என் மலர்
நீங்கள் தேடியது "Death."
தேவகோட்டை அருகே உள்ள கொசவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து மகன் பசுபதி (வயது26), அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முத்து, புதுக்கோட்டை மாவட்டம் பொண்ண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜ் மகன் மகாலிங்கம் என்ற அருண் (24).
இவர்கள் 3 நபர்களும் காரைக்குடியிலிருந்து கொசவக்கோட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு அருகே வரும் பொழுது எதிரே காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அப்துல்அஜீத் என்பவர் ஓட்டிவந்த காரும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி, மகாலிங்கம் என்ற அருண் ஆகியோர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். என்ஜினீயர் அப்துல் அஜித் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த முத்து இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுகா ஆய்வாளர் சுப்பிர மணியன் ஆறாவயல் சார்பு ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர் வாகன விபத்து நடந்து வரும் சூழலில் நேற்று நடந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானது குறித்து காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.
காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்தவர் வியாகுலம் (வயது 45). இவர் கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.
வியாகுலம் வழக்கம் போல் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது மனைவி சுகந்தி வீட்டினுள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறி அவரை மீட்டு காயல்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு வியாகுலம் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சுகந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகந்தி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
- எனக்கு வாழப்பிடிக்க வில்லை, அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.
திருப்பூர்:
திருப்பூர் 2-வது ரெயில்வேகேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரெயில் அடிப்பட்டு பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிைடத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த சிறுவன் யார் ,எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் பலவஞ்சிப்பளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் (வயது 17) என்பதும், 11-ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளான். இதற்கிைடயே மாணவனின் வீட்டு தண்ணீர் கேன் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்த போது அது மாணவன் எழுதிய கடிதம் என்பது தெரிய வந்தது.
அந்த கடிதத்தில் , எனக்கு திக்கு வாய் என்பதால் நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. எனக்கு வாழப்பிடிக்க வில்லை .அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. இது நானே எடுத்த முடிவு. ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள் என உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. கடித்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் கட்டுமான தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
- திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
செல்லூர், போஸ் வீதியை சேர்ந்தவர் குரு (55). கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை இவர் தாகூர்நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலையில் ஈடுபட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- அரசு பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
- அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றபோது டி.கல்லுப்பட்டி நோக்கி வந்த அரசு பஸ் மோதியது.இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் கல்லுப்பட்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் சின்னசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.