என் மலர்
நீங்கள் தேடியது "Death threat"
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.
குணால் கம்ரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குணால் கம்ராவுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், குணால் கம்ராவுக்கு தொலைபேசி மூலம் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குணால் கம்ராவை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் அழைப்புகள் என்று கூறப்படுகிறது. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குணால் கம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை முன்பொரு காலத்தில் துரோகி என்று கூறி வந்ததாக குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
- சகோதரர்கள் 2 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
- தோம்னிக் சேவியர் கடந்த 6 மாத காலமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார்
கோத்தகிரி,
கோத்தகிரி பாப்பிஸ்ட் காலனியை சேர்ந்தவர் தோம்னிக் சேவியர் என்ற ரவி. கூலி தொழிலாளி.
இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோத்தகிரி தர்மோன் பகுதியை சேர்ந்த சங்கீத் குமார், பாலா என்பவர்களிடம் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கினார். இதற்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வட்டியும் கட்டி வந்தார்.
மாதந் தவறாமல் வட்டி செலுத்தி வந்த தோம்னிக் சேவியரால், அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 6 மாத காலமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தோம்னிக் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது வழியில் வட்டிக்கு பணம் கொடுத்த சகோதரர்களான சங்கீத் மற்றும் பாலா ஆகியோர் வந்தனர். அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்திற்கான வட்டியை கேட்டுள்ளனர். அதற்கு அவர் விரைவில் தந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் பணத்தை தராவிட்டால், உன்னை எரித்து கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்து போன தோம்னிக் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சங்கீத் மற்றும் பாலா ஆகியோர் தோம்னிக் சேவியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார், சங்கீத் மற்றும் பாலா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புரளியாக இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகம்.
- மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து ராகுல்காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடை பயணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷெகானில் நடைபெற்று வருகிறது. சாவர்கர் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் ஷெகானில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராகுல்காந்தியின் நடைபயணம் அடுத்ததாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் நுழைய உள்ள நிலையில் இந்தூரில இனிப்பு கடை ஒன்றில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது புரளியாக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மனோஜ் அன்னதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கிட்டான் என்பவரது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியுள்ளார்.
- கார்த்திக் மற்றும் அவரது நண்பர் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து மனோஜை தாக்கினர்.
அன்னூர்,
கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள கஞ்சப்பள்ளி நத்தமேட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்(32). இவர் டிராக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
மனோஜ் அன்னதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கிட்டான் என்பவரது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியுள்ளார். இதற்கான வாடகை பணத்தை அவரிடம் கேட்டார். அப்போது அவர்கள், நீங்கள் கூறியதாக கார்த்திக் என்பவர் வந்து பணத்தை பெற்று சென்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மனோஜ் மற்றும் வெங்கிட்டான், அவரது மனைவி துளசியம்மாள் ஆகியோர் கார்த்திக்கை நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டனர்.
அப்போது கார்த்திக் மற்றும் அவரது நண்பர் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து மனோஜை தாக்கினர். மேலும் அவருக்கு கொலைமிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து மனோஜ் அன்னூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், தாமோதரன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- களக்காடு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அமலன் மற்றும் போலீசார் களக்காடு-நாங்குநேரி பிரதான சாலையில் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே ரோந்து சென்றனர்.
- இருவரும் மது பாட்டில்களை காட்டி அருகில் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
களக்காடு:
களக்காடு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அமலன் மற்றும் போலீசார் களக்காடு-நாங்குநேரி பிரதான சாலையில் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்குபையுடன் நின்ற 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதைக் கண்ட போலீசார் இருவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். இருவரும் மது பாட்டில்களை காட்டி அருகில் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். எனினும் போலீசார் ஒருவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது 36) என்பதும், தப்பி ஓடியது கோவில்பத்தை சேர்ந்த ரத்தினகுமார் என்பது, 2 பேரும் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சுந்தரபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விசாரணை நடத்தி தப்பி ஓடிய ரத்தினகுமாரை தேடி வருகின்றனர்.
- 1998-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
- கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கோவை,
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியம் (வயது 55). இவர் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு 11.45 மணியளவில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுப்பிரமணியம் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பணியின் போது இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கடந்தூர். இவர் 1998 -ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு அல்லிராணி என்ற மனைவியும் 1 மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மாரடைப்பில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அஞ்சலி
- வீட்டினுள் வைத்து பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
- ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வீராம்பட்டி னம் பகுதியை சேர்ந்தவர் கலைஞர். மீனவர்.
இவரது மனைவி ஜமுனா (வயது 32). திருமணத்தின் போது பெண் வீட்டினர் 25 பவுன் நகை, ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கலைஞர், அடிக்கடி குடித்துவிட்டு, பணத்தை சூதாட்டத்தில் செலவழித்து வந்ததாக தெரிகிறது.
இதனை தட்டிக் கேட்ட ஜமுனாவை தாக்கி வந்துள்ளார். மேலும், பணம், நகை வாங்கி வருமாறு அடித்து வந்துள்ளார். இதற்கிடையே, கலைஞர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி, 2-வது திருமணம் செய்ததாக தெரிகிறது. இதனை ஜமுனா தட்டிக் கேட்டபோது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைஞர், வழக்கை வாபஸ் பெறா விட்டால், வீட்டினுள் வைத்து பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு கணவர் குடும்பத்தினர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜமுனா, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கணவர் கலைஞர், மாமியார் மரக தம், நாத்தனார் சித்ரா ஆகிய 3 பேர் மீதும் வரதட் சணை கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.
- இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் கடிதங்களை அனுப்பிய 60 வயது நபர் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் நாட்டின் கன்னியாகுமாரியில் ராகுல் காந்தி துவங்கிய பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. யாத்திரையின் அங்கமாக கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.

இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதனை அனுப்பியவர் தயாசிங் என்கிற ஐஷிலால் ஜாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ரயில் மூலம் தப்ப இருந்த ஜஷிலால் ஜாமை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இவர் எதற்காக அந்த மாதிரியான கடிதத்தை அனுப்பினார் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தூரில் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுவர் என்று ஜஷிலால் ஜாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
- காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றி வருபவர் லெனின். இவர் அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது அப்துல் கனி உள்பட 4 பேர் பெண் போலீஸ் நிஷாந்தினி, அமலரூபம் ஆகியோரிடம் போக்சோ வழக்கு தொடர் பாக வந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடாது என்று வற்பு றுத்தி கொண்டிருப்பதை பார்த்தார்.
இதனை கண்ட அவர் பெண் போலீசாரிடம் இவ்வளவு கடுமையாக பேசக்கூடாது என்று 4 பேரிடமும் கூறி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது பற்றி லெனின் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனி என்ப வரை கைது செய்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகேயுள்ள கான்சாபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கணேஷ் பாண்டியம்மாள்(வயது30). இவர் பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவர் வந்தார்.
அவர் தான் பட்டா மாற்ற மனு செய்ததாகவும், அது இன்னும் தரப்படவில்லை என்றும் கேட்டுள்ளார். அதற்கு ஆவணங்களை பார்த்து பட்டா மாறுதல் சரி செய்து தருவதாக கணேஷ் பாண்டியம்மாள் கூறியுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த ரத்தினம் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் சுனிதா ஆகியோரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் கணேஷ் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுபோதையில் இருந்த ரத்தினசாமி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் பேசினார்.
- கொலை மிரட்டல் விடுத்த ரத்தினசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மவுசிகா (வயது 26). இவரது தாய் சகுந்தலா அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
மவுசிகா வீட்டின் அருகே பெரியப்பா ரத்தினசாமி (63) என்பவர் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி மது போதையில் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களை தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர் மவுசிகாவிடம் புகார் கூறினார்.
சம்பவத்தன்று மவுசிகா மற்றும் அவரது தாய் சகுந்தலா ஆகியோர் இது குறித்து கேட்பதற்காக சென்றனர். அப்போதும் மதுபோதையில் இருந்த ரத்தினசாமி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து மவுசிகா ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகளை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த ரத்தினசாமியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவர் குடிபோதையில் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றார்.
- தனலட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் சசி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (37) என்பவர் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றார்.
இதனை பார்த்த தனலட்சுமி ஏன் இவ்வாறு பேசி செல்கிறீர்கள் என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் அவரையும் தகாத வார்த்தைகளால் பேசி விட்டு சென்றார். பின்னர் அவர் அந்த வழியாக வேலை முடிந்து நடந்து வந்த தனலட்சுமியின் கணவர் சசியை வழிமறித்து உனது மனைவியை ஒழுங்காக வைத்து கொள். இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அவரையும் தாக்கி விட்டு சென்றார்.
இது குறித்து தனலட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடி போதையில் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி அவரது கணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் பிரகாஷை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.