என் மலர்
நீங்கள் தேடியது "dies"
- சத்துணவு பணியாளர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
- அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.
கரூர்
கரூர் மாவட்டம், தோகை மலை அருகே உள்ள பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கப்பட்டியை சேர்ந்தவர் ஆரியமாலா (வயது 45). இவர் தெலுங்கப்பட்டி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் சத்துணவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் ஆரியமாலா பள்ளிக்கு வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். தெலுங்கப்பட்டி முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தகவலின் பேரில் ேதாகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆரியமாலாவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தோகைமலை போலீசார் ஆரியாமாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
- லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
கரூர்
நச்சலூர் அருகே உள்ள தமிழ்ச்சோலையை சேர்ந்தவர் முத்தன் (வயது 56). இவர் கடந்த 24-ந்தேதி நெய்தலூர் காலனிக்கு செல்வதாக அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். மந்தையூர் பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முத்தன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்தன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து முத்தனின் மகன் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓட்டல் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
- நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் ராஜதுரை(வயது 22). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று விடுப்பு எடுப்பதாக ஓட்டலுக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள வாடகை வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தங்கி இருந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நேற்று மாலை அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து, கதவை திறந்து பார்த்தனர். அப்போது ராஜதுரை பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது
- வழிமாறி வந்துள்ளது.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி அருகே வீரமங்களம் ஊராட்சிக்குட்பட்ட சின்னசெங்கீரை கிராம பகுதிக்குள் ஆண் புள்ளிமான் ஒன்று வழிமாறி வந்துள்ளது. இதனை அப்பகுதியிலிருந்த நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே இறந்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், சம்பவம் குறித்து வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனச்சரக அலுவலர் மேகளா உள்ளிட்ட அதிகாரிகள் இறந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மானின் உடலை அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து வனச்சரக அதிகாரிகள் முன்னிலையில் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் வனவர்கள் அன்புமணி, அந்தோணிசாமி, வேட்டைத் தடுப்பு காவலர் மரியசைமன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர். வழிமாறி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விஷம் குடித்து பெயிண்டர் உயிரிழந்தார்
- தனியாக வசித்து வந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 51), பெயின்டரான இருவக்கு, பழனியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, மகாலிங்கம் தனியாக வசித்து வந்தார். இதனால், மனமுடைந்த மகாலிங்கம், சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தார்
- புல் செடி கொடிககளை அகற்றும் போது சம்பவம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டிவிடுதி எஸ்.மேலப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 52). லாரி டிரைவர். இவர் அப்பகுதியில் உள்ள ஸ்ரீ பொந்து மாரியம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள ஆல மரக்கன்று மற்றும் புல் செடி கொடிககளை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ரெங்கசாமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செம்பட்டி விடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.
- மின்னல் தாக்கி 3 பேர் பலியானார்கள்
- பள்ளியில் இருந்து வந்த போது சம்பவம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் சஞ்சய் (வயது 18) மகள் சஞ்சனா (16) இருவரும் திருப்புனவாசலில் உள்ள ஒரு தனியார்ப்பள்ளியில் முறையே 12 மற்றும் 10 வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை இருவரும் பள்ளியை முடித்துவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி வளாகத்திலேயே காத்திருந்துள்ளனர். அப்போது சித்தப்பா இளையராஜா (38) இரு சக்கர வாகனத்தில் வந்து இருவரையும் அழைத்து சென்றுள்ளார். 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பழையதோர் சிங்காரகோட்டை கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதில் சஞ்சய், சஞ்சனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளையராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்புனவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து திருப்புனவாசல் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவர், மாணவி உட்பட 3 பேர் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் பலியானார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை
கரூர்:
கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலாயுதம்பாளையம் அருகே ஒரத்தை பிரிவு பகுதியில், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கருரை சேர்ந்த சக்கரவர்த்தி (33) என்பவர் ஓட்டி சென்ற கார், செல்வம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த செல்வம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
- மகன் வீட்டிலேயே தங்கி வசித்துவந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த எசனை தெற்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா(வயது 70). இவரது மனைவி சின்னம்மாள் இறந்துவிட்டதால், தனது மகன் செல்வகுமாரின் வீட்டிலேயே தங்கி வசித்துவந்தார். இந்த நிலையில் சுப்பையா சம்பவத்தன்று இரவு வீடுதிரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் காட்டுமாரியம்மன் கோவில் அருகே உள்ள சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வயல்காட்டில் உள்ள கிணற்று மேட்டில் சுப்பையாவின் காலணிகள் இருந்ததை, நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்வகுமாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனே பெரம்பலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுப்பையா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.
- மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி இறந்து கிடந்தார்
- எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை
திருச்சி:
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உள்ள பழைய தீவிர சிகிச்சை பிரிவு வார்டு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷ செடியை அரைத்து குடித்த பெண் உயிரிழந்தார்.
- வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது
அரியலூர்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி(வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று காலை செந்தமிழ்செல்விக்கு வயிற்றுவலி அதிகரிக்கவே தனது வீட்டிற்கு அருகில் இருந்த விஷசெடியை அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் செந்தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு செந்தமிழ்செல்வியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் காசிநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."
- லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- உடலை மீட்டு போலீசார் விசாரணை
கரூர்:
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை இந்திராகாலனியை சேர்ந்தவர் கணேசன், (வயது 55). லாரி டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர், காரைக்குடியில் இருந்து தைல மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு, சின்னரெட்டிப் பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தைலமரக்கட்டைகளை இறக்கிவிட்டு, அதிகாலையில் க ாகித ஆலைக்கு வெளியே வந்தார். பின்னர் லாரியை சாலையோரம் ஒரு இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு உறங்கிவிட்டார்.
இதையடுத்து மற்றொரு டிரைவரான ஜெயராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது லாரியின் உள்பகுதியில் கணேசன் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், இது குறித்து தோகைமலை போலீசில்
புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.