என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "electrical wires"
- சீரமைக்க கவுன்சிலர் வலியுறுத்தல்
- பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டில் தம்மா தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் மின் கம்பிகள் 10 அடி உயரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் பஸ்கள் மற்றும், கனரக வாகனங்கள் மின் கம்பிகளில் உரசிய படி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த சாலையில் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொது மக்களள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி கவுன்சிலர் இல.குருசேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
- அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- விவசாயிகள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருடைய விவசாய நிலத்தின் வழியாக செல்லும் மின்சார ஒயர் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளதால் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி நெருப்பு பொறி உண்டாவதாக பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 2 மின் கம்பங்கள் இடையே உள்ள தூரம் அதிகமாக இருப்பதால் பலத்த காற்று வீசும் போது ஒன்றோடு ஒன்று உரசி விவசாய பம்பு செட் மோட்டார்கள் அடிக்கடி சேதம் அடைவதாக அப்பகுதி யில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் மின்சார வாரிய அலுவ லர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த ஒயரானது ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கற்களை கட்டி மின்சார ஒயரின் மீது தொங்கவிட்டு உள்ளனர்.
இதனால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்
- பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில், 1200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகளின் வயல்வெளிகளில் ஆங்காங்கே மின் கம்பங்கள் உள்ளன.
இந்த மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பணிகள் செய்வதில் அச்சப்படுகின்றனர். மேலும் அறுவடை நேரங்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தற்போது சம்பா சாகுபடி முடிவடைந்த நிலையில் விவசாயிகள் தங்களது நெல் வயல்களில் பயிர், உளுந்து உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். குறுவை சாகுபடி அதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இப்பகுதிகளில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'மின்வாரிய துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.
- சிவகங்கை அருகே 150 கிலோ மின் கம்பிகள் திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ அலுமினிய கம்பிகளை 3 பெண்கள் திருடிக்கொண்டு சென்றனர். இதை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் அவர்களை பிடித்து திருப்பத்தூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி கீரைக்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அய்யம்மாள் (37), ஜெயராஜ் மனைவி குருவம்மாள் (55), வீராச்சாமி மனைவி கலா (55) என தெரியவந்தது.
மின் கம்பிகள் திருட்டு தொடர்பாக மின்பாதை ஆய்வாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின்பேரில் 3 பெண்களையும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.
- வடிகால் வாய்க்காலை சிலர் முழுமையாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
- பைபர் மின்வயர்களை பூமிக்குள் புதைக்கும் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதிகளில் புதிய வடிகால் வாய்க்கால்கள் கட்டும் பணிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை நகரின் மையப்பகுதியான தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி ஆகிய 4 வீதிகளிலும் ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளன.
4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் இருந்த நிலையில், சிலர் வாய்க்கால்களை முழுமையாக ஆக்கிரமித்து கட்டிடங்கள், வாசல் படிகள் உள்ளிட்ட கட்டிடங்களை கான்கிரீட்டால் கட்டி யதால் மழைநீர் வடிய வழியில்லாமல் சாலைகளிலேயே தண்ணீர் தேங்கி கிடந்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையும், மாநகராட்சியும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் ரூ.12 கோடி செலவில் மீண்டும் புதிய மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகள் நடைபெறும் போது கழிவு நீரினை சாலைகளில் விடாமல், குழாய் மூலம் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மழைக் காலம் வருவதற்குள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் துரிதமாக்கப்பட்டு உள்ளது.
தேரோடும் 4 வீதிகளிலும் மின்கம்பங்களை அகற்றிவிட்டு, பைபர் மின்வயர்களை பூமிக்குள் புதைக்கும் திட்ட பணிகள் ரூ.16 கோடி நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், துணை பொறியாளர் கார்த்தி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகில் கொளத்துப்பாளையம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் இறைத்து பாசனம் செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இரவு கொளத்துப் பாளையத்தை சேர்ந்த கே.எம்.தங்கவேல், கே.எம்.நல்லசாமி, பனப்பாளையம் வக்கீல் சுப்பிரமணி, கரட்டூரை சேர்ந்த கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, புரவி பாளையம் பி .கே , நாச்சிமுத்து ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பொருத்தபட்டு இருந்த மின்சார வயர்களை மின்சார இணைப்பு உள்ள இடத்தில் இருந்து மின் மோட்டார்களுக்கு செல்லும் மின்சார வயர்களை வெட்டியும், இழுத்தும் அறுத்தும் திருடி சென்றுள்ளார்கள். இது குறித்து கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 5 விவசாயிகளும் புகார் கொடுத்து உள்ளார்கள்.
நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் ராயப்பன்பட்டி, கோட்டூர், செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு மின் கம்பங்கள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பங்களில் பழுது ஏற்பட்டால் மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பழுது நீக்க வராமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.
எனவே வேறு வழியின்றி இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கி வருகின்றனர்.
எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கம்பத்தில் ஏறி மின் வயர்களில் பழுது நீக்குகின்றனர். இவ்வாறான சமயங்களில் திடீரென மின் இணைப்பு கொடுக்கப்பட்டால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கம்பங்களில் இருந்து கீழே தவறி விழும் நிலையும் உள்ளது. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதிக்கு மின் வாரிய ஊழியர்கள் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆபத்தான முறையில் கம்பங்களில் ஏறும் இளைஞர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்