என் மலர்
நீங்கள் தேடியது "executives"
- காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அரசு வக்கீல் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவசாமி ஆகியோர் பேசினர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நந்தகுமார், செல்லையாதேவர், சங்கர், சோமசுந்தரம், சற்குண பாண்டியன், கோபால், சிவகாசி ஷேக், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர்.
- கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எத்தனைபேர் எத்தனை சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர் என அறிக்கையாக வெளியிடவேண்டும்.
காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைந்து அருகில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தொழிற்சாலை சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தை தொழிலாளர் ஒருவர் விபத்தில் இறந்துள்ளார். குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தியது தண்டனைக்குரிய குற்றம். இந்த குற்றத்தை செய்த நிறுவன உரிமையாளர், நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர்.
- ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் ‘கருப்பு ஆடுகள்’ மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
நடந்து முடிந்த புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கும், பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்திற்கும் நேருக்கு நேராக கடும் போட்டி நிலவியது.
பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவராக பொறுப்பு வகித்தவர். மேலும் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இதனால் 30 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவருக்கு பரிச்சயமானவர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர். இதனால் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
'நீங்கள் பா.ஜனதாவுக்கு நேரடியாக ஓட்டு சேகரிக்க வேண்டாம். ஆனால் காங்கிரஸ் பிரசாரத்துக்கு செல்லாமல் ஒதுங்கி இருந் தால்போதும் என நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடல்நிலை சரியில்லை என கூறி பிரசாரத்தில் பங்கேற்காமல் 'எஸ்கேப்' ஆகிவிட்டனர். இதுதவிர வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் வேகம் காட்டவில்லை.
இதுகுறித்த தகவல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள், ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் 'கருப்பு ஆடுகள்' மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
- எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.
மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.
சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.
இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள் சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும்.
- மோடிஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் T.K.தமிழ்நெஞ்சம், அவர்கள் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- குமாரபாளையம் விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதலில் ஈடுப்பட்டனர்.
- அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
குமாரபாளையம்:
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 -2023-ன்படி குமார பாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1.92 கோடி மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அந்த இடத்தில் தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் வந்தி ருந்தனர்.
அப்போது அங்கு வந்த விஜய்கண்ணன், இது நகராட்சி சார்பில் நடத்தப்படும் பூமி பூஜை, இதில் அரசியல் கட்சியினர் பங்கேற்க அனுமதி இல்லை, கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இது பற்றி நகர செயலாளர் செல்வம் கூறியதாவது:-
இது தமிழக அரசு ஒதுக்கிய நிதி, அதுவுமின்றி பொது நிகழ்ச்சி. நாங்கள் பங்கேற்போம்.
அமைச்சர் நேரு 2 நாட்க ளுக்கு முன்பு வந்த போது, காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பாக பணி யாற்றியதற்காக, சால்வை அணிவித்து பாராட்டினார்.
மேலும் நகராட்சி சார்பில் நடக்கும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பங்கேற்க வேண்டும் எனவும் கூறி சென்றார். எனவே அரசு விழாக்களில் நாங்கள் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்டவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர்க் கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க.15-வது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் பேரூர்க் கழகத்தேர்தலில் தேர்ந்ெதடுக்கப்பட்ட பேரூர்க் கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் விவரம் மாவட்டவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 1 என்பது அவைத்தலைவரையும்,2 செயலாளரையும்,3 – துணைச் செயலாளரை (பொது)யும்,4 துணைச் செயலாளரை (ஆதிதிராவிடர்)யும்,5- – துணைச் செயலாளரை (மகளிர்)யும்,6 – பொருளாளரையும்,7 – மாவட்ட பிரதிநிதிகளை(இருவர்)யும்,8 ஒன்றிய பிரதிநிதிகளை(ஐவர்)யும் குறிப்பிடும்.
திருப்பூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
திருப்பூர் கிழக்கு மாவட்டம், ஒன்றியம் தாராபுரம், பேரூர்: சின்னக்காம்பாளையம்- 1.சி. சுப்பிரமணியம் 2. ரா.பன்னீர்செல்வம் 3. என். பூபதி 4. எம்.காளிமுத்து 5.என். சாந்தி 6.ஆர். கதிர்வேல் 7.மா. கனகராஜ், ஈ.நாட்டுத்துரை 8. க.ரத்தினசாமி, பி.காளியப் பன், கே.சம்பத்குமார், எம்.ஜெயக்குமார், கே. மகேஸ்வரன். பேரூர்: கொளத்துப்பாளையம் 1. எம். புவனேந்திரன் 2. கே.கே.துரைச்சாமி 3. பி. சிவக்குமார் 4. கே. குப்புசாமி 5.பி.முத்துமணி 6. பி. கிருஷ்ணமூர்த்தி 7.பி. ரத்தினசாமி, ந. ஜெயக்குமார் 8.ஆர். ஹரிஹரகிருஷ்ணன், ந. சிவசண்முகம், கே. செந்தில்குமார், சி.காளிதாஸ், டி. சிவராஜ்.
மூலனூர் ஒன்றியம் -பேரூர் மூலனூர் -1. சி.விஸ்வநாதன் 2. க.தண்டபாணி 3.ப. செந்தில்குமார் 4. பி. பாலசுப்பிரமணி 5. அ.உமாதேவி 6. கு.செல்லமுத்து 7.பி.அர்ச்சணசாமி, சா.ஜெகதீஸ்வரன் 8. எஸ்.சங்கர், மு. கந்தசாமி, செ. மதன்குமார், கு. சசிக்குமார், வி. செல்லத்துரை.
பேரூர்: கன்னிவாடி- 1.கே. எஸ். சீரங்கராயன் 2. கோ.சுரேஷ் 3. வி. பொன்மதன் 4. எஸ். சுந்தரம் 5. எம்.கலைமதி 6. ஆர்.சுப்பிரமணி 7.பி.வடிவேல், சி.பெரியசாமி 8. கே. வெள்ளைசாமி, எஸ். கிரிகுமார், வி.எஸ். ராமசாமி, எஸ்.நல்லசிவம், எஸ்.முருகேசன்.
ஒன்றியம் குண்டடம் மேற்கு ,பேரூர் ருத்ராவதி- 1.என். கண்ணகுமார் 2. எஸ். அன்பரசு 3. டி. பிரபாகரன் 4. எஸ். பிரகாஷ் 5. எல். மோகனசெல்வி 6. பி. சிவசுப்ரமணியன் 7. என். நந்தகோபால், எஸ். எம். தங்கவேல் 8.எம். கோபிநாத், கே.சண்முகசுந்தரம், பி.தனசேகரன், கே.பாலசுப்பிரமணியம், என். ராமசாமி.
ஒன்றியம் வெள்ளக்கோவில்- பேரூர் முத்தூர்- 1.கே. பழனிசாமி 2. கு. குப்புசாமி 3. ஆர். வீரக்குமார் 4. க.சுப்பிரமணி 5.எஸ்.தங்கமணி 6. எ.சுப்பிரமணி 7.மு.க.அப்பு. எஸ். பௌதியப்பன் 8.பி.ராஜேந்திரன், வி.சம்பத், எ. கோவிந்தராஜ், வி.எஸ். சுப்பிரமணி, எஸ்.ஜெகதீஸ்வரன்.
ஒன்றியம்ஊத்துக்குளி வடக்கு -பேரூர் குன்னத்தூர்- 1.கே.சி. பூவராகவன் 2.சி. சென்னியப்பன் 3.டி.எஸ். கோபாலகிருஷ்ணன் 4.கு.சுப்பிரமணியம் 5.எஸ். அன்புச்செல்வி 6. மு.இளங்கோ 7. எஸ். கே. முருகசாமி, கே.எ. இளங்கோவன் 8.சி.எம். கருப்புச்சாமி, கே.ஜி. சோமசுந்தரம், தி. தீபா , சி.ராஜ்குமார், ம.ராஜேஸ்வரி.
ஒன்றியம் ஊத்துக்குளி தெற்கு- பேரூர் ஊத்துக்குளி- 1.மா.தெய்வசிகாமணி 2. கே. கே. இராசுக்குட்டி 3. டி.ராஜேந்திரன் 4. எம். கைத்தான் 5.கா.வாசுகி 6. சி.பி. செல்வராஜ் 7. ஆ.கோபால்ராஜா, மெ. ரமேஷ்குமார் 8.சு. செந்தில்குமார், கு.ராமசாமி, கா.பாலசுப்பிரமணி, ப.ரவிச்சந்திரன், எம். வரதராஜன்.
திருப்பூர் தெற்கு மாவட்டம் -ஒன்றியம் மடத்துக்குளம் மேற்கு- பேரூர் மடத்துக்குளம்- 1.ஆர். மாரிமுத்து 2. என். பாலகிருஷ்ணன் 3. டி. கௌதமன் 4. கே.ஆறுமுகம் 5. வி. கனகபூரணி 6. எஸ்.டி.ஏ. வதூத் 7. டி. ரங்கநாதன், கே. பாலதண்டபானி 8. ஏ. சதாசிவம், எம். கே. சிவக்குமார். ஆர். துளசிமணி, ல. பாலசுப்பிரமணியன், என்.கார்த்திக்ராஜா,
ஒன்றியம் - மடத்துக்குளம் மத்திய- பேரூர் கணியூர்- 1. எம். சாகுல் அமீது 2. ஏ. பாலகிருஷ்ணன் 3. என். சங்கர் 4. பி. முத்துக்கிருஷ்ணன் 5. இ. பரமேஸ்வரி 6. கே.கமாலுதீன் 7. கே.எம். இம்தாதுல்லா , வி. பஞ்சலிங்கம் 8. எஸ்.சாரங்கபாணி, கே. கிருஷ்ணன், எஸ்.மதிவாணன், கே.செல்வராஜ், டி.நாகராஜ் .
ஒன்றியம் மடத்துக்குளம் கிழக்கு- பேரூர் : குமரலிங்கம்- 1. கே.அழகர்சாமி 2. எம். ஆச்சிமுத்து 3. சி. ராஜேஷ்கண்ணன் 4. டி.சரவணன் 5. வி.கார்த்திகா 6. ஏ.லியாகத் அலி 7. ஏ.செங்கமலை, பி. முகமது ரபி, 8. பி. மகுடீஸ்வரன், கே.நடராஜன், டி. செந்தில்குமார், டி. மணிவண்ண ன், ஏ.சாகுல் அமீது.
பேரூர்சங்கராமநல்லூர் -1.டி.ஆசைத்தம்பி 2. ஆர்.ஏ. சாதிக்அலி 3. என். முத்துக்கிருஷ்ணன் 4. பி. முருகன் 5. ஏ. மீனாட்சி 6. எஸ். வெள்ளியங்கிரி 7. ஆர்.ராஜேந்திரன், கே.கணகுராஜ் 8. டி.முத்துவேல், ஏ. பழனிச்சாமி, பி. முத்துகிருஷ்ணன், எஸ்.ராஜமாணிக்கம், கே. கிருஷ்ணசாமி
ஒன்றியம்உடுமலைப்பேட்டை மேற்கு- பேரூர் தளி -1. ஏ. சம்சுதீன் 2. வி. உதயகுமார் 3. கே. திருமூர்த்திராஜ் 4. டி. ராதாகிருஷ்ணன் 5. கே. வீரம்மாள் 6. கே.சுப்பிரமணியன் 7. எஸ். செல்வராஜ், ஆர். ஆனந்ராஜ் 8.ஏ. ஆதம்சையது அபுதாகீர், எஸ். தேவராஜ், ஏ. ராமானுஜம், ஏ.ராமசாமி, எம்.சின்னராஜ்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
சிவகங்கை
சிவகங்கையில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன் ஆகியோர் பேசினர்.
தி.மு.க. அரசை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் வருகிற 25-ந் தேதி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட தலைநகரில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை :
உடுமலை தேஜஸ் சங்கத்தின் 12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை ஐ. எம் .ஏ .அரங்கில் நடந்தது..முன்னாள் தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார். மாவட்ட ஜெனரல் செகரட்டரி வரதராஜ் மாவட்ட கோ ஆர்டினேட்டர் ஆர். பி.ராஜ் ,ரீஜினல் கோ ஆர்டினேட்டர் யூ .கே .பி .எம். கார்த்திகேயன் ,உதவி கவர்னர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட கவர்னர் இளங்குமரன் ,சிறப்பு அழைப்பாளராக கோவை விஜிஎம். மருத்துவமனை சேர்மன் டாக்டர் மோகன் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைவராக சத்தியம் பாபு என்ற சண்முகசுந்தரம், செயலாளராக ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய தலைவர் சத்தியம் பாபு என்ற சண்முகசுந்தரம் ஏற்புரையாற்றினார். முன்னாள் தலைவர் பொறியாளர் பாலமுருகன் ,செயலாளர் கே .ஆர் .எஸ் ,செல்வராஜ் ஆகியோர் ரோட்டரி சங்கம் ஆற்றிய சமூகப் பணி குறித்து பேசினர். மாவட்ட கவர்னர் இளங்குமரன் உலக அளவில் ரோட்டரி சங்கம் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், ரோட்டரி சேவைகள் குறித்தும் பேசினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிவகங்கை அருகே பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல் நடத்தக்கோரி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
- பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை அடுத்த மதகுபட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு அபூபக்கர் சித்திக் ஜும்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வாசலில் நிர்வாகிகள் தேர்வு என்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்து தாங்கள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
இந்த பள்ளிவாசல்நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஜமாத்தார்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து தமிழ்நாடு வக் வாரியம் நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தியும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்யாமல் உள்ளனர்.
எனவே உடனடியாக நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி வாசல் முன்பு உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பெரியபட்டினத்தில் மினிமாரத்தான் போட்டி நடந்தது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் நகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற மக்கள் சங்கமம் மாநாடு வருகிற 30 மற்றும் ஜூலை 1-ந் தேதிகளில் பெரியபட்டினம் தர்கா திடலில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.
போட்டியை மாநில செயலாளர் முகமது ரசின் தொடங்கி வைத்தார். பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முத்துப்பேட்டை, சேதுநகர், மங்கம்மா சாலை வழியாக மீண்டும் பெரியபட்டினம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இதில் முதல் இடத்தை ஆசிப், 2-வது இடத்தை யூசுப், 3-வது இடத்தை மைதீன் ஆகியோர் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.