என் மலர்
நீங்கள் தேடியது "drama"
- நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி இழிவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு விஜிலென்சு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கேரள ஐகோர்ட்டு உதவிப் பதிவாளர் சுதீஷ், கோர்ட் கீப்பர் பி.எம். சுதீஷ் ஆகியோர் ஒரே தேசம் ஒரு பார்வை ஒரே இந்தியா என்ற பெயரில் நாடகம் நடத்தி உள்ளனர். இந்த நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி இழிவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய வக்கீல்கள் சங்கம் மற்றும் சட்டப்பிரிவு சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை மந்திரி ஆகியோருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு விஜிலென்சு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் முதல் கட்டமாக உதவி பதிவாளர் டி.ஏ.சுதீஷ் மற்றும் பி.எம்.சுதீஷ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- நடிகர்களுக்கே பொருளாதார ரீதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது.
- நாடகத்தின் நிலை இன்னமும் மோசம், அவர்களுக்கு ஒரு வைராக்கியம் உண்டு.
விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நடிகர் சௌந்தரராஜா பேசும் போது, "நான் நாடகங்களை பார்த்து வளர்ந்தவன். நான் நாடகம் நடிக்க ஆசைப்பட்டவன். ஆனால், என்னால் அப்படி ஆக முடியவில்லை. அதற்கான பயிற்சியை நான் முறையாக எடுக்கவில்லை. அப்படியே சென்றுவிட்டது."
"இந்த காலத்தில் நடிகர்களுக்கே பொருளாதார ரீதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் நாடகத்தின் நிலை இன்னமும் மோசம், அவர்களுக்கு ஒரு வைராக்கியம் உண்டு. அதை சொல்லும் போதே எனக்கு புல்லரிக்கிறது. கதையில் முக்கியத்துவம் இருக்கிறதா, வசனம் இருக்கிறதா என கேட்டு, அப்படி இருந்தால் மட்டும் தான் ஒப்புக்கொள்வார்கள். அந்த தைரியம் உண்மையில் பாராட்டுக்குரியது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.
- மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு டெல்லியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் ராமர் வேடத்தில் நடித்தவர் மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் விஸ்வகர்மா நகரில் ஷாதரா [Shahdara] பகுதியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார். பின்னர் எழுந்து மேடையில் இரண்டு அடி முன்னே நகர்ந்த அவர் திடீரென மார்பை கையால் பிடித்துக்கொண்டு மேடைக்கு பின்புறம் சென்ற நிலையில் சுயநினைவை இழந்தார் சரிந்து விழுந்தார்.
உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராம்லீலா என்பது புராண கதையான ராமாயணத்தை மையப்படுத்தி அரங்கேற்றமாகும் மேடை நாடகமாகும்.
- ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
- சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதியுள்ளனர்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனுமானின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்த இரண்டு கைதிகள் சீதையை தேடுவதுபோல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர்.
ஆனால் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. அதன்பிறகே அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவனும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவனும் இணைந்து சிறையிலிருந்து தப்பிக்க வெகு நாட்களாகத் திட்டம் தீட்டி வந்ததாகத் தெரிகிறது.
சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதிய அவர்கள் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடச் செல்லும் காட்சியில் நைசாக நழுவி கட்டுமானப்பணிக்காகச் சிறையில் வைத்திருந்த ஏணியைப் பயன்படுத்தி சிறைச் சுவரைத் தாண்டி வெற்றிகரமாகத் தப்பித்துள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.
- போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்
- அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரியை முன்னிட்டு நடந்த ராம்லீலா நாடகத்தை நாற்காலியில் உட்கார்ந்து பார்த்ததாகத் தலித் நபரை போலீசார் தாக்கியுள்ளனர். உ.பி. மாநிலம் காஸ்கஞ்ச்[Kasganj] மாவட்டத்தில் உள்ள சலேம்பூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமாயண புராணக் கதைகளைக் கூறும் ராம்லீலா நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது.
இந்த நாடகத்தைப் பார்க்க ஆவூரைச் சேர்ந்த சந்த் [Chand] [ 48 வயது நபர்] வந்துள்ளார். அங்கு காலியாக கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாற்காலியில் உட்கார்ந்து ராமாயண நாடகத்தைப் பார்த்ததால் கொதிப்படைந்த சாதிய வக்கிரம் கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் சிலரை ஏவி சந்த் -ஐ அடிக்க வைத்துள்ளனர். அந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளி சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிதித்தும் சரமாரியாக அடித்தும் உள்ளனர்.
இதனால் சந்த் அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. பின் அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்த சந்த் தனது மனைவி ராம் ரதியிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
திங்கள்கிழமை காலை எழுந்து பார்க்கும்போது தனது கணவர் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை மனைவி ராம் ரதி பார்த்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக மனைவி ராம் ரதி போலீசில் மேற்கூறியபடி நடத்தவை குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாகப் பேசிய காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் பாரதி, ராம்லீலா நிகழ்ச்சிக்கு மதுபோதையில் வந்த சந்த் மேடை மீது ஏறி அமர்ந்துள்ளார்.அவரை அப்புறப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். எனவே அவரை போலீஸ் மேடையில் இருந்து இறக்கியுள்ளது. அதன்பின் அவர் பத்திரமாக வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் காலையில் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். சந்த் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை விவசாய வேலைகள் செய்து காப்பாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது.
- நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ராமன் ராவணனாக நடித்த 2 நடிகர்கள் உண்மையிலேயே சண்டையிட்டு கொண்ட நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்லீலே நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது. அப்போது ராமனும் ராவணனும் அம்புகளை விட்டு சண்டையிட தொடங்குகின்றனர். அப்போது ஜெய்ஸ்ரீராம் என முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.
அப்போது ராவணனாக நடித்த நபர் திடீரென்று ராமனை தள்ளி விடுகிறார். அதனால் கோபமடைந்த ராமன் ராவணனை தாக்க வருகிறார். அப்போது ராமனை கீழே தள்ளி அவரை ராவணன் அடிக்க தொடங்குகிறார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுரையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நாடகம்.
ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றம் மூலம் ஆலையை திறக்க அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது. எனவே தமிழக அரசு மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலை மூடப்பட்டால் முழுமையான பலன் இருக்கும்.
துப்பாக்கி சூடு குறித்து ஹென்றி டிபேன் தலைமையிலும், மனித உரிமைகள் கழகம் சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு பாதிப்பால் தமிழகத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ ஆகியோர் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சாதாரண மக்கள் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் சதியாக உள்ளது. தமிழகத்தில் கல்வி பயின்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக விளங்கி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு மே மாதம் மத்திய அரசின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மோடி ஆட்சிக்கு வரமுடியாது. அதற்குள் மக்களுக்கு என்னென்ன கெடுதல்களை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிறைவேற்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #SterlitePlant