search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருத்து கணிப்பை மீறி 300 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: டிகேஎஸ் இளங்கோவன்
    X

    கருத்து கணிப்பை மீறி 300 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: டிகேஎஸ் இளங்கோவன்

    • பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்.
    • கடந்த வருடம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்த பெரும்பாலான கணிப்புகள் தவறாக அமைந்தது- சசி தரூர்.

    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டி பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அதிகமான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என உறுதியான நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், கருத்துக் கணிப்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை.

    இந்த நிலையில் திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில் "இந்தியா கூட்டணி எளிதாக சுமார் 300 இடங்களை பிடிக்கும்.

    பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்" என்றார்.

    கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில் "நான் எந்தவொரு கருத்துக் கணிப்பையும் நம்புவதில்லை என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். கர்நாடகா மாநிலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கே கூறுகையில் "மக்களின் தீர்ப்பிற்காக காத்திருப்போம். எங்களுக்கு அதீத நம்பிக்கை உள்ளது. நாங்கள் முற்போக்கு அரசியல், வேலைவாய்ப்பு, வெளிநாடு கொள்கை உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளொம். மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்கு அளித்திருப்பார்கள் என்பதை உறுதியாக கூற முடியும்" என்றார்.

    காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் கூறுகையில் "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மிகவும் அறிவியல் சார்ந்தவை கிடையாது. கடந்த வருடம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்த பெரும்பாலான கணிப்புகள் தவறாக அமைந்தது.

    உண்மையான கருத்துக்கணிப்பில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். கர்நாடகாவில் பாஜக கணிசமான அளவு தோல்வியடையும். கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் நிச்சயமாக வெற்றி பெறாது" என்றார்.

    Next Story
    ×