என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Electrical leakage"
- பொருட்கள் எரிந்து நாசமானது
- கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சூலூர்,
சூலூர் அருகே புதிய பஸ் நிலையம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் நல்லுசாமி (வயது 68) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நல்லுசாமி கூட்டுறவுத் துறையில் துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று முதல் மாடியில் வீட்டின் படுக்கை அறையில் ஏசி எந்திரத்தை இயக்கி விட்டு விட்டு கீழே உள்ள வரவேற்பறையில் தனது உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென மேல் மாடியில் படுக்கை அறையில் இருந்து புகை வருவதை கண்டார்.
உடனே சத்தமிட்டு அருகில் இருப்போரை அழைத்தார். அப்போது தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. உடன டியாக மின்சாரத்தை துண்டித்து இது பற்றி சூலூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சூலூர் தீயணைப்பு துறை அலுவலர் ரகுநாதன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக படுக்கை அறை க்குள் சென்று அங்கு பற்றி இருந்த தீயை அணைத்தனர். அப்போது படுக்கை அறையில் மாட்டி இருந்த ஏசி மெஷினில் தீப்பிடித்து உருகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.
மேலும் அதில் இருந்து தீ பரவி அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் பற்றி எரிந்துள்ளது. தெரிய வந்தது. தீப்பற்றும் போது அந்த அறையில் நல்லுசாமி மற்றும் அவரது மனைவி இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
- நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார்.
- நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்வலையாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி(வயது45), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா?
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மணத்திடல் கிராமம் புது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50) தொழிலாளி.
இவர் குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.
இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்து புகை கிளம்பியது. சிறு நேரத்தில் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கின.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது . இதில் வீடு கட்டிடம் தரைமட்டமாகியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருவையாறு தீயணைப்பு நிலையம் மற்றும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .
அதன்பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சியடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த நகை, பணம், ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின . ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆகியதாக கூறப்படுகிறது .
இது குறித்து போலீசார், மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக வீடு இழந்து பாதிக்கப்பட்ட சேகர் குடும்பத்திற்கு தாசில்தார் பழனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கவுதமன் ஆகியோர் ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.
- தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் பி.என். பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 46). சம்பவத்தன்று இரவு கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் தீ மளமளவென பரவி கூரை வீடு எரியத் தொடங்கியது.
அப்போது வீட்டில் இருந்த கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை. வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் தீ யில் எரிந்து நாசமாயின. இது குறித்து கந்தன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் கதவு மற்றும் கூரை சமையல் பாத்திரம் எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 30ஆயிரம்.
- நாகம்மாள் என்பவர் கூரை வீடு மின் கசிவால் எரிந்து நாசமானது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம். ஜாம்புவா னோடை ஊராட்சி மேல க்காடு பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவர் கூரை வீடு மின் கசிவால் எரிந்து நாசமானது.
வீட்டின் கதவு மற்றும் கூரை சமையல் பாத்திரம் எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 30ஆயிரம்.
தகவல் அறிந்த ஜாம்புவா னோடை கிராம நிர்வாக அலுவலர் புர்ஷோத்தமன், ஊராட்சி மன்ற தலைவர் லதாபாலமுருகன், துணை தலைவர் ராமஜெயம், , ஒன்றிய கவுன்சிலர் கல்யாணம் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேதமான வீட்டை பார்வையிட்டனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் ரங்காபுரம் பஸ் நிலையம் அருகில் வாடகைக்கு பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார்.
இந்த குடோனில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருந்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு திடீரென குடோனில் தீ பிடித்து எரிந்தது. இதை கவனித்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. அப்போது குடோனில் இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது.
இதனால் ரங்காபுரம் பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால் அங்கிருந்த மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தீயணைப்பு வாகனம் வர தாமதமானதால் ஒரு மணி நேரம் பற்றி எரிந்தது.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தை காண ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சர்வீஸ் ரோட்டில் சென்ற அனைத்து வாகனங்களும் மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டன.
அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது யாரேனும் முன்விரோதம் காரணமாக சதி வேலை செய்தார்களா? என்ற கோணத்தில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்