என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death."

    விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே வயதானவர் உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வண்டிமேடு பகுதி தச்சன்குட்டையில் வசித்து வருபவர் அண்ணாதுரை (வயது 65). இன்று அதிகாலை வண்டிமேடு பழைய சிக்னல் அருகில் சாலை கடக்க விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேேய வயதானவர் உயிரிழந்தார்.

    முயற்சி செய்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேேய வயதானவர் உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    • தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம்-பட்ட மங்கலம் சாலையில் உள்ள ஆலமர பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதி மக்கள் திருக்கோஷ்டி யூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் நடத்திய விசா ரணையில், காட்டாம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெய மணி மகன் ஜெயகாந்தன் என தெரியவந்தது. தச்சு தொழிலாளியான இவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை.

    முகம், கைகளில் ரத்த காயங்கள் இருப்பதால் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குடும்ப பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் விவகாரத்தில் ஜெயகாந்தன் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீ.கே.புதூர்:

    தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையை சேர்ந்தவர் செல்வ விநாயகம். இவரது மகன் விக்னேஷ் பாண்டியன் (வயது 28). கூலி தொழிலாளி. இவரும் தென்காசி  திரவியம் நகரை சேர்ந்த மெக்கானிக்கான விக்னேஷ் என்பவரும் நண்பர்கள்.

    விக்னேஷ் பாண்டியன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று இவர்கள் 2 பேரும் அந்த நாய்க்குட்டியை பாவூர்சத்திரத்தில் தனது நண்பர் வீட்டுக்கு கொண்டு சென்று விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். விக்னேஷ்  மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    பாவூர்சத்திரம்  ராமச்சந்திரபட்டினம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நாய்க்குட்டி துள்ளி சாலையில் குதித்துள்ளது. உடனே விக்னேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். பின்னால் அமர்ந்திருந்த விக்னேஷ் பாண்டியன் சாலையை கடந்து நாய்க்குட்டியை தூக்குவதற்கு சென்றுள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கிய விக்னேஷ் பாண்டியன் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் விக்னேஷ் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி:

     நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழி சாலையில் இருந்து தண்டையார் குளம் செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது. இன்று காலை இந்த பிரிவு சாலையில் கீழ்புறம் இருந்து பணகுடி ஊருக்கு கரையடி காலனியை சேர்ந்த தொழிலாளி ஹரிகிருஷ்ணன் ( வயது 60)  என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
     இதில் ஹரி கிருஷ்ணன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பணகுடி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரானில் நடந்த 10 மாடி கட்டிட விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான அபடானில், அமீர் கபீர் தெருவில் அமைந்த 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்தது. இந்த சம்பவத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பிற நகரங்களில் இருந்து அவசரகால குழுக்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2 மோப்ப நாய் குழுக்களும், ஹெலிகாப்டர் ஒன்று மற்றும் 7 மீட்பு வாகனங்களும் சென்றன.

    அவர்கள் சென்றபோது, அந்த பகுதியில் வசித்த குடியிருப்புவாசிகள் நகர அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அவர்களை அமைதிப்படுத்தி விட்டு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    ஈராக்கை ஒட்டிய எல்லை பகுதியில் அமைந்த அந்த நகரில் இருந்த கட்டிடத்தில் வணிகத்திற்கான கடைகள் அமைந்துள்ளதுடன், குடியிருப்புவாசிகளும் வசித்து வந்துள்ளனர். இந்த கட்டிட விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 80 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள குஜஸ்தான் மாகாண நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


    பள்ளிப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து பலியானார்.
    பள்ளிப்பாளையம்:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் லோகுசாமி (வயது 58). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

    பள்ளிப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.பி. காலனியில்  ஈரோடு  செல்லும் வழித்தடத்தில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  இந்த  அரசு பஸ்சில் லோகுசாமி  நேற்று பணியில் இருந்தார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டு, பஸ்சிலேயே மயங்கி விழுந்தார். 

    அவர் உயிருக்கு போராடிக் கொணடிருந்தார். இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து டிரைவர், உடனடியாக பஸ்சை வேகமாக  வழியில் எங்கும் நிறுத்தாமல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையை நோக்கி ஓட்டிச் சென்று  சிகிச்சைக்காக  அவரை  சேர்த்தார்.   

    அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் லோகுசாமி இறந்து  விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் இது பற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.   
    வேப்பூர் அருகே மின் ஊழியர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையம் செயல்படுகிறது. இங்கு பாசார் கிராமத்தை சேர்ந்த ராஜவேல், (வயது 58) என்பவர் சிறுபாக்கம் அடுத்த அடரி துணை மின் நிலையத்தில் கட்டுப்பாடு பிரிவு ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில், இரவு பணியிலிருந்த போது, இரவு 11:30 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அதே இடத்தில் இறந்துவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த சிறுபாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அவரது பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

    சேலம் புதிய பஸ் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி மீது பஸ் சக்கரம் ஏறி பரிதாப இறந்தார்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு அந்த பகுதிகளில் இருந்துவரும் மாற்றுத்திறனாளி செல்வராஜ் (வயது 70)என்பவர் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில்  தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்றிருந்த அரசு பேருந்து திடீரென பின்னால் இயக்கப்பட்டது. இதில் பஸ்சின் பின் சக்கரம் செல்வராஜ் காலின் மீது ஏறி இறங்கியது. இதனால் வலியால் துடித்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டிய தர்மபுரியை சேர்ந்த பச்சமுத்து (வயது44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை வைகையாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    மதுரை

    மதுரை ஆழ்வார்புரம், வைகை வடகரையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி.  சில நாட்களாக இவரை காணவில்லை. இந்த நிலையில் வைகை ஆற்றுக்குள் நாகராஜனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மனைவி சங்கீதா விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகர், துளசிராம் தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 42), கூலித் தொழிலாளி. நேற்று மாலை இவர் முனியாண்டி புரம் தனியார் கல்லூரி முதல் மாடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தும் வேலையில் ஈடுபட்டார். 

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே குமரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மீனாம்பாள்புரம், இயேசுநாதர் தெருவைச் சேர்ந்த பாலாஜி மனைவி பாண்டிச்செல்வி (40). இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் தத்தனேரி சுடுகாட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    ஜேடர்பாளையம் அருகே முதியவர் திடீர் பலியானார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள ராஜவாய்க்கால் பாலம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து கிடந்தவரின் உடல்  அருகே கிடந்த பையை எடுத்து சோதனை செய்தனர். இதில் அவர் ஈரோடு மாவட்டம், மரப்பாளம், முனிசிபால் சத்திரத்தை சேர்ந்த வரதராஜ் (70)  என்பது தெரிய வந்தது. 

    அதனையடுத்து அவரது உடலத்தை மீட்டு  போலீசார் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலத்தில் ஓட்டல் காவலாளி திடீரென மயங்கி விழுந்து பலியானார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது50). இவர் நெய்காரப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அவர் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள கீழகலங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் பாரத்(வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 19-ந்தேதி தனது உறவினரான பிரசாந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சேர்ந்தமரம் அருகே உள்ள சுப்பையாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். சுப்பையாபுரம் விலக்கு அருகே சென்றபோது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மோட்டார் சைக்கிள் வேகமாக அதில் ஏறி இறங்கியது. அப்போது பாரத் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரசாந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாரத்தை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×