என் மலர்
நீங்கள் தேடியது "evidence"
- கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
- பொதுமக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படுத்த முடியும்.
கும்பகோணம்:
மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு அமைச்சர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சண்முகம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- திராவிட இயக்கத்தை சேர்ந்த எங்களுக்கு சுந்தர சோழன், பெரியார் ஆவார்.
காஞ்சியை ஆண்ட ஆதித்த கரிகாலன், பேரறிஞர் அண்ணா. திருவாரூரில் பிறந்து தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதியை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் ராஜராஜ சோழனாக பார்க்கிறோம்.
குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ நாச்சியார் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோரிக்கைகளை முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ராஜராஜ சோழன் சதய விழா 5 நாள் நிகழ்ச்சியாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜராஜ சோழன் நிர்வாக திறமை குறித்து வரலாற்று சுவடுகளை கொண்டு நாம் அறியும்போது அவர் கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை நன்கு அறிய முடிகிறது.
எந்த பகுதியை அவர் கைப்பற்றினாலும் அந்த பகுதியை அந்த பகுதியில் வாழும் மக்களிடமே ஒப்படைத்து அவர்களையே ஆட்சி செய்ய வைத்து அவர்களிடம் இருந்து முறையாக வரியை பெற்றுக் கொண்ட மாபெரும் அரசனாக ராஜராஜ சோழன் இருந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-
மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சியை அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பை செய்தி மக்கள் தொடர்பு துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது.
ராஜராஜ சோழன் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டால் அவரது பிறந்தநாள் அன்று மட்டும் அந்த இடம் பயன்படுத்தப்படும்.
ஆனால் நினைவு அரங்கம் அமைத்தால் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், பொதுமக்கள் தங்களது இல்ல
சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் பயன்படுத்த முடியும். ஆய்வு நடத்த வலியுறுத்தப்படும் ராஜராஜ சோழன் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஆனால் அவர் இறந்த பிறகு இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக சொல்வதற்கான சான்றுகளை, ஆதாரங்களை சேகரிக்க உரிய ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மேற்கொள்வது தமிழ் வளர்ச்சித்துறையின் பொறுப்பில் உள்ளது.
எனவே அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்த கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். மேலும் இது தொடர்பாக முதல்-அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மண்டலக்குழு தலைவர் அசோக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், கும்பகோணம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் உள்ளூர் கணேசன், கருத்தரங்கு நிர்வாகி எஸ் கே ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவையாறு அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் தங்கமுத்து நன்றி கூறினார்.
- தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் 80 விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூா்:
கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை தாலுகா குருங்குளம் மேற்கு கிராமத்தில் இன்று கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா ஏற்பாட்டின் படி தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசன அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் வி.ஏ.ஓ.க்கள் செல்வராஜ் (குருங்குளம் மேற்கு ), புனிதா ( குருங்குளம் கிழக்கு ), சூர்யா ( திருக்கானூர்பட்டி ) ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உடனுக்கு டன் சான்று வழங்கினர். 80 விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர் சத்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் வெங்கடாஜலபதி, பினோலெக்ஸ் எம்.ஐ. கம்பெனி டார்வின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( விவசாயம்) கோமதிதங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளை பூதலூர் தாலுகா சானூரப்பட்டி வி.ஏ.ஓ அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 13-ந் தேதி பாலையப்பட்டி வடக்கு வி.ஏ.ஓ. அலுவலகத்திலும், 14-ந் தேதி புதுக்குடி தெற்கு கிராமத்திலும், 15-ந் தேதி தோப்பு விடுதியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
- இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் ஊராட்சியில்துளசிபுரம் ஊராட்சிஉள்ள கிராம நிர்வாக அலுவலககட்டிடம் கடந்த 2004 கட்டபட்டது.
தற்போது இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் வாங்க வந்து செல்கின்றனர்.
மோசமான நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.
- திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வுக்கு உட்பட்ட பகுதிகளில் கணவனை இழந்த இளம்பெண்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறவும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறவும் ஆதரவற்ற விதவைகள் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற னர்.
இந்த நிலையில் இருப்பி டச் சான்று, வாரிசு சான்று, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வற்றிக்கு விண்ணப்பித்தால் ஒரு சில நாட்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் ஆதர வற்ற விதவைகள் சான்றுக்கு விண்ணப்பித்தால் வருட கணக்கில் காலதாமதமாகி வருவதால் பயனாளிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதேபோல், ஆதரவற்ற விதவைச் சான்றுக்கு சப்-கலெக்டர் ரேங்கில் உள்ள வர்கள் மட்டுமே நேரடி யாக சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து வழங்குவார்கள்.
ப.வேலூர் தாலுகா உட்பட்ட ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் அனைத்தும் ப.வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் அங்கு செல்லும் ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது.
இதனால் சான்றுபெற விண்ணப்பித்த வர்கள் கடும் அதிருப்தியில் உள்ள னர். தற்போது புதிய தாக பதவியேற்ற திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா ஆதரவற்ற வித வைகள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
- எங்களுடைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் துறை சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றுகளை 100 பயனாளிகளுக்கு கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்படுகின்றது. இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும். நரிக்குறவர் இன மக்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பழங்குடியினர் இன ஜாதி சான்று பெற்ற நரிக்குறவர் சமுதாய பெண் ரம்பா (வயது 26) கூறியதாவது:-
நரிக்குறவர் சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இது எங்களுடைய பல நாள் கனவு. முதல்-அமைச்சர் எங்கள் நரிக்குறவர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இன்று மாவட்ட கலெக்டரால் இந்த பழங்குடி யினர் ஜாதி சான்றிதழ் எங்களுக்கு கிடைக்க பெற்றிருக்கிறது. எங்களு டைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது. இதற்கு முதல்- அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றி.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், பல்லவராய ன்பேட்டை ஊராட்சி தலைவர் சேட்டு, நரிக்குறவர் இன மக்கள் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் வட்டார குழு அமைத்து கட்டணமின்றி அங்கக சான்று பெறலாம்.
- இந்த தகவலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தனியாக அல்லது குழுக்கள் அமைத்து உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர்.
விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வளப்பொருள் சேகரிப்பு செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். பதிவு கட்டணம், ஆய்வு சார்ந்த கட்டணம், பயண நேரம் கட்டணம் மற்றும் சான்று கட்டணமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 700, பிற விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 200, விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.7 ஆயிரத்து 200 மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரத்து 400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது ஒரே வட்டாரத்தில், ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக சேர்ந்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் அங்ககச் சான்று பெறலாம்.
இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்யலாம். இதற்கு 10 முதல் 50 விவசாயிகள் இணைந்து குழு அமைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
இதில் பதிவு செய்யும் விவசாயிகள் தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின்கீழ் அங்கக சான்று பெறு வதற்காக வழங்கப்படும் அதே ஆவணங்களை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். 3-ம் நபர் ஆய்வு இல்லை. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் கட்ட ணமின்றியும், எளிமை யாகவும் அங்ககச் சான்று பெற முடியும்.
விவசாயிகள் பங்களிப்பு உறுதி அளிப்புத்திட்டத்தில் கட்டணம் இல்லாமல் அல்லது மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி கட்டணம் செலுத்தி பதிவு செய்து அங்கக சான்று பெற்று பயன்பெறலாம்.
மேலும் தகவல்களுக்கு உழவர் மையம், ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகம் (தலைமை அரசு மருத்துவமனை எதிரில்) ராமநாதபுரம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார்.
- இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தை இயக்கிய ஆர்.டி.எம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் சார்பில் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹான் இசையமைக்க கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். எம். தீபக் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

எவிடன்ஸ் போஸ்டர்
அதன்படி, இப்படத்திற்கு 'எவிடன்ஸ்' (Evidence) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
First Look of #EVIDENCE ?Every single clue is a big lead here ??
— G.V.Prakash Kumar (@gvprakash) September 30, 2023
Directed by @RDM_dir
Music by @RonYohann
Produced by @kathiresan_offl's @5starcreationss
Starring @SasikumarDir @Naveenc212 @iYogiBabu #KasthuriRaja @gnanakaravel @vishnushri @deepakalan53 @hmusicindia… pic.twitter.com/Cmx0hW82i1
- சான்று இல்லாமல் பொட்டல பொருட்களை விற்ற 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை
சென்னை முதன்மைச் செயலாளர்-தொழிலாளர் ஆணையரின் உத்தரவின்படியும், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தலின் படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரின் வழிகாட்டுதலின்படியும, தொழிலாளர் இணை ஆணையரின் அறிவுரையின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுபவர்கள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்யும் 35 வணிக நிறுவனங்களில்
சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பொட்டல–ப்பொருட்கள் விதிகளின் கீழ் காணப்பட வேண்டிய சான்றுரைகள் இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த 5 நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர்களும் பொட்டலம் இடுபவர்களும் விற்பனையாளர்களும், நுகர்வோர் நலன் கருதி தயாரிப்பாளர், பொட்டலமிடுபவரின் பெயர், முழு முகவரி, பொட்டலப்பொருளின் பெயர், நிகர எடை, தயாரிக்கப்பட்ட மாதம் ,வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பின்பற்றப்பட வேண்டிய விபரங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வணிகர்கள் எடை அளவைகள் மற்றும் தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் அவர்களின் பெயர், விவரங்களை "labour.tn.gov.in/ism" என்ற இணையதளத்தில் கட்டாயம் விடுதலின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. இருப்பினும், அதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா அளித்தால், சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசில் நிலவும் எண்ணத்தை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தது. ஆனால், குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பதன்கோட் விமான தளத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக நேரில் வந்து ஆய்வு நடத்த பாகிஸ்தான் விசாரணை குழுவை அனுமதித்தோம். ஆனால், தங்கள் நாட்டுக்கு திரும்பிய பாகிஸ்தான் குழு, இந்தியா ஆதாரம் அளிக்க தவறி விட்டதாக கூறியது.
பாகிஸ்தான் இத்தகைய முறையில் நடந்து கொள்ளும்போது, அதனிடம் ஆதாரங்களை அளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, ஆதாரம் அளிப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை.
அதற்கு பதிலாக, எங்கள் நட்பு நாடுகளிடம் அந்த ஆதாரங்களை அளித்து, பாகிஸ்தானின் முகமூடியை கிழித்து எறிவோம். புலவாமா தாக்குதல் உள்பட இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் பாகிஸ்தானின் தொடர்பை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதே எங்களது முக்கிய பணி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலால் இரு நாட்டு உறவு மேலும் சீர்குலைந்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கப்படும் என இந்திய தலைவர்களும், பாதுகாப்பு படையினரும் சூளுரைத்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கவலை வெளியிட்டு உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியுள்ளார். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அங்கு நிலவி வரும் பதற்றத்தை குறைக்க உடனடி நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொள்ளுமாறும் குட்டரஸ் கூறியதாக ஸ்டீபன் தெரிவித்தார்.
முன்னதாக காஷ்மீர் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது:-
மும்பை தாக்குதல், பதன்கோட் தாக்குதல் தொடர்பாக இந்தியா ஆதாரங்கள் அளித்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும், இம்ரான் கான் புதியவர் என்பதால், அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்ப்பதற்காக அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆதாரங்களை அவரிடம் அளிக்க வேண்டும்.
போர் மூள்வது இரு நாடுகளுக்கும் நல்லதல்ல. பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

“கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஓபிஎஸ் எச்சரித்தார்.
தேர்தல் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என்றும் கூறினார். #KodanadVideo #Stalin #OPS