என் மலர்
நீங்கள் தேடியது "Died"
- உதவி கேட்டு சத்தம் போட்டும் யாரும் அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
- விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆஸ்பத்திரி 5 நிமிட தூரத்தில் தான் உள்ளது.
மும்பை :
அவுரங்காபாத்தை சேர்ந்தவர் சுனில் காலே (வயது31). ஜால்னா ரோட்டில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் டீ கேனுடன் கடை அருகில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜவகர்நகர் போலீசார் வாலிபர் மீது மோதிய வாகனத்தை அடையாளம் காண சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வாகனம் மோதி அடிபட்டு சுமார் ½ மணி நேரம் உதவி கிடைக்காமல் ரோட்டில் கிடந்தது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, வாலிபர் சாலையை கடந்து செல்ல முயன்ற போது அவர் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த லாரி நிற்காமல் சென்றுவிடுகிறது. லாரி மோதி பலத்த காயமடைந்த வாலிபர் ரோட்டில் விழுந்தார். அவர் உதவி கேட்டு சத்தம் போடுகிறார். ஆனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொது மக்கள் யாரும் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முன்வரவில்லை. சாதாரணமாக வாலிபரை கடந்து சென்றனர். சிலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
இந்தநிலையில் வாலிபர் வேலை பார்த்த டீக்கடை உரிமையாளருக்கு தகவல் கிடைக்கவே அவர் ஓடி வந்து, சுனில் காலேயை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்க்கையில் மனித நேயம் மரித்து போய் விட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து சுனில் காலேவின் தம்பி அமோல் கூறுகையில், " நான் எனது அண்ணன் மற்றும் பார்வையிழந்த தங்கையுடன் வசித்து வந்தேன். சம்பவத்தன்று நான் ஜல்னா சென்று இருந்தேன். காலை 10.30 மணிக்கு அண்ணன் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்தது. வந்து பார்த்த போது அவர் உயிரிழந்துவிட்டார். எனது அண்ணனை உரிய நேரத்தில் கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் கூறினர். விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆஸ்பத்திரி 5 நிமிட தூரத்தில் தான் உள்ளது. யாராவது அவரை விபத்து நடந்தவுடன் ஆஸ்பத்திாியில் சேர்த்து இருந்தால் பிழைத்து இருப்பார்" என வேதனையுடன் தெரிவித்தார்.
- பாம்பு கடித்து பெண் பலியானார்
- ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது சம்பவம்
கரூர்:
குளித்தலையை அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு (வயது 40), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (வயது 35). இவர், கடந்த 7ம் தேதி அய்யம்பாளையம் முருகேசன் என்பவரது சோளக்காட்டில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சோளத்தட்டையில் இருந்த பாம்பு, சசிகலா காலில் கடித்தது. இதையடுத்து, குளித்தலை அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். பிச்சைக்கண்ணு கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெயிண்டர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- கொலையா போலீசார் விசாரணை
கரூர்:
கரூர் மாவட்டம், வெள்ளியணை தாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் அன்பு செல்வன் (வயது 40). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் காந்தி கிராமம், தமிழ்நகர் பகுதியில், கரூர் - திண்டுக்கல் ரெயில்வே வழித்தடத்தில் காயங்களுடன் அன்புசெல்வன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அன்புசெல்வன், ரெயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து வீசி சென்றிருப்பார்களா என்ற கோணத்தில்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அன்பு செல்வனுக்கு சாரதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
- சண்முகராஜ் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் நெல்லை மேலப்பாளைம் நத்தம் பகுதியை சேர்ந்தது என்பது தெரியவந்தது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 36). லாரி டிரைவர்.
இவர் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு நோக்கி வந்து கொண்டிருந்தார். வில்லிச்சேரி நாற்கர சாலையில் வந்தபோது நடந்து சென்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் சண்முகராஜூம், நடந்து சென்றவரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த வாகனம் இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
வாகனம் அடையாளம் தெரிந்தது
நடந்த சென்றவர் அப்பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரது பெயர் விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி அங்குள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து நிற்காமல் சென்ற வாகனம் குறித்து காட்சிகளை பார்வையிட்டார்.
அப்போது அந்த வாகனம் நெல்லை மேலப்பாளைம் நத்தம் பகுதியை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் அதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடிப்படியில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர்.
- கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 42). மாடிப்படியில் தவறி விழுந்து மயக்கம் அடைந்தார். அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக அவரது மகள் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகில் உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தகுமார் (41). மாடிப்படியில் தவறி விழுந்தவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.dwa
- இறந்த கணவரின் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவியும் உயிரிழந்தார்.
- இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள துவரவல் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31). இவரது மனைவி வினிதா(25). 3 ஆண்டுகளுக்க முன் திருமணமான இவர்களுக்கு 2 வயது மகள், 7 மாத மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப த கராறு காரணமாக திருநாவுக்கரசு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநாவுக்கரசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்க பிறகு திருநாவுக்கரசு உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஊர் முச்சந்தியில் உடல் இறக்கிவைக்கப்பட்டபோது, அங்கு மனைவி வினிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது வினிதா திடீரென மயங்கி விழுந்தார்.இதனை அடுத்து கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வினிதா, ஏற்கனே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை பார்த்த மனைவியும் ம யங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நண்பர்களுடன் குளிக்க சென்ற போது சம்பவம்
- மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியானார்
கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் அபினேஷ்(19). இவர் கரூர் அரசு கலைக்கல்லுாரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் பள்ளபட்டி நங்காஞ்சி தடுப்பணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அபினேஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது விபரீதம்
- தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் தெற்கு பகுதியை சேர்ந்த தம்பதியர் மகாவிஷ்ணு, காளியம்மாள். இவர்களுக்கு சாகீப்தியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சாகீப்தியா அருகில் தண்ணீர் நிரப்பப்பட்ட அன்ன கூடையில் தலைக்குப்புற விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். வீட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக் மோதி சிறுமி பலியானார்
- சாலையோரம் நின்று கொண்டிருந்தார்
கரூர்:
கடவூர் மத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது மகள் வழி பேத்தியான கிருத்திகா(வயது6) என்ற சிறுமியை தன் வீட்டில் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி அருகில் உள்ள பால்வாடிக்குச் சென்று உணவு அருந்திவிட்டு வீடு திரும்புவதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் சிறுமி துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கிருத்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் பைக் ஓட்டி வந்த திருச்சி வி.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் மகேஸ்வரன் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீழசெவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள ஆவிணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜ கேசரி (வயது 68). இவர் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது மகன் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றில் தியாகராஜ கேசரியின் உடல் கிடப்பதை பார்த்துள்ளார். உடனடியாக சுப்பிர மணியன் திருப்பத் தூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பெரி.கணேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த தியாகராஜ கேசரியின் உடலை மீட்டு கீழச் செவல் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சீருடை அணிந்த நிலையிலே தூய்மை பணியாளர் பட்டு உயிரிழந்தார்
- ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பட்டு(வயது 53). இவர் வேப்பந்தட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது தனது சக தூய்மை பணியாளர்களிடம், தனது உயிர் பிரிந்தாலும், துப்புரவு பணியாளர் சீருடையில் இருக்கும்போதே பிரிய வேண்டும் என்று பலமுறை கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பட்டு உயிரிழந்தார். அவர் உயிர் பிரியும் நிலையில் தூய்மை பணியாளர் சீருடையிலேயே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் பலியானார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தொட்டியம் :
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் ஊராட்சி வேந்தன்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பழனியாண்டி (வயது 55) இவருக்கு மனைவி, மகன்கள் பாஸ்கர், பரமசிவம் (26) மற்றும் வளர்மதி என்ற மகளும் உள்ளனர். பாஸ்கரன் மற்றும் வளர்மதிக்கு திருமணமாகிவிட்டது. பரமசிவத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் இவருக்கு மது குடி பழக்கம் இருந்து வந்தது. சம்பவதன்று ஏழூர்பட்டியில் இருந்து மது வாங்கி வந்து அதில் வயலுக்கு அடிக்கும் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்பு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் பரமசிவம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இருந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் பரமசிவத்தின் தந்தை பழனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.