என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dmk leader"
- தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
- மனு தாக்கலின்போது அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் தளபதி வாழ்க என்று முழக்கமிட்டனர்.
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தலை நடத்தி அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். அதன்படி தி.மு.க.வின் 15-வது உள்கட்சி பொதுத் தேர்தல் நடந்து வருகிறது.
தேர்தலில் கிளை கழகம், பேரூர், ஒன்றியம், நகரம், வட்டம், பகுதி மாநகரம் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதன் அடுத்தகட்டமாக தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க வருகிற 9-ந் தேதி சென்னையில் பொதுக்குழு கூடுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டம் 9-ந் தேதி காலை 9 மணிக்கு கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் லிங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இந்த பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று பெறப்பட்டது.
இதில் தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார். அப்போது தலைமை நிலைய செய லாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, மற்றும் ஜெயக்குமார் பத்மநாபன் உடன் இருந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தினார். அவரது மனுவை 5 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்திருந்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் வழி மொழிந்திருந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தபோது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
மனு தாக்கலின்போது அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் தளபதி வாழ்க என்று முழக்கமிட்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுதாக்கலுக்கு முன்பு மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி, அண்ணா நினைவிடங்களுக்கு சென்று வணங்கி மரியாதை செலுத்திவிட்டு அறிவாலயம் வந்திருந்தார்.
தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தாலும், அவரது பெயரில் ஒவ்வொரு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர்களும் மனு செய்தனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மொத்தம் 32 விருப்ப மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் வழங்கினார். சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் மொத்தம் 8 விருப்ப மனுக்கள் மு.க.ஸ்டாலின் பெயரில் கொடுக்கப்பட்டது.
காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழிகாட்டுதல் படி மாவட்ட துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு கொடுத்தார். அவருடன் தலைமை செயற்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், து.மூர்த்தி, காமராஜ் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அ.தமிழ் மாறன், ரஞ்சன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.
இதேபோல் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக போட்டி போட்டு மனு கொடுத்து பணம் கட்டினார்கள். இதனால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் களைகட்டி இருந்தது.
அண்ணா அறிவாலயத் தில் இன்று தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கோவை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு கோவை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இரவு 8.30 மணிக்கு கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் அவினாசி சாலையில் உள்ள லீமெரிடியன் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் செல்கிறார்.
இதுதொடர்பாக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரூரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு கோவை வருகிறார்.
அவரை வரவேற்பதற்காக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், தைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர் கள், நிர்வாகிகள் அனைவ ரும் திரளாக விமான நிலையத்துக்கு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #mkstalin
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (வயது 47), தி.மு.க. பிரமுகர். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (36). இவர் சுந்தரவடிவேலிடம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் சுந்தரவடிவேலுவிடம் தகராறு செய்தார்.
இதுகுறித்து சுந்தரவடிவேல் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்றிரவு சேலத்துக்கு வந்தார். மாவட்ட எல்லையான தலைவாசலில் அவருக்கு செண்டை மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தலைவாசல் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர். பின்னர் அவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசியதாவது:-
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். தமிழகத்தில் ஒரு எடுபிடி ஆட்சி நடக்கிறது. மாநில உரிமைகளை பறிகொடுக்கும் மத்திய அடிமை ஆட்சியை பற்றி மக்களிடம் எடுத்து செல்லும் மாபெரும் ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நானும் வந்துள்ளேன்.
பல்வேறு பொறுப்புகளை ஏற்ற நிலையில் சேலம் வந்திருக்கிறேன் அதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று முதன் முதலாக சேலம் மாவட்டத்துக்கு வந்த எனக்கு உற்சாகமளித்து ஊக்கத்துடன் நீங்கள் வரவேற்பு அளித்துள்ளீர்கள். இது இன்னும் சிறப்பாக பணியாற்று என்று என்னை ஊக்கப்படுத்துவதாக இருந்தது.
என்ன தான் பல பொறுப்புகளை ஏற்றாலும் ஏன் தலைவர் பொறுப்பை வகித்தாலும் என்றும் உங்களின் ஒருவனாக பணியாற்றுவேன் என்று பொதுக்குழுவில் அளித்த அதே உறுதியை தான் இங்கும் தருகிறேன்.
எப்படி சிறப்பான வரவேற்பு அளித்தீர்களோ? அதே போல நாளை (இன்று) நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், எழுச்சியோடும், உணர்ச்சியோடும், உத்வேகத்தோடும் அனைவரும் வரவேண்டும். உங்களை அங்கு காண காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட்டதற்கு த.மா.கா. சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் தலைமையில் தி.மு.க. நன்கு வளர்ச்சியடையும். கருணாநிதி எதிர்கொண்ட சவால்களை சமாளிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்வார் என நம்புகிறேன்.
சமீபத்தில் மேட்டூர் அணை நிரம்பியதும் அதிகளவு உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டதால் சுமார் 100 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு சென்று வீணானது. மணல் கொள்ளையால் முக்கொம்பு, கொள்ளிடம் மதகுகள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கின்றன. எனவே காவிரி, கொள்ளிடம் உள்பட அனைத்து பகுதியிலும் ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும். மேலும் மேட்டூர் அணை, கல்லணை போன்ற பழமை வாய்ந்த அணைகள் மற்றும் பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். காவிரி ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியபோதும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை.
விவசாய மக்களை அவலநிலைக்கு தள்ளிய பழி பொதுப்பணித்துறையையே சாரும். நீர்நிலை மேலாண்மையில் தமிழக அரசின் மெத்தனபோக்கு தெளிவாக தெரிகிறது. ஏரி-குளங்கள் ஆங்காங்கே வறண்டு கிடக்கின்றன. மதகு, கதவு, ஷட்டர் பழுதாகி உள்ளன. இதன் மூலம் காவிரி பாசன பகுதியில் 25 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. தண்ணீர் விரயமாவதை தடுக்க ராசிமணல் அை-ணையை உடனே கட்ட வேண்டும். மாணவ, மாணவிகளின் கல்விக்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
மணல் கொள்ளையால் திருச்சி காவிரி ஆற்றில் மதகுகள் உடைந்தது என்பதை ஏற்று கொள்ள தயங்கினால் அரசின் மீதான சந்தேகம் வலுத்து கொண்டே தான் போகும். த.மா.கா.வை பொறுத்த வரையில் கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு தனிதன்மையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து ஆலோசனை செய்து, ஒத்த கருத்து ஏற்படக்கூடிய கட்சிக்கு ஆதரவு அளிப்போம். சுற்றுப்பயணம் செய்து கட்சியின் பலம், பலவீனத்தை அறிந்து வருகிறோம். இது வரை 48 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வருகிற டிசம்பருக்குள் அனைத்து தொகுதிகளிலும் பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #DMKThalaivarStalin #GKVasan
சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முறைப்படி அறிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1969-ம் ஆண்டு பதவியேற்றார். கடந்த 7-8-2018 அன்று அவரது உயிர் பிரியும் வரை அக்கட்சியின் தலைவராக நீடித்தார்.
பின்னர், பிற்பகலில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின் தந்தை பெரியாரின் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு சென்ற அவர் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதிகளில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சென்ற இடங்களில் எல்லாம் ஏராளமான கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாக மிகுதியால் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
அகில இந்திய இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள். அரசியலில் நீங்கள் தொடங்கும் புதிய அத்தியாயம் மகிழ்ச்சியுடன் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
தி.மு.க கழகத்தின் தலைவராக எனது சகோதரர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக வரவேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் அமைத்துக் கொடுத்திருக்கிற அரசியல் பாதையில் மு.க.ஸ்டாலின் பீடுநடை போட்டு தி.மு.க. கழகத்தை வளர்ச்சிப் பாதையில் நிச்சயம் அழைத்துச் செல்வார்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி 1944 ஆகஸ்ட் 27-ந்தேதி சேலம் மாநகரில் திராவிடர் கழகம் பிறந்தது. கிட்டதட்ட அதே காலகட்ட நாளில் தி.மு.க.வின் தலைவராக பாசமிகு மு.க.ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டது, எத்தகைய வரலாற்று பொருத்தம்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உலக வரலாற்றில் எங்கும் காணமுடியாத வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட இயக்கத்தை பாதுகாக்க தமிழ்நாட்டின் நலன் காக்கவும், மாபெரும் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், பாட்டாளிகளின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக நீதிக்காகவும் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பயணத்தை தொடர வாழ்த்துகிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. தலைவராக இருந்து அரை நூற்றாண்டு காலம் அந்தக் கட்சியை வழிநடத்திய சமத்துவப் பெரியாரால் கலைஞர் அடுத்த தலைவர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டவர். இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு உதாரணமாக திகழும் தி.மு.க.வின் மரபுப்படி இன்று தேர்தல் மூலம் மு.க. ஸ்டாலின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற கொள்கை வெளிச்சத்தில் கட்சியை மட்டுமின்றி வெகு விரைவில் நாட்டையும் வழிநடத்த வாழ்த்துகிறோம்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- இளம்வயது முதல் கடின உழைப்பால், தொடர் பணியால், விடா முயற்சியால் 50 வருடங்களுக்கும் மேலாக பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க.வின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகனுக்கு த.மா.கா.சார்பில் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். கலைஞரின் வாரிசு என்பது உண்மை. அது ஒரு கூடுதல் தகுதி மட்டுமே! எனக்குத் தெரிந்து 1975-77 அவசர நிலைக்காலத்திலும் அதற்கு முன்பும் அரசியல் பணியாற்றியவர். சிறை சென்றவர். சித்ரவதைக்கு உள்ளானவர். கடந்த பல ஆண்டுகளாகக் கட்சிக்காக கடுமையாக உழைத்துப் பணி ஆற்றியவர். என்கின்ற தகுதிகளின் அடிப்படையில் இன்று கலைஞர் அமர்ந்த நாற்காலியில் அமர இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க வில் அடிமட்ட தொண்டனாக தமது அரசியல் பயணத்தை துவங்கி படிப்படியாக முன்னேறி செயல் தலைவர் பொறுப்பினை ஏற்று மிகவும் சிறப்பாக பணியாற்றி வந்தார்.
எல்லோரிடமும் அன்புடன் பழகும் பண்பாளர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிகாட்டு தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் கழகத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி சென்று மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
சமத்துவ மக்கள் கழக நிறுவனர், தலைவர் நாராயணன், முத்தமிழறிஞர் கலைஞர் ஆசியுடன் தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்று தொண்டர்களை அரவணைத்து பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DMKThalaivarStalin #MKStalin
தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க. ஸ்டாலினை பொதுக்குழுவில் நிர்வாகிகள் மொத்தம் 18 பேர் வாழ்த்தி பேசினார்கள்.
மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசும் போது கூறியதாவது:-
இங்கு பேசியவர்கள் தளபதி தியாகத்தை பற்றி பேசினார்கள். கட்சி தலைமை பொறுப்பை அவர் ஏற்றதற்கு பாராட்டு தெரிவித்தார்கள்.
கலைஞருக்கு பிறகு இந்த பேரியக்கத்தை வழிநடத்த தளபதிதான் இருப்பார் என்பதில் யாருக்கும் கிஞ்சித்தும் சந்தேகம் இருந்தது இல்லை. இன்று அவர் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டு இருப்பது ஒரு சடங்குதான்.
அவர் நம் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. ஒவ்வொரு தொண்டனும், அடடா இவர்தான் என் தலைவர் என்று பெருமையோடு சொல்லும் அளவுக்கு தளபதியின் உழைப்பு அமைந்துள்ளது. அந்த தொண்டர்களுடன் நானும் பெருமைக் கொள்கிறேன்.
காவிரி ஆஸ்பத்திரியில் கலைஞர் அனுமதிக்கப்பட்டபோது ஒருநாள் நலமாகவும், மற்றொரு நாள் உடல்நலம் குன்றி விட்டதாகவும் டாக்டர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு கலைஞர் உடல்நிலை இருந்தது.
கலைஞருக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவரது ஒரே ஆசையான அண்ணா நினைவிடத்தில் கலைஞரையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை நிறைவேற்ற தளபதி முடிவு செய்தார். இதற்காக பலருடன் தளபதி பேசினார்.
அந்த நேரத்தில் கூட அ.தி.மு.க. அரசு அவரை தத்தளிக்க விட்டதை அருகில் இருந்து பார்த்தவள் நான். முதல்-அமைச்சரை பார்த்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்தபோது, 1 மணி நேரத்தில் அதிகாரிகளுடன் பேசிவிட்டு கூறுவதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். ஆனால் 1 மணி நேரத்தில் அவர் பேசவில்லை.
அதற்கு பதில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞருக்கு இடம் இல்லை என்று தலைமை செயலாளரிடம் இருந்து அறிக்கைதான் வந்தது. அது நமக்கு இடிபோல இருந்தது. நாங்கள் துடிதுடித்து போனோம்.
மெரீனாவில் போய் தொண்டர்களுடன் சென்று உட்காரலாம் என்று நான் ஆவேசமாக கூறினேன். ஆனால் தளபதி அந்த சமயத்தில் ஆவேசப்படவில்லை. அமைதி காத்தார்.
இக்கட்டான நேரத்திலும் கூட அவர் கோபப்படவில்லை. நிதானமாக யோசித்து தனது செயல்பாட்டை காட்டினார்.
அவர் மட்டும் கோபப்பட்டிருந்தால் லட்சோப லட்சம் தொண்டர்கள், இளைஞர்கள் திரண்டிருப்பார்கள். இந்த அரசால் அதை கட்டுப்படுத்தி இருக்க முடியாது. துப்பாக்கி சூடு நடந்திருக்கும். தளபதி கடமை, கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, அதை தவிர்த்தார்.
கட்சியிலும் தளபதியாக செயல்பட்டு பிரதமரையே திருப்பி அனுப்பியவர், இன்று நமது தலைவராக நிமிர்ந்து நிற்கிறார். அவர் அன்று கோபப்பட்டிருந்தால் தமிழகமே அவர் பின்னால் அணிவகுத்து வந்து இருக்கும்.
மெரீனாவில் மறியல் நடந்து இருந்தால் என்னவெல்லாமோ நடந்து இருக்கும். ஏனென்றால் இந்த அரசுக்கு மனசாட்சி இல்லை. அந்த நிலையில் மற்றவர்கள் கஷ்டப்படுவதை தளபதி விரும்பவில்லை.
எனவே தமிழகத்தை தலைநிமிர்ந்து நடத்த எழுந்து வா தலைவா, எங்களை வழிநடத்து என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #MKStalin #Kanimozhi #DMKThalaivarStalin
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி.
கருணாநிதியை போலவே இளம் வயதில் இருந்தே பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்தவர் ஸ்டாலின். கருணாநிதியின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சமூக நீதியை காக்கவும் ஸ்டாலின் செயல்பட வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
டெல்டா மாவட்டங்களில் காவிரியில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் செல்லும்போதும் கடைமடைக்கு தண்ணீர் வராததற்கு குடிமராமத்து தூர்வாருதல் போன்றவைகளில் நடைபெற்ற முறைகேடுகளே காரணம். பொதுப்பணித்துறை முற்றிலுமாக தோற்றுவிட்டது. இவ்வளவு தண்ணீர் வந்தும் “கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் பைத்தியக்காரனை போல” விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. மத்தியிலுள்ள அரசையும் மாநில அரசையும் தோற்கடிக்கவேண்டிய நிலையில் மாற்றத்திற்கான வழியில் இடதுசாரிகள் உள்ளோம்.
இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை செயல்படுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும், இல்லை எனில் இதை காவல் துறையினர் தவறாக பயன்படுத்த நேரிடும்.
மத்திய அரசை பொறுத்தவரை காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது. அதன் காரணமாகவே காவிரி விவகாரத்தில் அவர்கள் நல்ல அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றவும் உறுதியாக உள்ளனர். தமிழக அரசு நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் சதித்திட்டங்களுக்கு துணை போக கூடாது. இங்கே தூர்வாராமலும், கடைமடைக்கு தண்ணீர் செல்லாமலும் இருக்கிற நிலைகளை பார்க்கும்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு துனை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனை அரசு தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Mutharasan
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்