என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dmk executive"
- அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
- சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் தி.மு.க. 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் ஆட்களை நியமித்து பணியாற்றி யார்-யார் எந்த கட்சியை சார்ந்தவர் என பட்டியல் எடுத்து அதற்கேற்ப வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஒவ்வொரு தெருவிலும் யார் யார் உள்ளூர்காரர் யார் வெளியூர்காரர் என எங்கு ஓட்டு போடுவார்கள் என்பதை அறிந்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொருவரும் சொந்த பணத்தை செலவு செய்து கலக்கத்தில் பணியாற்றி வருகின்றனர்.
வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் சேரும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருந்ததுடன், அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதன் காரணமாக உள்ளாட்சி பொறுப்பில் உள்ள பகுதி கழக, ஒன்றிய, நகர பேரூர் சட்டமன்ற கழக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர். முக்கியமான பணிகளுக்கு மட்டுமே வேட்பாளர் பணம் கொடுப்பதால் மற்ற தேர்தல் செலவுகளுக்கு அந்தந்த உள்ளூர் நிர்வாகிகளே பணம் செலவு செய்வதை காண முடிகிறது.
- திடீரென அந்த கும்பல் ஆராமுதனின் கார் மீது வெடிகுண்டுகளை வீசியதும் இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கி ஓட்டை விழுந்தது.
- கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
ஈரோடு:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆரா முதன் (வயது 54). இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். தற்போது காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பெருமாள் கோயில் எதிரே காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு தனது காரில் ஆராமுதன் சென்றார்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய ஆராமுதன் அவருடன் வந்த 2 பேருடன் சாலை ஓரத்தில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது காரில் வேகமாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆராமுதனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். மேலும் அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆராமுதனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆராமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற த்தில் இக்கொலை தொட ர்பாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி பிரிவு டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 22), மண்ணிவாக்கம் கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சத்தியசீலன் (20), திருப்பூர் மாவட்டம் அவிநாசி ராக்கியபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த சம்பத்குமார் (20), அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேர் சரண் அடைந்தனர்.
இதையடுத்து சரணடைந்த 5 பேரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
- அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.
சென்னை அடுத்த வண்டலூரில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக நிர்வாகி ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதையடுத்து, திமுக நிர்வாகி ஆராமுதனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திமுக நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார்.
- விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு தி.மு.க செயலாளராக இருந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சுனோதா. இவர் கம்பம் நகர்மன்ற தலைவியாக உள்ளார். செல்வக்குமார் நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் அதிகளவில் முதலீடுகளை பெற்றார்.
மேலும் தனியார் பல்பொருள் அங்காடி, பேஷன்ஸ் கடை ஆகிய நிறுவனங்களையும் கம்பத்தில் நடத்தி வந்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற வைப்புத்தொகையை திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்வதாக தேனி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.
இதனிடையே செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார். இவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 8-ந்தேதி விசாரித்து வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் துணை கண்காணிப்பாளர் மணிஷா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரூ.5.50 லட்சம் ரொக்கம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5.80 லட்சமாகும். விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 30). மாணவரணி தி.மு.க. அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருந்தனர்.
மணிகண்டபிரபுவின் மனைவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் மணிகண்டபிரபு இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்த கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மணிகண்ட பிரபுவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அது தவிர இவர் அதே பகுதியில் சிறு தொழில் ஒன்றையும் செய்து வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வேதனையில் இருந்துள்ளார்.
இதனால் அவர் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை திறந்து இருந்தது. அந்த கடையை அடைக்குமாறு தி.மு.க.வினர் மிரட்டல் விடுத்தனர்.
எனவே கடையை அடைக்கச்சொல்லி மிரட்டியதாக கடையின் உரிமையாளர் பிரவீன் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டார் போலீசார் தி.மு.க.வினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் 19 பேரில் ஒருவரான தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான கோதை கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 18 பேரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்