என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonstration"

    • கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெறறது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    கரூர்:

    வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட மாற்றுத்தி றனாளிகளுக்கான ஊர்தி படியை உடனே வழங்கிட வேண்டும். பிறதுறை ஊழியர்களுக்கு வழங்குவது போல் கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் வழங்கிட வேண்டும். 2021-2022 ஆண்டுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட விஏஓ பதவி உயர்வு உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி

    அரியலூர்,

    தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கட்சியினர் மொழி அரசியலை செய்ய வேண்டாம். பொறியியல், மருத்துவம் படிப்புகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட மேற்பார்வையாளர் சந்திரசேகரன், அரியலூர் நகரத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பட்டியல் அணித் தலைவர் தடா பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மரக்கடை பகுதியில் தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    திருச்சி,

    தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மரக்கடை பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் அழகிரிசாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர் திலகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயலாளர் பெரியசாமி வரவேற்றார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் பி.அன்பரசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னாள் மாநில பொருளாளர் பி.அருள் சுந்தரராஜன் சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாநில நிர்வாகிகள் குமாரவேல், நாகராஜன், அறிவழகன், மாவட்ட பொறுப்பாளர்கள் சிவக்குமார், கவிதா உட்பட ஏராளமான தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுததியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • அண்ணாமலையை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலையை கைது செய்ததை கண்டித்து, குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுததியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அண்ணாமலையை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணராஜன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு மாநிலத்தில் அமல்படுத்த அவசரப்பட கூடாது. ஸ்பாட் பைன் முறையை கைவிட வேண்டும். சட்டத்தின் பெயரால் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்த சொல்லி துன்புறுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொது செயலர் ரெத்தினவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் அன்புமணவாளன் சாலை போக்குவரத்து சங்க நிர்வாகிகள் சாகுல்அமீது, ஜகுபர்அலி, அப்பாஸ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் , பாண்டியன், அடைக்கலசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    • பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வதிஷ்டபுரம் ஊராட்சியில் சாலையை சீரமைக்க கோரி

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள வதிஷ்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளகாலிங்கராயநல்லூர் கிராமத்தில் 2- வது வார்டில் உள்ள தெருக்களில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையின் காரணமாக கழிவுநீர் மற்றும் மழை நீர் வெளியே செல்லாமல் தேங்கி நிற்கிறது.

    இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் சுத்தம் செய்துதரும்படியும் மழைநீர் தேங்கி நிற்காமல் வெளியேற செய்து தரும்படியும் கோரிக்கை வைத்தனர். மேலும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சிமெண்ட் சாலை அமைத்து தரவும் கூறினார்கள்.

    ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை நீர் தெருக்களில் தேங்கி நிற்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் வார்டுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சி ஆத்திரமடைந்த பொதுமக்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் விரைந்து சென்று பொதுமக்களிடம் விரைவில் சாலையை சரி செய்து தருவதாக உறுதி அளித்தன் பெயரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஓய்வூதியோர் சங்கத்தின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியோர் சங்கத்தின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோமதிநாயகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் நிர்வாகிகள் பேராட்சி கோபாலன், பார்த்த சாரதி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் உள்ள குறைபாடுகளை களைந்து ஓய்வூதியர்கள், அவர்களது குடும்பத்தினர்களுக்கு அனைத்து நோய்களுக்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரெயில் கட்டணம் மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • கலெக்டர் அலுவலகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மதுரை

    அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், பரமேஸ்வரன், தினகர்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஜுலை 1-ம் தேதி முதல் 4 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும், குறைபாடு இல்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 20 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65-70 வயது எட்டிய பழைய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன் வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அனைத்துத்துறை ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை குறைபாடு இல்லாமல் வழங்கிட வேண்டும். அனைத்து நோய்களுக்கான முழுமையான செலவு தொகையை வழங்கிட வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அக விலைப்படி வழங்கிட வேண்டும். நிலுவை தொகை பிடித்தமின்றி வழங்கிட வேண்டும். 20 சதவீத உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் ஆகவும், கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை வழங்கிட வேண்டும். நிறுத்தப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நீலமேகம் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • சேலம் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தனியார் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    சேலம்:

    தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணை 152-ஐ மறுசீராய்வு செய்யக்கோரி, சேலம் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி, மாநகராட்சி அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜம்பு தலைமை வகித்தார்.

    சுகாதார அலுவலர் மணிகண்டன், துப்பரவு பணி மேற்பார்வையாளர் குமார், ஓட்டுனர் சுப்பிரமணி, செவி லியர் சாந்தி, நிர்வாகிகள் ராஜா, வக்கீல் சிவக்குமார், மணிகண்டன், சரவணன், நாகராஜன், சுப்ரமணியன், வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசாணை 152-ன்படி பணியாளர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதுடன், தனியார் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் வாரிசுகளுக்கு கருணை பணி நியமனம் இல்லாமல் போகும். மேலும், 35 ஆயிரம் பணியிடங்கள், வெறும் 3,417 ஆக சுருக்கப்பட்டு உள்ளது. அலுவலக உதவியாளர்கள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை பல பணியிடங்கள் இருக்காது. இதனால், ஆயிரக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு பறிபோகும். எனவே அரசாணை 152-ஐ மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • துணை சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது

    அரியலூர் :

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். தேசியக் குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், ராமநாதன், மருதமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் ெதரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கோவிலூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும். கோவிலூர் திரவுபதி அம்மன் கோவிலுக்கு அருகில் இயங்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு சிறுநீரக கல்லடைப்பு நோய் வருவதாகவும், எனவே அதனை பரிசோதித்து சுத்தமான குடிநீர் வழங்க வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கோவிலூர் மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."

    ×