என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erode by election"

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.
    • ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

    காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.

    இந்நிலையில் ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது.
    • ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வெ.ரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.

    இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சி தலைவர்களும் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

    இது தொடர்பான பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நாளை கடலூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். கூட்ட முடிவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

    இந்நிலையில் மாலை மையக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி.
    • இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தான் போட்டியிடும்.

    சென்னை:

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தான் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

    எங்கள் கூட்டணி கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க.. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுவுடைமை கட்சி தலைவர்களை இன்று மாலை முதல் சந்திக்க உள்ளோம்.

    ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிக்கு அவர்கள் ஆதரவை கோர இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
    • அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிட ஒவ்வொரு கட்சியும் ஆர்வம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி ஏற்கனவே நடந்த தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. கட்சிக்கு 1,204 வாக்குகள் கிடைத்தன.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுமா? என்பது தொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி செந்தமிழனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவண்ணாமலையில் தமிழ்மகன் உசேன் பேட்டி
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் இ.என்.நாராயணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் எம்.ஜி.ஆர். மன்றத்தினர் மற்றும் கட்சி தொண்டர்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் எங்களுடைய குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதனை மக்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க. அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்.

    தற்போது பாலியல் பலாத்காரம், வன்முறைகள், வரிசுமைகள் அத்தனையும் மக்களால் தாங்கி கொள்ள முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான எண்ணங்களில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடும். சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.

    தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கலியபெருமாள், பாசறை செயலாளர் பருவதம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் தரணி, மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள்.
    • இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் எங்களுடைய குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதனை மக்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க. அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்.

    தற்போது பாலியல் பலாத்காரம், வன்முறைகள், வரி சுமைகள் அத்தனையும் மக்களால் தாங்கி கொள்ள முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான எண்ணங்களில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும். சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.

    தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.
    • 2011, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2011, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு.
    • 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்ட நிலையில் அதிமுக போட்டி.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

    இதுதொடர்பாக, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது.

    இந்நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும்.
    • தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை முடக்கப்படும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க.வை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். தி.மு.க.வை வீழ்த்துவதே எங்கள் எண்ணம். அதே நேரத்தில் அ.ம.மு.க. போட்டியிடுவது குறித்து 27-ந்தேதி அறிவிப்பேன். நான் பெரியகுளம், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன்.

    இடைத்தேர்தலில் போட்டியிட தயங்கவில்லை. போட்டியிடவும் தயாராக இருக்கிறேன்.

    இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு பொதுவாக மக்கள் வாக்களிப்பார்கள். தி.மு.க.விற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. தொகுதியில் திட்டப் பணிகள் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் என்று வாக்களிப்பது வழக்கம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் தீர்ப்பும் உள்ளது.

    எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும். தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை முடக்கப்படும்.

    இரட்டை இலை இருந்ததால்தான் அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

    தனித்து போட்டியிட்டால் எடப்பாடி பழனிசாமி பணபலத்தை நம்பிதான் நிற்பார். கஜனிமுகமது மனநிலையை பெற்றவர்கள் நாங்கள். அதனால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • "நம்ம இலக்கு ஈரோடு கிழக்கு" என சமூக வலைதளங்களில் அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும், உச்சநீதிமன்ற வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, "நம்ம இலக்கு ஈரோடு கிழக்கு" என சமூக வலைதளங்களில் அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.

    • கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.
    • தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் மரணம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியை கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்து இருந்ததால் இந்த தடவையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று தி.மு.க. தலைமை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் களம் இறங்கப்போவது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இளங்கோவனா? அல்லது வேறு யாருக்காவது வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த தடவையும் த.மா.கா. போட்டியிடுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த யூகத்தை வலுப்படுத்தும் வகையில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    இதற்கிடையே பாரதிய ஜனதாவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியானது. எனவே அ.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை எதிர்த்து எந்த கட்சி களம் இறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள்.

    தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.

    தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள்.

    அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா.வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன்.

    மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது.

    தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா.வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது.
    • காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பணிக்குழு பட்டியல் தயாராகி வருவதாக அழகிரி தெரிவித்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி இந்த முடிவை வெளியிட்டார்.

    இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, டி.கே.எஸ்.இளங்கோவன், எ.வ.வேலு, ஆ.ராசா, பூச்சிமுருகன் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வியூகம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

    வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிட நிர்வாகிகளுடன் விரைந்து முடிவு செய்து அறிவிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

    காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பணிக்குழு பட்டியல் தயாராகி வருவதாக அழகிரி தெரிவித்தார்.

    தி.மு.க. தேர்தல் பணிக்குழு பட்டியலில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. இது சம்பந்தமாக நிர்வாகிகள் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ×