search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "escaped"

    • அரசு பஸ்- லாரி மோதல்; 32 பயணிகள் உயிர் தப்பினர்.
    • எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்தூர்-மதுரை நெடுஞ்சாலையில் அதிகாலை 5.30 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. இதில் 32 பயணிகள் இருந்தனர்.

    எதிர்திசையில் மதுரை யில் இருந்து தேவ கோட்டை நோக்கி சரக்கு லாரி அதி வேகமாக வந்தது. எஸ்.எஸ்.கோட்டை சிவல்பட்டி பிரிவு அருகே வந்தபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது.

    இருப்பினும் அரசு பஸ் டிரைவர் சேகர் சுதாரித்துக் கொண்டு சாதுரியமாக செயல்பட்டதால் சாலையோர தடுப்பில் மோதி பஸ் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த 32 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய லாரியின் முன்பகுதி நொறுங்கியது. சரக்கு லாரியின் டிரைவர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தின் வழியாக அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் காரில் தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் விபத்து நடந்திருப்பதை பார்த்தவுடன், தனது காரில் இருந்து இறங்கிச்சென்று அரசு பஸ்சின் டிரைவர் சேகர் மற்றும் கண்டக்டரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் நாகராஜ் (வயது 52). கூலித் தொழிலாளி வசித்து வருகிறார்.
    • அப்போது அவர்களிடம் நாகராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறினார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் நாகராஜ் (வயது 52). கூலித் தொழிலாளி வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் வேலைக்கு சென்று இருந்தனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நாகராஜ் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கு வைத்து சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். இதனையடுத்து நாகராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இரவு பெற்றோர் ேவலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் அவர்களிடம் சிறுமி தனது கால், வயிறு வலிப்பதாக கூறினார். இதனையடுத்து அவரிடம் பெற்றோர் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர்களிடம் நாகராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறினார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

    அஞ்செட்டி அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர்.

    2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து அவரது தாயாரிடம் கூறினார்கள்.

    மாணவிகளின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த வாலிபர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

    பெங்களூருவில் இருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 28 பயணிகள் உயிர் தப்பினர்.
    சூளகிரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு ஆம்னி சொகுசு பேருந்து புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தின் மேற்கூறையில் அதிக சரக்குகளை ஏற்றி வந்தனர். இன்று அதிகாலை 1.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்னாறு அருகே வரும்போது பஸ்சின் மேல்கூறையில் இருந்த பொருட்கள் திடீரென்று தீபிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து ஆம்னி பஸ்சின் டிரைவரான பெங்களூருவை சேர்ந்த சவுக்கருக்கு தகவல் கொடுத்தனர். அவர் பஸ்சை நிறுத்தி விட்டு பஸ்சில் பயணம் செய்த 28 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கினார். என்றாலும் தீ மளமளவென்று பரவி பஸ் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. 

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓசூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 1  மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. 

    இந்த தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் டிரைவருக்கு தகவல் கொடுத்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  பஸ்சின் மேல்கூறையில் தீப்பெட்டி அல்லது பட்டாசுகள் ஏற்றி வரப்பட்டதா? அல்லது மின் வயரில் இருந்து தீப்பொறி பறந்து பொருட்கள் மீது விழுந்து தீப்பிடித்ததா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
    சுற்றுலா நிறுவனம் கடைசி நேரத்தில் ஓட்டலை மாற்றியதால் கர்நாடக தம்பதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். #SriLankablasts
    மங்களூரு:

    இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஓட்டல் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் 359 பேர் மரணம் அடைந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த குண்டுவெடிப்பில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடக தம்பதி நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூரை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் சரபத்கட்டே பகுதியில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இந்த நிலையில் அவர்கள் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக இலங்கை செல்ல முடிவு செய்தனர். அதன்படி தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்கள் கடந்த 21-ந்தேதி இலங்கைக்கு சென்றனர். அந்த சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்களுக்கு இலங்கை கொழும்பு நகரில் உள்ள ‘தி சின்னமோன் கிராண்ட்’ (குண்டு வெடித்த ஓட்டல்) என்ற ஓட்டலில் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே சுற்றுலா நிறுவனம், அவர்களுக்கு அந்த ஓட்டலுக்கு பதிலாக அருகில் உள்ள மற்றொரு ஓட்டலில் அறையை பதிவு செய்து கொடுத்தது. இதனால் அவர்கள் அந்த ஓட்டல் அறையில் இருந்தனர். அப்போது தான் ‘தி சின்னமோன் கிராண்ட்’ ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அந்த ஓட்டலில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    தனியார் சுற்றுலா நிறுவனம் கடைசி நேரத்தில் ஓட்டலை மாற்றியதால் கர்நாடக தம்பதி நூலிழையில் உயிர் தப்பினர். அவர்கள் உயிர் தப்பிய தகவலை கேட்டு வேனூரில் உள்ள தம்பதியின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடவுள் அருளால் கேசவராஜூம், ஸ்ரீதேவியும் உயிர் பிழைத்து உள்ளனர்’ என்றனர். #SriLankablasts
    குருசுகுப்பத்தில் கணவன்-மனைவி மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    குருசுகுப்பம் மரவாடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). தச்சு தொழிலாளி இவருடைய மனைவி சுஜாதா. இவர்களது மகள் தன்சியா. இவர் புஸ்சி வீதி செட்டித் தெருவில் டியூசன் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ரமேஷ் டியூசனுக்கு சென்ற தனது மகள் தன்சியாவை அழைத்து கொண்டு வெளியே வந்தார். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் அங்கு வந்தார். அப்போது இருவருடைய மோட்டார் சைக்கிளும் உரசுவது போல் சென்றது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் ரமேஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜேஷ் அவரது உறவினர் ராஜ்குமார், சூர்யா, கோகுல் ஆகியோரை அழைத்துக் கொண்டு கத்தி, கம்பு, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரமேஷ் வீட்டுக்கு சென்று ரமேசை தாக்கினர். இதை தடுக்க முயன்ற ரமேஷ் மனைவி சுஜாதாவையும் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

    இதில், காயம் அடைந்த ரமேஷ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து முத்தியால் பேட்டை சோலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகிறார். 
    சூளகிரி அருகே அதிகாலையில் சொகுசு பஸ் - லாரி மோதிய விபத்தில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியனர்.
    சூளகிரி:

    சென்னையில் இருந்து தனியார் சொகுசு பஸ் ஒன்று 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரை நோக்கி புறப்பட்டது. பஸ்சானது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் சென்ற போது, குஜராத்தில் இருந்து கிரானைட் சிலாப் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி சாலையில் ஒரு திருப்பத்தில் திருப்பிய போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

    பின்னர், அக்கம் பக்கத்தினர் காயமாடைந்த மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் லாரியை ஓட்டிய டிரைவர் இடிபாடுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பழனிசாமி (வயது 52) என்பது தெரியவந்தது. மேலும், இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். 
    தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராஜபாளையம்: 

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சேத்தூர் அருகே  உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் பாட்சா என்ற மாடசாமி (வயது37). கூலி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் சொக்கநாதன்புத்தூர் ரோட்டில் மாடசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் குமரவேல், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
    மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாடசாமி இன்று அதிகாலை வெளியே செல்வதை நோட்டமிட்ட கும்பல் காத்திருந்து அவரை கொடூரமாக கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார்?  என போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள்.
    கம்பம் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தப்பி ஓடியதையடுத்து அவரது பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டி-ஜோதி தம்பதியின் 13 வயது மகளுக்கும் கம்பம் உத்தமபுரத்தைச் சேர்ந்த கோபால்-வசந்தி ஆகியோரின் மகன் பார்த்திபனுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. கடந்த மாதம் 28-ந் தேதி சாமாண்டிபுரம் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுரேசுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வருவதை அறிந்ததும் பார்த்திபன் தப்பி ஓடி விட்டார். குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை பாண்டி, தாயார் ஜோதி மற்றும் உறவினர் கோபால் ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பார்த்திபன் மற்றும் அவரது தாய் ஜெயந்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளத்தில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் ஐசக்ராஜன் (வயது27). சம்பவத்தன்று இவருக்கும், சியோன் நகரை சேர்ந்த தொழிலாளி இமானு வேல்ராஜன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இமானுவேல்ராஜன், ஐசக் ராஜனை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதுபற்றி ஐசக்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அரூர் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கூக்கடப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். 

    நேற்று காலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்ற வாலிபர் அருகில் இருந்த கொட்டாய்க்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். 

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ராஜசேகரனை தீவிரமாக தேடி வருகிறார்.
    ஒரத்தநாடு அருகே வீட்டில் படுத்து தூங்கிய பெண்ணை தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு:

    தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு குழமங்கலம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55) விவசாயி. இவரது மனைவி நாகம்மாள் (40), இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு நாகம்மாள் வீட்டில் படுத்து தூங்கினார். இன்று காலை 4 மணியளவில் அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் மாரிமுத்து என்பவர் அத்துமீறி வீட்டுக்குள் சென்று நாகம்மாளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து விழித்து எழுந்த நாகம்மாள் சத்தம்போட்டார். இதைதொடர்ந்து அவரது கணவர் ஆறுமுகம் மாரிமுத்துவை பிடிக்க முயன்றார். உடனே மாரிமுத்து கட்டையால் ஆறுமுகத்தை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இதுபற்றி நாகம்மாள் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்தை தேடி வருகிறார்.

    ×