என் மலர்
நீங்கள் தேடியது "Drainage"
- மின்விளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் அச்சம்.
- மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் 14 வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது கவுன்சிலர் ஜெயந்தி பாபு தலைமை வைத்தார் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 14வது வார்டில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருளில் மது பிரியர்கள் மது குடித்து வருவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே அனைத்து மின் விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டன கூட்டத்தில் 14 வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
- தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி.
- ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது.
திருத்துறைப்பூண்டி:
தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் இந்தாண்டு பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், உதவி இயக்குனர் இளவரசன் ஆலோசனையின்படி,
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க நிகழ்ச்சி கொறுக்கை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமையில், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் பனைவிதை நடும்பணியை தொடக்கி வைத்தார்.
தோட்டகலை அலுவலர் மதுமிதா திட்டம் குறித்து கூறும்போது:- பனை மரத்தை பாதுகாக்கவும், அதன் பயன்களை நம் சந்ததிகளுக்கு கிடைக்கும் வகையில், தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகளை 32 ஊராட்சிகளில் நடும் பணி செயல்படுத்தப்படவுள்ளது.
அரசுக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் தோட்டகலை உதவி அலுவலர் கார்த்தி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்,
- மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கழிவுநீர் ஆறாக ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பக்தர்கள் வெறும் காலில் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் சித்திரை வீதிகள் முழுவதும் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்கள் பக்தர்களின் கால்களை பதம் பார்க்கின்றன. இதனால் பக்தர்கள் காலணி அணிந்தபடி கிரிவலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு சித்திரை வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி ஆறாக வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் முகச்சுளிப்புடன் அந்தப் பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அங்குள்ள கடை வியாபாரிகள் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் ஓராண்டாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தோம். எந்த வித நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.
- 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்துள்ளனர்.
இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பயிர்களைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.
பயிர்களை சுற்றி தேங்கியுள்ள மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், இந்தப் பகுதிக்கு வடிகாலாக திகழும் அழிஞ்சியாறு சென்ற வருடம் தூர்வாரப்பட்ட நிலையில், மீண்டும் வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.
சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ள இந்த அழிஞ்சியாறு வாய்க்காலில் தண்ணீர் சீராக சென்று சேர முடியாத அளவுக்கு புல் மற்றும் செடிகள் மண்டி கிடந்தன.
இதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட விவசா யிகளே ஒன்றிணைந்து கோரை புற்களை அகற்றி வாய்க்காலை சீரமைக்க முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.
தற்போது விவசாயிகள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை அகற்றி உள்ளனர்.
இந்த வாய்க்காலை தூர் வாரிய செலவினத்தை அதிகாரிகள் வழங்கவும், மேலும் தொடர்ந்து வாய்க்காலை முழுவதுமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
- அம்மாலூர் கிராமத்தில் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.
- பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் எடையூர் வருவாய் கிராமத்தை சேர்ந்த அம்மலூர் கிராமம், வாடி காலனி கிளைதாங்கி ஆற்று கரையை ஒட்டி அமைந்துள்ளது.
இது சுற்றுப்பகுதி கிராமங்கள் விட மிகவும் பள்ளமான கிராமம். தற்போது பெய்த தொடர் மழையால் கிராமத்தில் சேர்ந்த 450 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் முழ்கி உள்ளது.
2 நாட்களின் நீர் வடிந்தால் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். மேடான சித்தாளந்தூர், கடுவெளி, வெள்ளங்கால் கிராமங்களில் தண்ணீர் வடிந்து பிறகு தான் அம்மாலூர் கிராமத்தின் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.
அதற்குள் பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரி சாமிநாதன் ஆய்வு செய்தார்.
எனவே இதற்கு மாற்று ஏற்பாடாக மின்சார பம்பு செட்டு அமைத்து மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வடிகால் ஆற்றில் இறைத்து இக்கிராம விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் அம்மலூர் கிராம கமிட்டி தலைவர் ராஜமாணிக்கம், பழம் பாண்டி ஆறு பாசன கமிட்டி தலைவர் மோகன், விவசாயிகள் பாண்டி, கேட்டடி துரைராஜ், பூமிநாதன், ஜெயராமன், கணேசன், இளங்கோவன், பாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரையில் மீனாட்சிஅம்மன் கோவில் முன்பு தேங்கிய சாக்கடை நீர் அகற்றப்பட்டது.
- அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக அங்கு எந்த நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.
இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கோபுர வாசல் பகுதியில் திடீரென பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. பக்தர்கள் அந்த வழியாக செல்லவும், கோவிலுக்குள் செல்லவும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அதற்கான வாகனங்களை எடுத்து வந்து கழிவு நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த பணிகளை தொடர்ந்து சாக்கடை அகற்றப்பட்டது.
ஏற்கனவே சில நாட்க ளுக்கு முன்பும் இதே பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியது. எனவே கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை தரமான முறையில் செய்ய வேண்டும் என்றும், கழிவு நீர் கோவில் சுற்றுப்புறங்களில் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.
- குப்பை மேலாண்மைக்கு பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான்.
- கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் துணிப்பை வழங்கும் விதமாக 'துணிப்பை தூக்க துணிவோம்' என்ற விழிப்புணர்வு இயக்கம் நகராட்சி வளாகத்தில் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமை தாங்கினார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பையை வெளியிட்டு பேசுகையில்:-
தற்போது சுற்றுச்சூழலு க்கும், குப்பை மேலாண்மைக்கும் பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான், இதனால் நீர்நிலைகள், வடிகால், கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
இதன் பயன்பாட்டை தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை அதிகப்படுத்தவும், தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- இன்று டவுன் தெற்கு மவுண்ட் ரோடு சாலையில் உள்ள வாறுகால் ஓடையில் சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றது.
- இந்த சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இருந்து வருகின்றன.
நெல்லை:
நெல்லை மாநகரப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த சாக்கடை நீர் ஓடைகள் மற்றும் வாறுகால்கள் சுத்தம் செய்யும் பணி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.
தூர்வாரும் பணி
அதன் தொடர்ச்சியாக இன்று டவுன் தெற்கு மவுண்ட் ரோடு சாலையில் உள்ள வாறுகால் ஓடையில் சாக்கடை தூர்வாரும் பணி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இருந்து வருகின்றன. இந்த பகுதியில் சாக்கடை வாறுகால்கள் தூர்ந்து போய் கிடந்த நிலையில் தற்போது மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டு வருகிறது.
சிறிய அளவிலான பொக்லைன் எந்திரம் கொண்டு சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- குடமுருட்டி ஆறு மூலம் பாசனம் பெறும் வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளது.
- ரூ.30 ஆயிரம் வழங்கினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வக்கீல் ஜீவக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றனர்.
ஆனால் இதுவரை ஈரப்பதம் தளர்வு குறித்து குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை. உடனடியாக ஈரப்பதம் தளர்வு குறித்து மத்திய அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
டயர் அறுவடை எந்திரங்களை வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வரவழைக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் போது விவசாயிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டது.
ஆனால் இம்முறை இதுவரை விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. எனவே உடனடியாக காவிரி டெல்டா விவசாயிகளிடம் அமைச்சர்கள் குழு நேரடியாக சென்று கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவையாறு அருகே கோனேரிராஜபுரத்தை சேர்ந்த விவசாயி வீரராஜேந்திரன் அளித்துள்ள மனுவில் :-
கோனேரிராஜபுரம் வருவாய் கிராமத்தில் குடமுருட்டி ஆற்று மூலம் பாசம் பெறும் வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளது.
இவைகளை உடனடியாக தூர் வார வேண்டும். குடமுருட்டி ஆற்றில் வாயிலாக பாசனம் பெறும் வாய்க்கால்கள் தலைப்பில் இருந்து கோனேக்கடுங்கால் ஆற்றில் சேர்வது வரையில் உள்ள வரைபடத்தை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாசனதாரர் சங்கம் தலைவர் தங்கவேல் கொடுத்துள்ள மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து கதிர் அறுத்தும், அறுக்க முடியாமலும் நெல் மற்றும் வைக்கோல் வீணாகிவிட்டது.
இது தொடர்பாக அரசு நிவாரணம் அளிக்க முன் வந்துள்ளது. இருப்பினும் அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில்,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகள் மழை சேத பாதிப்புகள் வருவாய்த்துறை அதிகாரி களை கொண்டு மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தூர் வாரும் பணியை தொடங்குவதால் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறப்பதால் தூர் வாரும் பணி முழுமையாக நடைபெறுவதில்லை. எனவே தூர் வரும் பணியை எந்தெந்த வாய்க்கால் வெட்ட வேண்டும் என விவசாயிகளின் கருத்துக்க ளை கேட்டு உடனே தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
- வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளங்கள் தோண்டப்பட்டபோது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் வாறுகால் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக வழுக்கோடையில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக வாறுகால் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டது. அப்போது சில இடங்களில் குடிநீர் திட்டப் பணிக்காக போடப்பட்டிருந்த குழாய்களில் இன்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து அதிக அளவில் குடிநீர் வெளியேறியது. குடிநீர் வாறுகாலில் முழுவதுமாக நிரம்பி சாலையில் ஆறாக ஓடியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து குடிநீர் வினியோகத்தை நிறுத்தி குழாயை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
- வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூர் :
திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் வை.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூா் கிராமத்தில் பிஏபி. பாசனத் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பூமலூா் கிராமத்தில் பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமளாபுரம் கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- பிஏபி., வாய்க்கால்களிலும், கிளை வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் ஒரு சில இடங்களில் கிளை வாய்க்கால்களையும் சோ்த்து கம்பிவேலி போடுகின்றனா். மேலும் கிளை வாய்க்கால்களில் மண்ணை அப்புறப்படுத்துவதால் கரைகளில் உடைப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பிஏபி., வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
- பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார்.
- மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை பலகையால் மூடி வைத்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் குமாரனந்தபுரம் அருள்ஜோதி புரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் கனிமொழி (48). இவரது ஒரே மகன் அபிராம் (16). அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். விழாவை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.
அப்போது திருப்பூர் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரியாக மூடாமல் பலகையால் மூடி வைத்துள்ளனர்.
இதனை கவனிக்காத அபிராம் பலகையில் கால் வைத்த போது தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தார். அப்போது திடீரென அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரும் பள்ளி மாணவன் மீது விழுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பள்ளி மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பள்ளி மாணவனின் தாயார் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் குழியில் விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.