search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonstrations"

    • பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    விழுப்புரம்:

    வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். செயலாளர் சந்தியா காப்பர் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் அன்புமணி விளக்க உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல்,மரக்காணத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

    • காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
    • 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மடியேந்தி போராட்டம் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வர் காலை சிற்றூண்டி உணவு திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆகிய நாங்கள் வரவேற்கிறோம்.

    அதே சமயத்தில் அதனை சத்துணவு ஊழியர் ஆகிய எங்களிடமே வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலம் முறை ஊதி யத்தை வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட செயலாளர் ராஜு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச்செய லாளர் ராணி, மாவட்ட பொருளாளர் அந்துவ ன்சேரல், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி, நாகை வட்ட கிளையின் தலைவர் ரவிச்சந்திரன், சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பழகன் நிறைவுரை யாற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். 

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், மணிப்பூர் மாநிலத்தில் நடை பெற்று வரும் கலவரத்தைக் கட்டுபடுத்தாத பா.ஜ.க.வின் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காம ராஜர் சிலை முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்நிகழ்விற்கு, ஸ்ரீவில்லி புத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வன்னியராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்றத் தொகுதி பொறுப் பாளர் ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவர்கள் பெரியசாமி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச்செயலாளர் முருகேசன், வட்டாரத் தலைவர்கள் பால.குருநாதன், முருகராஜ், லட்சுமணன், பேரூராட்சி தலைவர்கள் கே.எஸ்.சுந்தரம், ஜெயக் குமார், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

    • தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தி.மு.க., அரசு செயல்பட்டு வருவதாகவும்,10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு அவினாசி நகரத்துணைத் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.

    அவினாசி:

    மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தி.மு.க., அரசு செயல்பட்டு வருவதாகவும்,10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் அவினாசி பழைய பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அவினாசி நகரத்துணைத் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் கதிர்வேலன், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், சண்முகம், மாவட்ட ஊடகப்பிரிவு துணைத்தலைவர் சந்துரு, ஒன்றிய பார்வையாளர் விஜயகுமார், நகர பொதுச்செயலாளர் மோகன்குமார் உட்பட மாவட்ட மண்டல, அணி, பிரிவு , நிர்வாகிகள் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுரையில் தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி மதுரையில் தி.மு.க. மாவட்ட மகளிரணி சார்பில் பழங்காநத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட மகளிரணி நிர்வாகி உமா சிங்கதேவன், ரேணுகா ஈஸ்வரி, கீர்த்திகா தங்கபாண்டியன், சின்னம்மாள், செவனம்மாள், சாந்தி, ராமலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன், வடக்கு மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் கண்டன உரையாற்றினார்.

    இதில் மண்டல தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேல், வேலுச்சாமி, மாநில தீர்மான குழு உறுப்பினர் அக்ரி கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான், ஒச்சு பாலு, பாலசுப்பிரமணியன், அழகு பாண்டி,இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா,வைகை பரமன்,சுதன்,காளிதாஸ், கிருஷ்ண பாண்டி, தைக்கா தெரு ராஜேந்திரன்,வைகை மருது, நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், ஜெயராம், ராமபிரசாத், ஒச்சுபாலு, சுதன், சிவா, ராஜரத்தினம், மகேந்திரன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுரை யானை மலை மீது ஏறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து கீழே இறங்க செய்தனர்.

    மேலூர்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறை–யாக வெடித்து பெரும் கலவரமாக மாறியுள்ளது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மணிப்பூரில் இரண்டு இளம்பெண்களை நிர்வாணமாகி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், மணிப்பூரில் கலவரத்தை அடக்கி அமைதியை நிலை–நாட்டவும் வலியுறுத்தி மதுரை மேலூர் ஒத்தக்கடை அருகே போராட்டம் நடை–பெற்றது.

    எவர்சில்வர் தொழிலா–ளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் நரசிங்கம் பட்டி யானை மலை மீது ஏறி மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    இந்த போராட்டத்தில் எவர்சில்வர் தொழிலாளர் கள் சங்க தலைவர் சரவ–ணன், செயலாளர் மலைக் கள்ளன், நிர்வாகிகள் பெரு–மாள், அழகர், கண்ணன், பாண்டியராஜன், கமல் உள் பட ஏராளமானோர் சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட–னர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சூர்யா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து கீழே இறங்க செய்தனர்.

    • 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.

     திருப்பூர்:

    தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அவற்றில் 186 மையங்களை மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி கூறியதாவது:-

    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படும். எச்.ஐ.வி. நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகும். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து வழங்கும் மையங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்க மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது. இதனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மாத்திரைகளை பணம் கொடுத்து பெறும் நிலை ஏற்படும். தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளங்கலை டாக்டர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    மருத்துவ தேசிய ஆணையம் கொண்டு வந்துள்ள இளங்கலை மருத்து வர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமை வகித்தார்.

    இளங்கலை மருத்துவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ பாடத்திட்டங்களில் குழப்பத்தை ஏற்படு த்தும் நெக்ஸ்டை நடை முறைப்படுத்தக் கூடாது.

    இத்தேர்வை ரத்து செய்யக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அ.தி.மு.க சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன்,

    எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மருது பாண்டியர் நகர் ராஜேந்தி ரன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • கவர்னர் ரவியை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • தமிழக ஆளுநருக்கு எதிராக விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    விழுப்புரம்:

    சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு விரோதமாகவும் செயல்படும் கவர்னர் ரவியை பதவியில் இருந்து அகற்றக்கோரி விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி,மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம்,விழுப்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சிவா, ராஜ்குமார், நாராயணசாமி, நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் ராம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் ஐயர் கண்டன உரையாற்றினார்கள் அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் ஆர்.டி. சீனிவாச குமார் தலைமையில் தமிழக ஆளுநருக்கு எதிராக விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • ராமநாதபுரத்தில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாநில பொதுச் செயலாளர் பாலை ரபிக், உள்ளிட்ட பலர் பேசினர்.

    ராமநாதபுரம்

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வழிபாட்டு உரிமை பாது காப்புக்கான ஆர்ப்பாட்டம் ராமநாதபுரத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நடந்தது.

    த.மு.மு.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாகான் ஏற்பாட்டில் மத்திய மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் ஜைனுல் ஆபிதீன், எழுத்தாளர் மதிமாறன், நிர்வாகிகள் வாவா ராவுத்தர், பட்டாணி மீரான் ஷேக் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் சந்தை திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் சோமு, சுலைமான், பொதுச்செயலாளர் ஜமீல், செயலாளர்கள் ஆசாத், நஜ்முதீன் பொருளாளர் ஹசன் அலி, எஸ்.டி.டி.யு. தலைவர் முஸ்தாக் அகமத், மருத்துவ அணி தலைவர் காதர் கனி, வுமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தவ்லத்தியா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் ரபிக் அகமது கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சந்தை திடலில் மாவட்ட தலைவர் சுல்தான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட தலைவர் பாஹிர் அலி வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராவுத்தர் நைனா முகமது, மேற்கு மாவட்ட செயலாளர் சமைய உல்லா, கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா நஜிமுதீன், மேற்கு மாவட்ட பொருளாளர் முகைதீன் அப்துல்காதர், கிழக்கு மாவட்ட துணை தலைவர் கீழை முகம்மது சிராஜுதீன், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரசாக் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் பாலை ரபிக், உள்ளிட்ட பலர் பேசினர்.

    • திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    உள்ளாட்சி ஊழியர்க ளுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கவும், நிலு வையில் உள்ள ஊதியத்தை வழங்கவும் வலியுறுத்தி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கப்படும் என, முதல்- அமைச்சர் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். பொதுவான பணிநிலை அரசாணைப்படி உள்ளா ட்சி அமைப்புகளில் பணி புரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமுறை நிகழ்வாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் சகாயராஜ் நன்றி கூறினார்.

    ×