என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "employee died"
- குடிநீர் வாரிய ஊழியர் படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே குன்னூர் வள்ளல்நதி கூட்டுகுடிநீர் திட்ட தற்காலிக குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் பெரியசாமி(48). இவருக்கு திருமணமாகவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் வைகையாற்று கிழக்குகரை பகுதியில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் தண்ணீர் திறந்துவிடும் பணி மேற்கொண்டு வந்தார்.
சம்பவத்தன்று பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் போஜம்மாள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாததை அறியாத ஊழியர் மின் கம்பத்தின் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- திடீரனெ மின்சாரம் தாக்கி தூக்கிஎறியப்பட்ட ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (27). இவர் சேனண்கோட்டை மின்வாரிய சரகத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூலாங்குளம் என்ற கிராம பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது.
இதனை சரி செய்வதற்காக கருப்பசாமி மற்றும் அவருடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் பூலாங்குளம் கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் தனித்தனியாக பிரிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாததை அறியாத கருப்புசாமி மின் கம்பத்தின் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கருப்புசாமி தூக்கி வீசப்பட்டார். இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி கருப்பசாமி மின் கம்பத்தின் கீழே விழும் போது அருகில் மற்ற நபர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரமாக கருப்பசாமி மின் கம்பத்தின் கீழே கிடந்தார்.
அதன் பின்னர் உடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர் ஒருவர் கருப்பசாமி கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கருப்பசாமியை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
- கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரவணம்பட்டி,
கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது35).
இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இரவு மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
நேற்று காலை வேலை முடிந்து மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரும் வந்தார். மோட்டார் சைக்கிளை மகேஷ் ஓட்டினார்.
மோட்டார் சைக்கிள் கோவை சத்தி ரோட்டில் குரும்பபாளையம் அருகே உள்ள தனியார் எடை மேடை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கார் ஒன்று வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மகேஷ், முத்துராஜ் தூக்கி சாலையில் வீசப்பட்டனர். இதில் மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
முத்துராஜ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இறந்த மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 24-ந் தேதி இனாமுல் ஹசன் வேலை நிமித்தமாக பீளமேடு சென்றார்.
- 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை,
கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்தவர் இனாமுல் ஹசன்(27). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இனாமுல் ஹசன் வேலை நிமித்தமாக பீளமேடு சென்றார்.
காளப்பட்டி ரோட்டில் கட்டிட பணி நடைபெறும் பகுதியில் கட்டிட உரிமையாளர் அருண் என்பவரிடம் மார்க்கெட்டிங் சம்பந்தமாக பேசி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிட பணியின் போது கல் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இனாமுல் ஹசன் மயங்கி சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக இனாமுல் ஹசனின் தந்தை ஷாகீல் ஹமீத் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விதியை பின்பற்றாமல் கட்டிட பணியை மேற்கொண்ட கட்டிட ஒப்பந்ததாரர் ரஞ்சித் மற்றும் கட்டிட உரிமையாளர் அருண் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது33). தனசேகர் தற்போது வெள்ளோடு அருகே உள்ள குட்டபாளையத்தில் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
தனசேகர் தினமும் குட்ட பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறையில் தான் வேலை செய்யும் பனியன் கம்பெனியில் கிளை அலுவலகம் செயல்படுகிறது. அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பெருந்துறையில் இருந்து திருப்பூருக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.
அதே போன்று இன்றும் குட்ட பாளையத்திலிருந்து தனசேகர் தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார். குனம்பட்டி பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வேனும், தனசேகர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே துத்திப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் மணி (வயது 52). கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் பிட்டர் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தொண்டமாநத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மணி மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட மணி தலையில் பலத்த காயம் அடைந்தார். அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று அவருக்கு விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சிகிச்சைக்காக மணியை அவரது குடும்பத்தினர் மீண்டும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே மணி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் பலியான மணிக்கு ராந்துமரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிமலை:
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 50). பம்பு பிட்டர். இவர் இன்று காலை கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருப்புறம்பியம் கடைவீதியில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் துரைராஜ் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட டிராக்டர் டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். பலியான துரைராஜிக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் திருப்புறம்பியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அடுத்த விளாம்பட்டியை சேர்ந்தவர் வீரகார்த்திக் (வயது31). இவரது மனைவி பெயர் கலா. வீரகார்த்திக் முத்தூர் அருகே உள்ள வீரசோழ புரத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் வேலைக்கு போய் விட்டு வருவதாகவும் மறுநாள் காலை தாமதமாக வருவேன்..என்று மனைவியிடம் சொல்லி கொண்டு வீரகார்த்திக் வேலைக்கு சென்றார்.
ஆனால் மறுநாள் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கொடுமுடி ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை அருகே வீரகார்த்திக் மயங்கி கிடந்ததை அவருடன் வேலை பார்க்கும் மோகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் வீரகார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரகார்த்திக் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
பவானி வருணபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பவானியில் இருந்து அந்தியூர் குருநாத சுவாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
கோவில் விழாவில் பங்கேற்பதற்காக அவர் வந்தார். அந்தியூரைஅடுத்த செம்புலிச்சாம்பாளையம் அருகே வந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
அப்போது அந்த வழியாக ஈரோட்டை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டி வந்தகாரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட மாதேஷ் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாதேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்