற்போதைய வாஞ்சூர் பள்ளிவாசல் உள்ளது. அதேபோல நாகூர் கடலோரத்தில் அமைந்துள்ள சில்லடி பள்ளிவாசலிலும் 40 நாட்கள் நோன்பு நோற்றார். நாகூர் நாயகம் தனது 68-வது வயதில் நாகூரில் மறைந்தார். பின்னர் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கந்தூரி விழா
நாகூர் நாயகம் மறைந்த நாளை கந்தூரி விழாவாக நாகூரில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சமய பாகுபாடின்றி மதநல்லிணக்கத்துடன் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.
- சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நாகூர் தர்காவை வந்தடையும்.
- நாளை அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கந்தூரி விழா கடந்த மாதம்(டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு தர்கா அலங்கார வாசலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரவு 8 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிகாலை நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடையும்.
இதை தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.
- நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
- விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக திகழும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் நேற்று இரவு நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தன கூட்டின் மீது வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களை தூவி வழிபட்டனர். ஸ்தூபி இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம் , தாரை தப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.
பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தனகூடு ஊர்வலம் இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளில் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். தொடர்ந்து மயக்க நிலையை அடைந்த சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப் பக்தர்கள் கூட்டத்தில் தூக்கி வரப்பட்ட நிலையில் சுற்றியிருந்த பக்தர்கள் அவரை தொட்டு வணங்கினர்.தொடர்ந்து யாத்ரீகர்களுக்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஷாநவாஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சந்தனகூடு ஊர்வலத்தை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விழாவில் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபட்டனர்.
- மத நல்லிணத்திற்க்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா பல நூற்றாண்டு காலமாக விளங்கி வருகிறது.
- விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள், நெய் சாதம் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் என்மனம் கொண்டான் ஊராட்சி பகுதியில் (நாகூர்) சாகுல் அமீது பாதுஷா நாயகம் தர்காவில் 466-ம் ஆண்டு கந்தூரி விழா உச்சிப்புளி புது நகரம் முஸ்லிம் ஜமாத்-வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் கடந்த 24-ந்தேதி கொடியேற்று விழா நடந்தது. இதைத்தொடர்ந்து 30-ந் தேதி பானக்கபானை, பீர்வைத்த நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதையடுத்து கந்தூரி விழா, ரவ்லாசரி புக்கு சந்தனம் பூசுதல், கடற்கரைக்கு பீர் ஏகுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நாளை(வெள்ளிக்கிழமை) கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மத நல்லிணத்திற்க்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா பல நூற்றாண்டு காலமாக விளங்கி வருகிறது. இந்த விழாவினை என்மனம்கொண்டான் முஸ்லிம் ஜமாத்தினர், புதுநகரம் முஸ்லிம் ஜமாத்தினரும் நடத்தி வருவது வழக்கம். அதன்படி நடைபெற்ற கந்தூரி விழாவில் புதுநகரம் முஸ்லிம் ஜமாத் தலைவர் அஜ்மல்கான் தலைமையில் துணைத்தலைவர் சீனி சிராஜுதீன், செயலாளர் அப்துல்காதர், முன்னாள் தலைவர் முகமது நஹீபு, மலேசியா ஓரிண்டல் மணி சேஞ்ச் நிறுவனர் ஜாகிர் உசேன், நாகூர் கனி, வளர்பிறை நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் மைதீன், முகமது மீரா, முபாரக் அலி, அமீன் மற்றும் மதரசா மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள், நெய் சாதம் வழங்கப்பட்டன. இதில் என்மனம்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் முகமது அமீன், கவுன்சிலர் காளீஸ்வரி விசுவநாதன், உச்சிப்புளி பகுதி தி.மு.க. பிரமுகரும், அரிமா சங்க மண்டல தலைவருமான விசுவநாதன், தர்கா வலசை கோபால், அப்துல்லா, முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல் மாலிக் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்ேகற்றனர். விழா ஏற்பாடுகளை புதுநகரம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், வளர்பிறை சங்கத்தினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- 14 நாட்கள் நடந்த கந்தூரி விழா நிறைவு பெற்றது.
- நிகழ்ச்சியில் தர்கா ஆதீனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாகூர் தர்காவில் 466 -வது கந்தூரி விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 1-ந்தேதி பீர் அமரவைத்தல், 2-ந்தேதி சந்தனகூடு ஊர்வலம், 3-ந்தேதி ஆண்டவர் சமாதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி, 4-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.
நேற்று இரவு 8.30 மணிக்கு தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினாராவில் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டது. இதற்கு தர்கா மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் தலைமை தாங்கினார்.
தர்கா பரம்பரை டிரஸ்டிகள் அபுல்பதஹ் சாஹிப், ஷேக் ஹசன் சாஹிப், ஹாஜா முஹைதீன் சாஹிப், முஹம்மது பாக்கர் சாஹிப், ஹாஜா ஹுசைன் சாஹிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தர்கா ஆதீனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்கா பரம்பரை டிரஸ்டி டாக்டர் செய்யது யூசுப் சாஹிப் நன்றி கூறினார். 14 நாட்கள் நடந்த கந்தூரி விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.
- அனைத்து வீடுகளுக்கும் நார்ஷா எனும் இனிப்பு வழங்கப்பட்டது.
- இந்துக்களுக்கு விபூதி பிரசாதமும், முஸ்லிம்களுக்கு சர்க்கரையும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஆண்டு தோறும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தக்கூடிய மத நல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா ஷாபான் 1-ம் பிறையில் கொடி ஏற்றம் நடைபெற்று, ஷாபான் 10-ம் பிறையில் சந்தனக்கூடு நகர் வலம் வந்து ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்கா வந்தடைந்தது.
கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் அனைத்து மக்களும் இணைந்து, வீடுகளில் சர்க்கரை, பேரிச்சம்பழம், பழங்கள் வாங்கி தினமும் பாத்தியா ஓதப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் நார்ஷா எனும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் இந்துக்களுக்கு விபூதி பிரசாதமும், முஸ்லிம்களுக்கு சர்க்கரையும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இது கரிசல்பட்டி, கே.புதுப்பட்டி, கரியாம்பட்டி என 3 கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் இணைந்து நடத்தும் விழாவாகும்.
இந்த விழாவிற்கு கரிசல்பட்டி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது முகமது, ஊராட்சி தலைவர் ஷாஜகான், நாட்டாண்மை அபி முகமது தலைமை தாங்கினர். விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு, அனைத்து மக்களும் இணைந்து தூக்கி நகர் வலம் வந்தனர். சந்தனக்கூடு முக்கிய வீதிகளில் வலம் வந்து பின்னர் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்காவிற்கு வந்தது. அங்கு சந்தனக்கூட்டில் வைக்கப்படிருந்த சந்தனக்குடத்திலிருந்து சந்தனம் எடுத்து பாத்தியா ஓதப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு சாதி, மத பேதமின்றி நடத்தக்கூடிய மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- நாளை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்ஹா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 200-வது கந்தூரி விழா, கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய விழாவான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
முன்னதாக பள்ளிவாசலில் இருந்து இரவு 11 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு, காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அதிகாலை மீண்டும் பள்ளிவாசலை சென்றடைந்தது. விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
நாளை(செவ்வாய்க்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.
- ஜூன் 12-ந் தேதி சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெறும்.
- ஜூன் 19-ந்தேதி கொடியிறக்கம் நடைபெறும்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உலக பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.
விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்திரீர்கள் வந்து செல்வது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு 849-ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக மே 21-ந் தேதி தர்கா மண்டபத்தில் தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் மவுலீது ஷரிப் (புகழ் மாலை) தொடங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக்கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி ஜூன் 13-ந் தேதி அதிகாலை மேள தாளங்களுடன் யானைகள் அணிவிக்க, நாட்டிய குதிரைகள் நாட்டிய மாட, சந்தனக்கூடு பவனி வர அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, தர்கா மக்பராவில் சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெறும்.
இதனை தொடர்ந்து ஜூன் 19-ந்தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய் சோறு நேர்சை வழங்கப்பட்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.
இந்த தகவலை ஏர்வாடி தர்கா ஹக்தார் கமிட்டினர் தெரிவித்துள்ளனர்.
- 12-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.
- 19-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக, ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள், ஹக்தார் கமிட்டியினர் நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கப்பட்டது.
உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் மாவட்ட தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ ஓதினர். தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.
நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 4 மணிக்கு கொட்டும் முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன் யானை மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது. இரவு 7 மணிக்குமேல் நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.
பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 19-ந்தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
- ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழா கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக, ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள், ஹக்தார் கமிட்டியினர் நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கப் பட்டது.
உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் மாவட்ட தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ ஓதினர். தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.
கொடியேற்றம் நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 4 மணிக்கு கொட்டும் முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன் யானை மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது.
இரவு 7 மணிக்குமேல் நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
19-ந்தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயி ரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 13-ந்தேதி(செவ்வா ய்க்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் 24-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப் படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.