search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Famous Rowdy"

    • குற்ற செயல்களை செய்து விட்டு சரவணக்குமார் தப்பித்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
    • பதுங்கி இருந்த சரவணக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்தவர் சின்னக்குண்டு என்ற சரவணக்குமார் (வயது 36).

    பிரபல ரவுடியான இவர் மீது தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையம் மற்றும் பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்பட 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    ஆனால் குற்ற செயல்களை செய்து விட்டு சரவணக்குமார் தப்பித்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார்.

    இதையடுத்து சரவணக்குமாரை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் மருத்துவ கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த சரவணக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.
    • சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

    கடலூர்:

    சிதம்பரம் கோவிந்தசாமி தெரு காரியபெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகி என்கிற சண்முகம். இவர் கோவில் சிலை செய்யும் நபர். நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். மறுநாள் காலை மருத்துவ மனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் பணம் வாங்கிக்கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார். அவரது தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மர்மமான முறையில் இறந்த சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் அவரது பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • இவர் மீது கொலை வழக்கு உள்பட 17 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    அவர் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம், அகஸ்தேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற செல்வம் (வயது 34) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செல்வம் மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட 4 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணிநகர், தெற்கு தாமரைக்குளம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வேலூர் மாவட்டத்தில் வேலூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் மற்றும் கோவை மாவட்டத்தில் ஆனைமலை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • திருச்சியில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது
    • கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிட்டாய் பாபு மீது 18 வழக்குகளும், ஜான் எமிலி கிறிஸ்டோபர் மீது 5 வழக்குகளும் அன்சாரி மீது ஐந்து வழக்குகளும், சந்தோஷ் குமார் மீது 15 வழக்குகளும் நிலுவையில் உள்ளது

    திருச்சி:

    திருச்சி முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). பிரபல ரவுடியான இவர் மீதுபல வழக்குகள் உள்ளது. இவருக்கும் வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்த மிட்டாய் பாபு (32), உப்பு பாறை பிள்ளைமா நகர் பகுதியை சேர்ந்த டக்ளஸ் (29) உள்ளிட்ட இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று முன் தினம் இரவு மணிகண்டன் தன்னுடைய மனைவிக்கு இரவு உணவு வாங்குவதற்காக கடைக்குச் சென்ற போது அங்கு வந்த மிட்டாய் பாபு, டக்ளஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மணிகண்டனை வழிபறித்து கடுமையான தாக்கி அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மணிகண்டன் பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மிட்டாய் பாபு, டக்ளஸ் அரியமங்கலம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கவியரசு (23), காந்தி மார்க்கெட் எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்த ஜான் எமிலி கிறிஸ்டோபர் (23), அன்சாரி (23), வடசேரி பென்சனர் தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிட்டாய் பாபு மீது ஏற்கனவே 18 வழக்குகளும், ஜான் எமிலி கிறிஸ்டோபர் மீது ஐந்து வழக்குகளும் அன்சாரி மீது ஐந்து வழக்குகளும், சந்தோஷ் குமார் மீது 15 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கொலை வழக்குகளில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி மோகன்ராம் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்புதூரை சேர்ந்தவர் மோகன்ராம் (வயது 36). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில், 10 கொலை வழக்குகள் அடங்கும். திண்டுக்கல்லில் 4 கொலை வழக்குகளும், தமிழகத்தின் பிற போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகளும் உள்ளன.

    திண்டுக்கல்லில் சிசர்மணி, சீட்டிங் ஆனந்த், குமார் ஆகியோரை கொலை செய்த வழக்குகளில் கடந்த 3 ஆண்டுகளாக அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மோகன்ராமை, திண்டுக்கல் வடக்கு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதேபோல் கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய 3 பேரை கொன்ற வழக்கில் மோகன்ராம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கோவை போலீசார் அவரை தேடினர்.

    இதற்கிடையே மும்பையில் பதுங்கி இருந்த மோகன்ராமை கடந்த 8-ந்தேதியன்று போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மோகன்ராமை, திண்டுக்கல்லில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் கோர்ட்டில் ஆஜர்படுத்த திண்டுக்கல் போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக, கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு போலீசார் அவரை அழைத்து வந்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.

    மோகன்ராமின் நெருங்கிய கூட்டாளியாக வலம் வந்தவர் கணேசன் என்ற நரைமுடி கணேசன். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் நரைமுடி கணேசன் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக மோகன்ராம் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு தீபா உத்தரவு பிறப்பித்தார். அதன்பிறகு மோகன்ராம் கோவை மத்திய சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். 
    ×