என் மலர்
நீங்கள் தேடியது "Farmer"
- மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
- ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் விளைபொருட்களில் பணப்பயிர் என்று அழைக்கப்படுவது கரும்பும், மஞ்சளும் ஆகும். ஈரோடு மஞ்சளுக்கு இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி செலவு அதிகரிப்பு, போதிய விலை இல்லாமை, புதிய நோய் பாதிப்பு போன்ற காரணங்களினால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையே விலை கிடைத்ததால் விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியை கைவிடும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஈரோடு மஞ்சள் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கி குவிண்டால் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட விவசாய பெருமக்கள் மஞ்சள் பயிரிடும் பணியில் ஆர்வம் காட்ட தொடங்கினர். தற்போது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக மஞ்சள் மார்க்கெட் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
பிறகு மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு, சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்கள் காரணமாக மஞ்சள் மார்க்கெட் ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெற்றன. இதனால் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை சற்று விலை குறைந்து விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு விற்பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.நேற்று ஈரோடு வெளிமார்க்கெட்டில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 6 ஆயிரத்து 941 முட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.
இதில் 3 ஆயிரத்து 119 மூட்டைகள் விற்பனையானது. சேலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 59 முதல் ரூ.15 ஆயிரத்து 93 வரை ஏலம் போனது. இதேபோல் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 519 முதல் ரூ.14 ஆயிரத்து 539 வரை ஏலம் போனது.
மேலும் ஈரோடு சொசைட்டியில் உள்ள விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 569 முதல் ரூ.14 ஆயிரத்து 899 வரை ஏலம் போனது. இவ்வாறு மீண்டும் மஞ்சள் குவிண்டால் ரூ. 15 ஆயிரத்தை கடந்து விற்பனையாவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு நாளான நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நாளில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மை துறை அமைச்சர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி. மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அத்தகைய போராட்டம் நடக்காத அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் அறிவித்தார். பயிர்க்காப்பீடு திட்டம், நெல் கொள்முதல் ஊக்கத்தொகை தந்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தந்து விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகளை செய்து தந்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார். அதனால் தான் தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
- மூலனூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.
- உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் டிவிரிடி இருப்பில் உள்ளன.
மூலனூர் :
மூலனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மூலனூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. மக்காச்சோளம்-405 கிகி. சோளம் -2.5 டன், உளுந்து 3 டன், கொள்ளு 108 கிகி, நிலக்கடலை- 2 டன், மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் டிவிரிடி இருப்பில் உள்ளன.மக்காச்சோளம் ரூ.100 மானிய விலையிலும், சோளம் ரூ.30 மானியவிலையிலும், உளுந்து ரூ.47 மானிய விலையிலும், கொள்ளு ரூ.67, நிலக்கடலை ரூ.47 மானியவிலையிலும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தேவையான உரம் மற்றும் உரங்களை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விவசாயி பஸ் மோதி பலியானார்.
- திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
விழுப்புரம்:
உத்திரமேரூர் நாஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை (வயது 76) விவசாயி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வேனில் திண்டிவனத்தில் நடக்கும் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்தார்.
அப்போது திருமண நிகழ்ச்சியின் போது திருமண மண்டபத்திற்கு எதிரே உள்ள கடைக்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் வெள்ளை மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் வெள்ளை தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து படுகாயம் அடைந்த வெள்ளையை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு இன்று காலை வெள்ளை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
திருமண விழாவிற்கு வந்த இடத்தில் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
- அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 66). விவசாயியான இவர், இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக அய்யண்ணன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவளக்குப்பம் முத்துமுதலியார் நகர், சிங்கார கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்
- இவர் டி.என். பாளையத்தில் பரமசிவம் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் முத்துமுதலியார் நகர், சிங்கார கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவர் டி.என். பாளையத்தில் பரமசிவம் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இதே நிலத்தை ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் குத்தகை வைத்திருந்ததால் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில் கணேசன் பராமரித்து வந்த தென்னங்கன்றுகளை ஆதி கேசவனுடைய தாயார் கிருஷ்ணவேணி ஆடுகளை கொண்டு மேய்த்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக கணேசன், ஆதிகேசவனிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிகேசவன் அவரது சகோதரர் ராமதாஸ், தாயார் கிருஷ்ணவேணி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் உதவி சப் -இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்ராஜன் கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.
- இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே பூனாச்சி அடுத்துள்ள அட்டவணைப்புதூர் பெத்தக்காபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (38). விவசாயி. இவருக்கு நிஷாந்தி (33) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சவுந்தர்ராஜன் விவசாயத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படு கிறது. கடனை திரும்ப கட்ட முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு இருந்து வந்தார். இதனால் தனக்குதானே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை நிஷாந்தி அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சவுந்தர் ராஜன் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கலைக்கொல்லி மருந்து (விஷம்) எடுத்து குடித்து விட்டு தனது மனைவியின் தங்கை நந்தினிக்கு போன் செய்து தான் விஷம் அருந்தி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் பதறி போன நந்தினி தனது அக்காவிற்கு போன் செய்து மாமா விஷம் குடித்து விட்டதாக கூறுகிறார். என்னவென்று போய் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
உடனடியாக நிஷாந்தியும் அவரது மாமியாரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சவுந்தர்ராஜன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் இறந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன்
- மனைவி பிரிந்து சென்றதால் நம்பிராஜன் விரக்தி அடைந்து விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது30). இவர் விவசாயி. இவருக்கும், மருதமுத்தூரை சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நம்பிராஜன் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும், அவரது மனைவி இந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர் கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் நம்பிராஜன் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் கடந்த 2-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த நம்பிராஜன் விஷம் குடித்தார். இதனால் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.
- கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக புகார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் தேசமாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.
அடங்கல் ஆவணம் தாமதம்
அதனை அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அவருக்கு அடங்கல் ஆவணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டதாகவும், அதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பே அடங்கல் வாங்குவதற்காக எங்களது வயல் பட்டாவை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். அதன்பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் நான் அளித்த புகாரை அறிந்து, தற்போது அடங்கல் ஆவணம் தயார் செய்து கொடுத்துள்ளார்.
நெல் மூட்டைகள்
தற்போது நெல் கொள்முதல் நிலையத்தில் அடங்கல் ஆவணம் சமர்ப்பித்துள்ளேன். அவர்களது நடைமுறைகள் முடிக்க 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எனது நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன. நேற்று பாதிமூட்டைகளை மட்டுமே நெல்லை கொள்முதல் செய்தனர். அதற்குள் மழை வந்து மீதமுள்ள மூட்டைகளை நனைத்துவிட்டது.
இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காலதாமதம் ஏற்பட்டு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.
- மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மணக்கண்.
- அஜித்குமார், அவரது உறவினர்கள் அந்தோணி, நூர்து உள்பட 7 பேர் சேர்ந்து மணக்கன்னை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணக்கண் (வயது 53). விவசாயி. இவருக்கும் அவரது சகோதரர் மகாராஜனுக்கும் பூர்வீக வீட்டை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மணக்கண் தனது மனைவி கலை செல்வியுடன் மகாராஜன் வீட்டு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராஜன், அவரது மகன் அஜித்குமார், அவரது உறவினர்கள் அந்தோணி, நூர்து உள்பட 7 பேர் சேர்ந்து மணக்கன்னை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மகாராஜன் உள்பட 7 பேரும் சேர்ந்து மணக்கண்ணை கம்பால் தாக்கினர்.
மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி அவர் மூலைக் கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகாராஜன் உள்பட 7 பேரையும் தேடி வருகின்றனர்.
- ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது.
- விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது. அதனை எடுத்த அவர் திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தார்.விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.
- விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
- பசுமை போர்வை இயக்கம் சார்பில் வழங்கப்படுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நீடித்த விவசாய நிலத்தில் பசுமை போர்வை இயக்கம் 2022-23-ன் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழக அரசு பண்ணை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்திட தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பசுமை போர்வை திட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது."