search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ettayapuram"

    • சதீஷ்குமார் எட்டயபுரம்- விளாத்திகுளம் செல்லும் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
    • இந்நிலையில் மின் கசிவால் பர்னிச்சர் கடை தீப்பிடித்து எரிந்தது.

    எட்டயபுரம்:

    எட்டையாபுரம் நடுவிற் பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் சதீஷ்குமார் (வயது 41) என்பவர் எட்டயபுரம்- விளாத்திகுளம் செல்லும் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று இரவு 7 மணியில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்நிலையில் மின் தடை ஏற்பட்டு மீண்டும் வந்தது.

    இந்நிலையில் மின் கசிவால் பர்னிச்சர் கடை தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளர் சதீஷ்குமாருக்கும் , தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    மேலும் இது குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்தது
    • புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷ ங்கள் எழுப்பப்பட்டது

    எட்டயபுரம்:

    தமிழ்நாடு ஏ. ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி போனஸ் மற்றும் ஓய்வூதியம் முறையாக வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்தது.ஆர்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1,200 ஓய்வூதிய திட்டத்தை அதிகப்படுத்தி வாரிய முடிவுபடி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷ ங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி சமூக ஆர்வலர் முத்தரசு , ஏ.ஐ.டி.யு.சி. பொறுப்பாளர் முனியராஜ் , கட்டிட சங்கத் தொழிலாளர் ராஜா, முத்துபாண்டி, சத்தியசெல்வி , ஆனந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் ஒலி- ஒளி காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் தியாகிகள் நாட்டுக்கு செய்த தியாகங்கள் குறித்து இளைய தலைமுறையினர் எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒலி- ஒளி காட்சி யை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைக்கப்பட்ட ஒளிரும் வண்ண விளக்குகளை இயக்கி வைத்து, பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    விழாவில் தமிழக சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஷ்டிபாய், மாவட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி நவீன் பாண்டி யன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, சங்கர நாரா யணன் பேரூராட்சி கவுன்சி லர் மணி கண்டன், நகர செயலாளர் பாரதி கணே சன், துணைச் செய லாளர் மாரியப்பன், விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழி காவ லர்கள், தமிழ் அறி ஞர்கள் ஆகியோரின் மணி மண்ட பங்களில் ஒளி- ஒலி காட்சி அமைக்க தமிழ்நாடு முதல் -அமைச்சர் உத்தர விட்டுள்ளார். அதன்படி பரிட்சாத்த முறையில் 6 மணிமண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டி லேயே முதன் முறை யாக எட்டயபுரம் மகா கவி பாரதியார் மணி மண்டபத்தில் ஒலி- ஒளி காட்சி தொடங்கி வைக்க ப்பட்டுள்ளது. இன்னும் 5 இடங்களில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இது படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மணிமண்டபங்களில் அமைக்கப்படும். இதன் மூலம் அந்த தியாகிகள் நாட்டுக்கு செய்த தியாகங்கள் இளைய தலைமுறையும் எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம். இதனை செய்தித்துறையின் மைல்கல்லாக நாங்கள் கருதுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • 15-வது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பேரூராட்சி யில் ரூ. 3 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் தார்ச்சாலை அமைத்தல், பேவர்பிளாக் சாலை அமைத்தல் மற்றும் பேரூராட்சி பொதுநிதியில் கட்டப்பட்ட மன்ற கூட்ட அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடந்தது.

    எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ. 7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, பேரூராட்சி பொதுநிதி திட்டத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மன்ற கூட்ட அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கீழ் 11-வது வார்டு பகுதியில் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், 3-வது வார்டு பகுதியில் ரூ. 79 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்தல், 15-வது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், பேரூராட்சி துணை தலைவர் கதிர்வேல், கவுன்சிலர்கள் மணி கண்டன், விஜயலட்சுமி, மாதவன், ராமலட்சுமி அய்யம்மாள், மைக்கேல்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரம் இல்லாமல் பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
    • புகாரின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா தலைமையில், பணியாளர்கள் இன்று காலையில் எட்டயபுரம் பகுதிக்குள் வரும் குடிநீர் வாகனங்களை பரிசோதனை செய்தனர்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க தனியார் நிறுவனங்கள் தங்களுடைய மினி ஆட்டோவில் ரூ.10, 15, 20 விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரம் இல்லாமல் பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் பணியா ளர்கள் இன்று காலையில் எட்டயபுரம் பகுதிக்குள் வரும் குடிநீர் வாகனங்களை பரிசோதனை செய்தனர்.

    பரிசோதனையில் வாகன ங்களில் உணவு பாதுகாப்பு தர சான்றிதழ், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு துறையிலும் அனுமதி பெறாமல் குடிநீர் விநியோகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து 5 தனியார் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பிளீச்சிங் பவுடர் போட்டு மீண்டும் திரும்ப அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • நோயாளிகள் காத்திருப்பு கூடம், அவசர சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • மேலும் மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகள் வளர்க்க அறிவுறுத்தினார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது உள் நோயாளி சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆய்வகம், புற நோயாளி பிரிவு, நோயாளிகள் காத்திருப்பு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு செய்தார். மருத்துவ பணியா ளர்களி டம் அடிப்படை பிரச்சி னைகள் குறித்து குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகள் வளர்க்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது சித்த மருத்துவர் கார்த்திகா, சுகாதார நிலைய கண்கா ணிப்பாளர் செந்தில் குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் இமானுவேல், கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், கீழ ஈரால் தி.மு.க. கிளைச் செயலாளர், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து 2 பவுன் தங்க செயினை பரிசாக பெற்றது.

    எட்டயபுரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் எட்டயபுரம் நகர தி.மு.க சார்பில் இன்று காலை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடந்தது.

    போட்டியில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    போட்டியை விளாத்தி குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து 2 பவுன் தங்க செயினை பரிசாக பெற்றது.

    சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி 2-வது இடம் பிடித்து 1½ பவுன் தங்க செயினை பெற்றது. 3-வது இடம் பிடித்த நெல்லை மாவட்டம் வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க செயினும், 4-வது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார் மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியில் 22 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிக்கு 4½ கி.மீ. தூரம் நிர்ணயிக்கப் பட்டது. போட்டிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகி யோர் கொடித்து தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் முதலிடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க செயினும், 2-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ¾ பவுன் தங்க செயினும், 3-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ½ பவுன் தங்க செயினும் 4-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

    இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டய புரம் பேரூர் செயலாளர் பாரதி கணேசன், கோவில் பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், எட்டயா புரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் மணி கண்டன், மைக்கேல் ராஜ், தி.மு.க. வார்டு செயலாளர் சின்னப்பர், ராம்குமார் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    எட்டயபுரம்:

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது தற்கொலை படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

    இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளியின் தலைமையாசிரியர் இப்ராஹிம், உதவி ஆசிரியை இந்திரா, அ.தி.மு.க. நிர்வாகி ராஜகுமார் உட்பட ஏராளமான பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இந்து மதத்திற்கு எதிரானவர்கள் பா.ஜ.க.வினர் தான். தி.மு.க.வினர் அல்ல என்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    காமராஜ், நாவலர் நெடுஞ்செழியன், அண்ணா உள்ளிட்ட பெருந்தலைவர்கள் அங்கம் வகித்த சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விவகாரம் மிகவும் வருத்த மளிக்கிறது.

    தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இனியும் தொடர பிரதமரும், உள்துறை அமைச்சரும் அனுமதிக்க கூடாது.இந்து மதத்திற்கு எதிரானவர்கள் பா.ஜ.க.வினர் தான். தி.மு.க.வினர் அல்ல. அண்ணாமலை சிறைக்கு செல்வீர்கள் என்று என்னை கூறி வருகிறார். ஜெயிலுக்கு தான் செல்ல வேண்டும் என்றால் செல்ல தயார். அங்கு சென்று புத்தங்களை படித்து கொள்வேன்.

    மார்கண்டேயனை சிறையில் அடைத்தால் பல்கலைக்கழகம் உருவாகும். அண்ணா மலையை சிறையில் அடைத்தால் பா.ஜனதா இல்லாமல் போகும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் வெள்ளைச்சாமி, ராதா கிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் மேற்கு செயலாளர்கள் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், இளைஞர் பேரவை துணை அமைப்பாளர் அருள் சுந்தர், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், இமானுவேல், மாவட்ட கவுன்சிலர் மிக்கல் நவமணி, மாரியம்மாள், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.

    விளாத்திகுளம்:

    மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முயற்சியால் விளாத்திகுளம் தொகுதியை பசுமையான தொகுதியாக மாற்றும் முயற்சியாக விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது சூரங்குடி- எட்டையாபுரம் வரையிலான சுமார் 35 கிலோமீட்டர் சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான சாலை ஓரங்களில் உள்ள சீமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.

    இந்நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகி ராகவன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தாசில்தார் கிருஷ்ணகுமாரி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் குறுவட்டத்துக்கு உட்பட்ட மாசார்பட்டி மேலக்கரந்தை, அயன்ராஜாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2020-21-ம் ஆண்டு பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர் சேதமடைந்தது. இதற்குரிய பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அய்யாதுரை தலைமையில் விவசாயிகள் எட்டயபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில், புதூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராமன், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மகேஷ், நாகராஜ், சுப்புராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :-

    சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்திரன் என பலர் கட்சி ஆரம்பித்தும் காணவில்லை. விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க. தேய்ந்து விட்டது. ஆனால் என்றைக்கும் நம்பர் 1 கட்சியாக நிலைத்து நிற்கும் கட்சி அ.தி.மு.க. தான்.

    நம்பர் 1 கட்சி

    அ.தி.மு.க இன்றைக்கு எதிர்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்கள் உள்ளங்களில் ஆளும் கட்சி. அ.தி.மு.க.விற்கும் 3 எழுத்துக்கும் ஒரு ராசி உண்டு. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு 3 எழுத்து, இப்போது இ.பி.எஸ்.க்கும் 3 எழுத்து. இன்னொரு வருக்கும் 3 எழுத்து தான் ஓ.பி.எஸ். ஆனால் அவருக்கு முதல் எழுத்து பூஜ்யம் என்பதால் அவர் கணக்கில் வரமாட்டார்.

    அ.தி.மு.க.வில் இன்றைக்குள்ள நிலை போன்று 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி வரும். ஆனால் எழுச்சியுடன் வெற்றி பெறும். கட்சி கொடி, சின்னம் எங்களிடம் உள்ளது. நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க.வில் தெளிவு ஏற்பட்டு 3-வது அத்தியாயமாக எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக வருவார்.

    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும். தி.மு.க. ஆட்சியில் ஒரு நல்லதிட்டம் கூட வரவில்லை. நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 40-க்கு 40 அளித்தால் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×