என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Decoration"
- பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.
- பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.
தருமபுரி:
தமிழகத்திலேயே வேறு எங்கும் கண்டிராத வகையில் தருமபுரியில் பெண்கள் மட்டுமே தேரினை வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிர மணிய சாமி கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 21 ந்தேதியன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.
இந்த தைப்பூசத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் தைசப்பூசத்தையொட்டி பெண் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சிவ சுப்பிரமணிய சாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அதேபோல் ஆண் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் காவடி எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை கோலகலமாக நடைபெற்றது.
விழாவில் சிவசுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானையுடன் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.
தேர் நிலை வந்தபோது பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு வீசி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். சிலர் சில்லறை காசுகளையும் தேரின் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர்.
அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவசுப்பிரமணிய சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் திருவிழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது.
- மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
இந்த ஆண்டு தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு ெதாடங்கி இரவு 8 மணி வரை, சுமார் 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- புனிதநீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவெண்கா ட்டில் பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யே ஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான கோவிலாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷகம் நடந்தது.
முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ராமகிருஷ்ணன் குடும்பத்தி னர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், சீர்காழி திருநிலைநாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
முன்னதாக புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
தொடர்ந்து, புனிதநீரால் மூலவர் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், பொன்னா கவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோவில் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசாமி கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
பின், மூலவருக்கு சங்காபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஐப்பசி மாத கந்த சஷ்டி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
- முருகப் பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்காம பால தண்டாயுதபாணி ஆலயத்தில் ஐப்பசி மாத கந்த சஷ்டி உற்சவம் வருடாவருடம் நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இவ்ஆண்டு 6 நாள் உற்சவம் கடந்த 13ம் தேதி தொடங்கியது, தினந் தோறும் மாலை சிறப்பு யாகமும் அதனைத் தொடர்ந்து பால், தயிர், சந்தனம் தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் மகா தீபாரதனை காட்டப்படும்.
இதுபோல் இன்று முருகப் பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான முருக கடவுள் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் விழா நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஒன்பத்துவேலி வான்மீகிநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ ஆபத்சகேஸ்வரசாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சுவாமிக்கு அன்னா பிஷேகம் நடைபெற்றது.கோவிலின் மூலவரான ஆபத்சகேஸ்வரசாமிக்கு அன்னம் வடித்து அன்னத்தை(சோறு) கொண்டும் பக்தர்கள் வழங்கிய காய்கறிகளை கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
பூஜைகளு க்கு பிறகு தீபாரதனை காண்பி க்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரசாமி திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ அக்னீஸ்வரசாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி வான்மீகி நாத சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.
- ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அடுத்த கோவிலூர் நெல்லி தோப்பில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
தற்போது நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது.
தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.
அதன்படி விழாவின் 7-ம் நாளான நேற்று காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீ மூகாம்பிகா அலங்காரம் செய்யப்பட்டது.
இன்று 8-ம் நாள் விழா நடந்து வருகிறது.
விழாவில் மாலையில் நவராத்திரி கலாபக் கலை விழா நடைபெற்றது.
இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.
இதையடுத்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அறங்காவலர் காத்தாயி அடிமை சுவாமிநாதன் முனையதிரியர் கேடயம், பரிசு வழங்கி பாராட்டினார் .
- விழாவை முன்னிட்டு ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது
- 24-ந் தேதி வரை மாலை அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தெற்கு வீதி அருகில் எல்லையம்மன் என்கிற ரேணுகாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
தஞ்சாவூரில் ரேணுகாதேவி அம்மன் என உள்ள ஒரே கோவிலாகும்.
இன்று நவராத்திரி விழாவை முன்னிட்டு மூலவர் ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோவிலில் இன்று முதல் வரும் 24-ம்தேதி வரை மாலையில் வெகுவிமரிசையாக ரேணுகாதேவி அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
மேலும் இசைக்கச்சேரி நடக்கிறது.
- 2-ம் நாளான 16-ந் தேதி மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகின்றன.
- அம்மனுக்கு காலை அபிஷேக ஆராதனையும், மாலை சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலைவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
அன்றைய தினம் பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படுகிறது.
2-ம் நாளான 16-ந் தேதி மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகின்றன.
இதேபோல் 3-ம் நாளான 17-ந் தேதி சதஸ் அலங்காரமும், 18-ந் தேதி காயத்ரி அலங்காரம், 19-ந் தேதி அன்னபூரணி அலங்காரம், 20-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 21-ந்தேதி சரஸ்வதி அலங்காரம், 22-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 23-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், 24-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படுகிறது.
நவராத்திரி விழாவின்போது தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
- அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
- ராகு பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வ ரமுடையார் கோவில் உள்ளது.
இக்கோயில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடை ந்ததை யொட்டி அமிர்த ராகுபகவா னுக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
தொ டர்ந்து இராகுபகவானுக்கு 21-வகையான திரவியபொரு ட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் பெயர்ச்சி மகாதீபா ராதனை நடந்தது. இதில்நகர வர்த்த சங்க துணைத் தலைவர் கோவி. நடராஜன் நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பூஜை களை முத்துசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சா ரியார்கள் செய்திருந்தனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை
அதிகாரிகள் மற்றும் கோயில் கணக்கர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர்.
- 1 டன் மலர்களால் சாமிக்கு அலங்காரம்
- கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத அமாவாசையான நேற்று மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 1 டன் மலர்களால் உற்சவர் பெரியநாயகி அம்மனுடன் விநாயகர் இருப்பது போன்று அலங்கரிக்கப்பட்டு அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமரவைக்க ப்பட்டது. அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வள்ளுவன் தோப்பில் சீராள மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ஆம் தேதி வெள்ளிக் கிழமை காப்பு கட்டுதல்,பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர்,இளநீர்,சந்தனம், திறுநீர், தேன்,திரவியம்,மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், தீபாரா தனையும் நடைபெற்றது.தொடர்ந்து காய்கறி மற்றும் கனி அலங்கார பூஜை நடைபெற்று பின்னர் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து இன்று சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதில் திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த திருக்குவளைக்கட்டளை - அண்ணா பேட்டை காமாட்சி அம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் 11ம் ஆண்டு விளக்கு பூஜை உலக நன்மை வேண்டி நடைபெற்றது
திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பூஜை செய்து வழிபட்டனர் முன்னதாக காமாட்சி அம்மன் பெத்தாரண்ய சுவாமி முனீஸ்வரர் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாரதணை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.
விளக்கு பூஜை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு தாலிகயிறு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட, மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்து இருந்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்