என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "exit poll"
- இரு மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
- ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அரியானாவில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 56-66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கணித்துள்ளது.
பாஜக 18- 24, ஜேஜேபி 0- 3 தொகுதிகளிலும், மற்றவை 2- 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோல், சிஎன்என் நியூஸ் 18 தகவலின்படி காங்கிரஸ் 59, பாஜக 21, ஆம் ஆத்மி 0, மற்றவை 6 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில், காங்கிரஸ் கூட்டணி 49- 61 இடங்களை கைப்பற்றி வெற்றிபெறும் என என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 20- 32 இடங்களையும், பிடிபி 7-11 இடங்களையும், மற்றவை 4-6 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் கருத்துக் கணிப்பு.
- 290 முதல் 295 தொகுதிகளை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 1-ந்தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் பெரும்பாலான டிவி சேனல்கள் கருத்துக் கணிப்ப நடத்தும் நிறுவனங்களுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான நிறுவனங்கள் பாஜக தலைமயிலான கூட்டணி 450 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்தனர்.
ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் (Axis My India) பாஜக கூட்டணி 400 இடங்களை பிடிக்கும என கருத்து கணிப்பில் தெரிவித்திருந்தது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில செய்தி சேனல் இந்தியா டுடே நேரலை விவாதம் நடத்தியது. இதில் ஆக்சிஸ் மை இந்தியா நிர்வாக இயக்குனர் பிரதீப் குப்தா கலந்து கொண்டார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் சற்று அதிகமான முன்னிலை பெற்றது. அதன்பின் இந்தியா கூட்டணி சலைக்காமல் பல இடங்களில் முன்னிலை பெற்றது.
Pradeep Gupta crying. ?? pic.twitter.com/kRRRNv3fsc
— Mohammed Zubair (@zoo_bear) June 4, 2024
பெரும்பாலான மாநிலங்களில் பாஜக சரிவை சந்தித்துள்ளது. இதனால் கருத்துக் கணிப்பு பொய்யாகியுள்ளது. நேரடி விவாதத்தின்போது கருத்து கணிப்பு குறித்து பிரதீப் குப்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தொடர்ந்து பதில் அளித்த வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தனது நிறுவனத்தின் கருத்து கணிப்பு தவறாகிவிட்டதே... என எண்ணி கதறி அழுதத் தொடங்கிவிட்டார். விவாதத்தை நடத்தியவர் ஆறுதல் கூறிய போதிலும் பிரதீப் குப்தாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- பா.ஜனதா தனியாக 240 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஜே.பி. நட்டா அமித் ஷாவுடன் ஆலோசனை.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான 272 என தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா வீட்டிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah arrives at the residence of BJP chief JP Nadda. pic.twitter.com/GK7get69uR
— ANI (@ANI) June 4, 2024
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பு ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
#WATCH | Delhi: Defence Minister and BJP leader Rajnath Singh arrives at the residence of party chief JP Nadda. pic.twitter.com/3uL2cUkzUs
— ANI (@ANI) June 4, 2024
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 தேர்தலில் பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 240 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கருத்துக் கணிப்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
- ஆனால், மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு பா.ஜனதாவை தனியாக எதிர்த்து நின்றார் மம்தா பானர்ஜி. சந்தேஷ்காளி உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கையில் எடுத்து பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட பார்த்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 22 இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியானது. அப்போது மம்தா பானர்ஜி கருத்து கணிப்பு பொய்யாகும் என உறுதியாக கூறினார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் முன்னணி வகித்தது. நேரம் செல்ல செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.
தற்போது 29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த முறை 18 இடங்களை பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மம்தாவின் 29 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350-க்கு மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தகவல்.
- மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பிடிக்க வாய்ப்பே இல்லை- எதிர்க்கட்சிகள்.
பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் அனைத்து நிறுவனங்களும் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளை தாண்டாது என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்து வந்தார்கள். இதனால்தான் ஜூன் 1-ந்தேதி கார்கே வீட்டில் தலைவர்கள் சந்தித்து பேசினார். அப்போது வெற்றி பெறுவோம் என மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, கர்நாடகா துணை முதல்வர் டிகு சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து கணிப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர். கருத்து கணிப்பை மீறி 295 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் உன உறுதியாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு எதிராக எங்களுடைய தேர்தல் முடிவுகள் அமையும் என மிகவும் நம்புவதாக தெரிவித்தள்ளார்.
இது தொடர்பாக சோனியா காந்தி கூறுகையில் "நாம் காத்திருக்க வேண்டும். காத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு முற்றிலும் எதிராக எங்களுடைய தேர்தல் முடிவுகள் அமையும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையாக உள்ளோம்.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
"இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்று அழைக்கக் கூடாது. இது மோடி மீடியா கணிப்பு" என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்.
- கடந்த வருடம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்த பெரும்பாலான கணிப்புகள் தவறாக அமைந்தது- சசி தரூர்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டி பிடிக்கும் என தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அதிகமான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என உறுதியான நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், கருத்துக் கணிப்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை.
இந்த நிலையில் திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில் "இந்தியா கூட்டணி எளிதாக சுமார் 300 இடங்களை பிடிக்கும்.
#WATCH | On exit polls, DMK leader TKS Elangovan says, "INDIA alliance will get around 300 seats easily. NDA will lose in many states including Bihar, UP, Rajasthan, Gujarat." pic.twitter.com/babLMSZsh6
— ANI (@ANI) June 1, 2024
பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்" என்றார்.
கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில் "நான் எந்தவொரு கருத்துக் கணிப்பையும் நம்புவதில்லை என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். கர்நாடகா மாநிலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கே கூறுகையில் "மக்களின் தீர்ப்பிற்காக காத்திருப்போம். எங்களுக்கு அதீத நம்பிக்கை உள்ளது. நாங்கள் முற்போக்கு அரசியல், வேலைவாய்ப்பு, வெளிநாடு கொள்கை உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளொம். மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்கு அளித்திருப்பார்கள் என்பதை உறுதியாக கூற முடியும்" என்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் கூறுகையில் "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மிகவும் அறிவியல் சார்ந்தவை கிடையாது. கடந்த வருடம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்த பெரும்பாலான கணிப்புகள் தவறாக அமைந்தது.
#WATCH | On exit polls, Congress MP & candidate from Kerala's Thiruvananthapuram, Shashi Tharoor says, "...We have been travelling throughout the country campaigning and have a sense of what is the reality on the ground. Exit polls are deeply unscientific. Last year, the majority… pic.twitter.com/adGyLaGmKM
— ANI (@ANI) June 1, 2024
உண்மையான கருத்துக்கணிப்பில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். கர்நாடகாவில் பாஜக கணிசமான அளவு தோல்வியடையும். கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் நிச்சயமாக வெற்றி பெறாது" என்றார்.
- உத்தர பிரதேச மாநிலத்தில் 70 தொகுதிகள் வரை பிடிக்கும் வரை தகவல்.
- ஆந்திராவில் 22 இடங்கள் வரை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
பாஜக கூட்டணியால் 200 இடங்களை தாண்ட முடியாது என இந்தியா கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
பாஜக 400 இடங்கள் என்பதை இலக்காக கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. கடந்த முறை 333 இடங்களை கூட்டணியாக பிடித்தது. தற்போது 20 இடங்கள் கூடுதலாக பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த மாநிலங்கள் கைக்கொடுத்தன என்பதை பார்ப்போம்.
ஆந்திரா
ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 25 தொகுதிகள் உள்ளன. கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தற்போது கருத்துக் கணிபபில் 19 முதல் 22 இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 இடங்கள் என்றால் பாஜக கூட்டணிக்கு 19 இடங்கள் அதிகரிக்கும். இது மிகப்பெரிய வித்தியாசத்தை பாஜக கூட்டணிக்கு கொடுக்கும்.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தில் பாஜக கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 4 இடங்கள் அதிகமாக பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 4 இடங்கள் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 64 இடங்களை பிடித்திருந்தது. தற்போது 70 இடங்கள் வரை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 இடங்கள் கிடைக்கும்.
தெலுங்கானா
17 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கடந்த முறை 4 தொகுதிகளை பிடித்தது. 10 தொகுதிகள் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறு தொகுதிகள் அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் பா.ஜனதா 359 தொகுதிகளை கைப்பற்றும்.
- இந்தியா நியூஸ் கருத்து கணிப்பில் பா.ஜனதா 371 தொகுதிகளை கைப்பற்றும்.
543 தொகுதியில் ஒரு இடத்தில் பா.ஜனதா போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 542 இடங்களுக்க ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைறெ்றது. இன்று மாலை 6 மணியுடன் கடைசி கட்ட வாக்குப்பதி முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.
ரிபப்ளிக் டிவி- பி.மார்க்-மேட்ரிஸ் (Republic TV- PMARQ-Matrize)
பா.ஜனதா கூட்டணி 359 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 154 தொகுதிகளில் வெற்றி பெறும்.
இந்தியா நியூஸ்- டி. டையாமிக்ஸ் (India News- D-Dyamics)
பா.ஜனதா கூட்டணி 371 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெறும்.
ஜன் கி பாத் (jan Ki Baat)
பா.ஜனதா கூட்டணி 362 முதல் 392 வரை. இந்தியா கூட்டணி 141 முதல் 161 வரை
ரிபப்ளிக் பாரத்- மாட்ரிஸ்
பா.ஜனதா கூட்டணி 353 முதல் 368 வரை. இந்தியா கூட்டணி 118 முதல் 133 வரை
என்டி-டிவி
பா.ஜனதா கூட்டணி 365 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 142 தொகுதிகளில் வெற்றி பெறும்.
- பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிந்துள்ளது.
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது.
நியூஸ் 18 கருத்துக் கணிப்பு
தமிழகத்தில் திமுக 20 முதல் 22 இடங்கள் கைப்பற்றும்
காங்கிரஸ் 6-8 இடம்
பாஜக 1-3
அதிமுக 0-2
இந்தியா டுடே
தமிழகத்தில் திமுக 20-22
காங்கிரஸ் 6-8
அ.தி.மு.க. 2
இந்தியா கூட்டணி 33-37
ஏபிபி- சி வோட்டர் (ABP - C Voter)
தி.மு.க. கூட்டணி 37-39
அ.தி.மு.க. 1
பா.ஜ.க. 1
- வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும்.
- இந்த கருத்துக் கணிப்புகளை அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து கருத்து கணிப்பு வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை செய்தி நிறுவன தொலைக்காட்சிகள் வெளியிடும். அப்போது கட்சித் தலைவர்களை அழைத்து விவாதங்கள் நடத்தப்படும். அப்போது கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சி சார்பாக பேசுவார்கள்.
இதற்கிடையே, இந்த விவாதங்களில் எங்கள் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பான் டிவி விவாதங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும். ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் திடீர் பல்டியால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
- வாக்குப்பதிவுகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும்.
- பெரும்பாலான இந்த கருத்துக் கணிப்புகளை அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்வது வழக்கமாக உள்ளது.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து கருத்து கணிப்புகள் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை செய்தி நிறுவன தொலைக்காட்சிகள் வெளியிடும்.
அப்போது கட்சித் தலைவர்களை அழைத்து விவாதங்கள் நடத்தப்படும். அப்போது கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சி சார்பாக பேசுவார்கள். இந்த விவாதங்களில் எங்கள் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மக்கள் வாக்களித்து தீர்ப்பு உறுதி செய்யப்பட்டள்ளது. முடிவு 4-ந்தேதி வெளியாகப்போகிறது. டிஆர்பி-க்கான ஊகங்களில் ஈடுபதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் பார்க்கவில்லை.
காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கலந்து கொள்ளாது. எந்தவொரு விவாதத்தின் நோக்கம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு நடைபெறும் விவாதங்களில் மகிழ்ச்சியாக கலந்து கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
- மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும்.
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
இதில், மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 21.
கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:
ஜன் கி பாத்: மி.தே.மு 10- 14, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.
இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ்: மி.தே.மு 14- 18, ஜோ.ம.இ 12- 16, காங்கிரஸ் 08- 10, மற்றவை 00- 02.
பி- மார்க்யூ: மி.தே.மு 14- 20, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.
(மி.தே.மு- மிசோ தேசிய முன்னணி, ஜோ.ம.இ- சோரா மக்கள் கட்சி)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்