search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disabled people"

    • இம்மருத்துவ முகாமில் பங்கேற்ற 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
    • இச்சிறப்பு மருத்துவ முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி, அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு மருத்துவ முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறன் சதவீதம் குறித்து அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இம்மருத்துவ முகாமில் பங்கேற்ற 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும், இதுபோன்று மருத்துவ முகாம்கள் இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்திலும்,நாளை 11-ந்தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளிரோடு உடுமலைப்பேட்டையிலும் நடக்கிறது.

    12-ந்தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , 13-ந் தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,16-ந்தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வளமையம், 17 -ந்தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , 18-ந்தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி , 19-ந்தேதி பொங்கலூர் பி.யுவி. என்.தொடக்கப்பள்ளி , 26-ந்தேதி குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி , 27-ந்தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,31-ந்தேதி மூலனூர்அரசு மேல்நிலை ப்பள்ளி மற்றும் 1.11.2023 அன்று திருப்பூர் வடக்கு தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு மருத்துவ முகாம் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். எனவே சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டாரங்கள் தோறும் நடைபெறுவதால் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இம்முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • 11-ந் தேதி உடுமலை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்துகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்துகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை)காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்திலும், 9-ந் தேதி திருப்பூர் அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 10-ந் தேதி தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11-ந் தேதி உடுமலை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இதுபோல் 12-ந் தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 13-ந் தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 16-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வளமையத்திலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 18-ந் தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந் தேதி பொங்கலூர் பி.யு.வி.என். தொடக்கப்பள்ளியிலும், 26-ந் தேதி குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 31-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அடுத்த மாதம் 1-ந் தேதி திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது. ஒன்றிய அளவில் முகாம் நடைபெற உள்ளதால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நாளை முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் முகாம் நடைபெறும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • அரசு மருத்துவமனையில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது
    • மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு மேலாக, கொரோனா பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளியவர்களுக்கு காலை உணவு, சில முக்கிய தினங்களில் மூன்று விலை உணவும் ஆலயம் அறக்கட்டளை நண்பர்கள் குழுவால் வழங்கப்பட்டு வருகிறது.

    சுதந்திர தின ஆண்டினை முன்னிட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும், 25 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் மற்றும் உணவும் சுமார் 25 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஒவ்வொரு நாளும் 200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளை தலைவர் ஏ.கே.குமார் துணை தலைவர் ஆர் கே குமணன் எம்சி செயலாளர் செயலாளர் ஜி.மோகன்ராஜ் பொருளாளர் எஸ் கணேசன் துணைச்செயலாளர் ஜி.மனோஜ் குமார் மற்றும் அறங்காவலர்கள் ஆர்.விக்ரம் ராஜா இயேசுராஜ் சந்தோஷ் குமார் நகர்மன்ற உறுப்பினர் பி.கே.நாடிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் எஸ். சிவா நன்றி கூறினார்.

    • 5 வகையான மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்கள் உள்ளது.
    • இ-சேவை மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறு வதற்கான விண்ணப்பங்கள், வங்கி கடன் மானிய விண்ணப்பங்கள், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட 5 வகை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் அருகே உள்ள இ-சேவை மற்றும் https://tnesevai.in.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
    • 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து வரும் நிலையில் சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகள் யாரிடமும் உதவி கேட்காமல் வங்கி கடன் மூலமாக தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் வங்கி கடன் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றத்துடன் இருந்து வருகிேறாம். கடந்த 2014 - 15-ம் ஆண்டு அன்றைய கலெக்டர் மூலமாக கடன் இல்லாத தொகையாக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பல மாற்றத்தினாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதோடு வாழ்வாதாரம் இல்லாமல் இருந்து வருகின்றோம். ஆகையால் வங்கிகளில் சிறப்பு நிதி திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து மாற்றத்தினைகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன் மேளா நடைபெற்றது.
    • இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் கடனுதவியும், 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த 24 உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன் மேளா நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். புத்தன்தருவை ஊராட்சி தலைவி சுலைகா, துணைத்தலைவர் பிர்தோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் கடனுதவியும், 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த 24 உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சம் கடனுதவியும், 4 விவசாயி உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக ரூ.4 லட்சத்து 38 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் கடனுதவி பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது. புதிதாக 'அ' வகுப்பு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். உறுப்பினர்களுக்கு நிதியியல் பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்க செயலர் அருள்தாஸ் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு 2 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தேசிய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநகர தலைவர் துரை, மாவட்ட செயலாளர் செல்லபாரி, மாநகரச் செயலாளர் லூர்துசாமி, மாவட்ட துணை செயலாளர் திருமலை கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஒன்றிய செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, லதா முருகன், சேகர், வேல்முருகன், முரளிதரன், முத்துலட்சுமி, அனிதா, வேலுமணி, செந்தில்குமார், ராசப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் நெடுவை சரவணன் கண்டன உரை ஆற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் , வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஊத்துக்குளி வட்டார 3 ஆவது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் ஊத்துக்குளி வட்டார 3 வது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டுக்கு அச்சங்கத்தின் வட்டார அமைப்பாளா் ஆா்.மணியன் தலைமை வகித்தாா்.இதில்தமிழக அரசு மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

    விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்மாா்ட் அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை வழங்குவதுடன், முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.வீடில்லாத அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • திருவாரூரில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
    • யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை,

    தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
    • ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல்கள் 4 பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    23.05.2023 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையம் கூட்ட அரங்கில் (GDP HALL) நடைபெற உள்ளது.

    இம்முகாமில் தேசிய அடையாள டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடைந்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆண்டு செயல்திட்டத்தின்படி, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அங்காடி அமைக்க விண்ணப்பிக்க, சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட, விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும். சுயஉதவிக்குழு, தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையதளத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். சுயஉதவிக்குழு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். தொடர்ந்து ஒருவாரத்துக்கு மேல் வாகன அங்காடியை இயக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும். பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்களை திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், அறை எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
    • இதுவரை திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தி அடைந்த வயது முதிர்வு உதவித் தொகைக்கு ரூ. 231 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு வழங்கி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி டூவிபுரத்தி லுள்ள எம்.எல்.ஏ. அலுவல கத்தில் சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

    மாதந்தோறும் ரூ. 1,500

    இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 50 மாற்றுத்தி றனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறுவ தற்கான ஆணையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சமூகபாது காப்பு திட்ட தாசில்தார் ராஜசெல்வி, தாசில்தார் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர்கள் வேல்ராஜ், செல்லம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள் அமலதாசன், ராஜலட்சுமி, பரமேஸ்வரி, திருவரங்க செல்வி, செந்தில்கு மார், நட்டார் செல்வம், மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

    முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் சிறப்பான திட்டங்களில் ஒன்றான மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பேர் பயன்பெறும் வகையில் மாதம் ரூ. 1,500 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வழங்கி உள்ளோம்.

    கூடுதலாக முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க வருவாய் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து பேசி கூடுதலாக வழங்குமாறு கேட்டு இருக்கிறோம். அவர்கள் முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அதன் மூலம் நம்முடைய மாவட்டத்தில் இன்னும் கூடுதலாக பயனாளிகள் பயன் பெறுவார்கள்.

    பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு உதவுத்தொகை பெற, விண்ணப்பித்து வைத்திருக்கும் பாண்டு பேப்பரை பெற்றோர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்து முதிர்வு உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கும் அதிகமாக இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள்.

    இதுவரை திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தி அடைந்த வயது முதிர்வு உதவித் தொகைக்கு ரூ. 231 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு வழங்கி உள்ளது. இதுவரை பெண் குழந்தைகளுக்கான முதிர்வு உதவித் தொகையை பெறாத பெற்றோர்கள், உடனே அருகில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    பேட்டியின் போது தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் பாஸ்கர், கருணா, மணி, அல்பட், அற்புதராஜ், முன்னாள் அறங்காவலகுழு உறுப்பி னர் அறிவழகன், வட்டச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×