என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Equality Pongal Festival"

    • புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
    • நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகர் பகுதியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மணி, புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் அடுத்த மாதம் 16-ந்தேதி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொள்ளும் 5 ஆயிரம் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி, பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் மணி, பூபதி, இளைஞரணி செயலாளர் சதீஸ்குமார், வழக்கறிஞரணி துணை செயலாளர்கள் கந்தசாமி, அன்பழகன், புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவி, மாணவரணி அமைப்பாளர் தாமோதரன், நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
    • அனைத்து ஊராட்சிகளிலும் நாளை(வெள்ளிக்கிழமை) சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நாளை(வெள்ளிக்கிழமை) சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிகழ்வில் ஊராட்சியின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஊராட்சிகளில் பணி–யாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் போன்ற ஊராட்சியின் அலுவலர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வெற்றி பெற்றோரை பெருமைப்ப–டுத்தப்பட உள்ளது.

    சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி கோலப்போட்டி. குழுப்பாட்டு, நாடகம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளது.

    மேலும், அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைவரும் பொது இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் சமத்துவ உறுதி மொழியினை எடுத்துக் கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
    • பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளை மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவ னங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

    கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.

    மாணவ-மாணவி களுக்கு பொங்கல் குறித்த ஓவியம் வரைதல், பானை அலங்காரம், "விவசாயம் காப்போம்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

    இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்த 590 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் கரும்புகள், தோரணங்கள் கட்டப்பட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கான வினாடி வினா போட்டி, ஆசிரியர் ஆசிரியைக ளுக்கான பல்வேறு போட்டி கள் நடந்தது.

    மாலை யில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர் சலிமுல்லா ஹ்கான், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் சேர்மன் சுந்தரம், ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் கபீர் வரவேற்றார்.

    கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் உசேன், சொக்க நாதர் கோவில் குருக்கள் வன்மீகநாதன், கீழக்கரை தென்னிந்திய திருச்சபை ஆயர் விஜயகுமார், புனித அந்தோணியர் ஆலயம் பங்குத்தந்தை ரெமிஜியஸ், கீழக்கரை துணை வட்டாட்சியர் பழனிக்குமார், இயற்கை ஆர்வலர் மன்மோகன் சிங் ஆகியோர் பேசினர்.

    பள்ளியின் தாளாளர் எம், எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தீப்பந்தம் சுழற்றி பார்வையாளர்களின் பாராட்டுதலை பெற்றார்.

    விழாவில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர் செகானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகம்மது காசிம், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் எபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் செய்தனர்.

    • அரசு மருத்துவமனையிலும் கொண்டாட்டம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள வட்டாட்சி யர் அலுவலகத்தில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமை தாங்கினார் வருவாய் வட்டாட்சியர் க.குமார் முன்னிலையில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு நாட்டறம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் எஸ்.தீலிபன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

    இவ்விழாவில் அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் அணியினருக்கு சேலை வழங்கினார்.
    • கழக தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

    ஊட்டி

    ஊட்டி நகர தி.மு.க. சார்பில் தமிழர் தைத் திருநாளை முன்னிட்டு ஊட்டி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு சர்ட், சுவர் கடிகாரம், நாள் காட்டி, மகளிர் அணியினருக்கு சேலை, சுவர் கடிகாரம், நாள் காட்டி போன்றவைகளை ஊட்டி நகர தி.மு.க செயலாளர் எஸ்.ஜார்ஜ் வழங்கினார்.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.முஸ்தபா, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் எச்.மோகன் குமார், நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

    • துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் வழஙகப்பட்டது.முடிவில் இளநிலை உதவியாளர் வீரமணி நன்றி கூறினார்.

    • ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்
    • வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும் நகர கழக வார்டு கவுன்சிலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம் : 

    தாராபுரத்தில் திமுக நகர கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா பழைய நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் பொறியாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    நேற்று மாலை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்இல. பத்மநாபன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், கவுன்சிலர்கள் அக்ரோ கமலக்கண்ணன், வின்னர் ஸ்ரீதர், தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாவதி பெரியசாமி, சரஸ்வதி, வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும் நகர கழக வார்டு கவுன்சிலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
    • சுமார் 397 பேருக்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கயத்தூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

    மஞ்சள், அரிசி, கரும்பு, கடலை, மிளகாய், சமையல் எண்ணெய், சர்க்கரை, பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

    சுமார் 397 பேருக்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ×