search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers are happy"

    • விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மேலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. விருது நகர், சிவகாசி, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக் கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மாவட்டத்தில் மொத்தமாக 500 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.

    இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள், நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கண்மாய்களுக் கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இது விவசாயி களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. அவர்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. செண்பக தோப்பு சாலையில் அணைத்தலை, முடங்கி ஆற்றில் நீர் நிரம்பி செல் கிறது. மறுங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், புதுக் குளம், பிரண்டைகுளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முள்ளிக் கடவு, மாவரசியம்மன் கோவில், நீராவி பகுதிகளில் கனமழை பெய்ததால் 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    ராஜபாளையம் பகுதி யில் அய்யனார்கோவில் ஆறு, பேயனாறு, முள்ளி ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு ஆற்று நீரை கோடை கால குடிநீர் ஏரிக்கு திருப்பி விட்டு வீணாகாமல் சேமித்து வருகின்றனர். தேவதானம் சாஸ்தாகோவில் அணை நிரம்பி வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் பாறை பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு பொதுமக்கள், பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் மலை பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகி றது. பிளவக்கல் பெரியார் அணையில் 32 அடிக்கும், கோவிலாறு அணையில் 8 அடிக்கும், வெம்பக் கோட்டையில் 13 அடி அள விற்கும், கோல்வார்பட்டி யில் 11 அடி அளவிற்கும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குல்லூர் சந்தை அணையில் நீர்மட்டம் 8 அடியை கடந்து நிரம்பி வழிகிறது. சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் பரளச்சி அருகே உள்ள செங்குளம் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதி யில் உள்ள பல்வேறு சிறு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடு அதன் காரணமாக செங்குளம் பகுதியிலுள்ள விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    சுமார் 30 ஏக்கர் பரப்பள விலான மிளகாய், வெங் காயம், சோளம், உளுந்து மற்றும் மல்லி உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின.

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ேமலும் 2 நாட்களுக்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணைகள், நீர்தேக்கங் களில் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம் மில்லி மீட்டரில்:

    வெம்பக்கோட்டை 49.5

    கோவிலாங்குளம் 39

    அருப்புக்கோட்டை 12

    பிளவக்கல் 10.2

    ராஜபாளையம் 26

    திருச்சுழி 18.2

    ஸ்ரீவில்லிபுத்தூர் 9

    சிவகாசி 4.8

    விருதுநகர் 3

    சாத்தூர் 3

    • காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.

    புதுச்சேரி:

    டெல்டா மாவட்ட விவசாயிகளூக்காக கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது. இந்நிலையில், காரைக்கால் வந்த தண்ணீரை, விவசாயிகள் பயன்பாட்டுக்காக உடனே திறந்துவைக்கவேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை த்தொடர்ந்து, நேற்று காலை நல்லம்பல் நூலாறு ரெகுலேட்டரில் இருந்து பாசத்திற்காக திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. சிவா தலைமையில்தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன் மற்றும் துறை அதிகாரிகள் விவசாயிகள் பாசனதார்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ சிவா கூறியதாவது:-இந்த பாசன நீரானது காரைக்கால் மாவட்டத்தில் 5000 ஹெக்டேர் அளவிற்கு பாசன வசதி பெரும். கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைத்த நிலையில், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு குறித்த நீர் கிடைக்கும். இதற்காக பாடுபட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.

    • சிறு மருதூர் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    • இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிறுமருதூர் கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணித்துறை சார்பில்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கண்மாயின் நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது கண்மாய் நிரம்பி மாறுகால் பாய்கிறது.

    இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர். கண்மாய் நிரம்பியதால் இந்த ஆண்டு விவசாயம் நல்ல முறையில் நடக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • குடியாத்தத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
    • பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு

    குடியாத்தம்:

    தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பாலும், நேற்று இரவு மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும், மோர்தானா அணையின் முக்கிய நீர் பிடிப்பு ஆதாரமான ஆந்திர மாநிலம் புங்கனூர் அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியில் உள்ள பெரிய ஏரியான மாடிஏரி நிரம்பி வழிவதால் மோர்தானா அணைக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. அணை 8 சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து அணையின் நீர்மட்டம் 11.58 மீட்டராக உயர்ந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மோர்தானா அணையிலிருந்து வினாடிக்கு 708 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.

    அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து மோர்தானா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்யா மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மோர்தானா அணையில் இருந்து அதிக அளவு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    அதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்வது மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    குடியாத்தம் தாலுகா போலீசார் மோர்தானா அணை வெள்ளநீர் வழிந்தோடும் கவுண்டன்யா மகாநதி ஆறு செல்லும் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.

    வேலூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் குடியாத்தம் உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மோர்தானா அணை வெள்ளநீர் செல்லும் பாதைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் மேலும் குடியாத்தம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் வலதுபுற, இடதுபுறம் மோர்தானா அணை கால்வாய்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டிமீட்டர் மழை பதிவானது.
    • இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான். இதனால் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் வருணபகவான் கருணை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    கடலாடி- 14.60, வாலிநோக்கம்-29.40 கமுதி- 76.20 பள்ளமோர்க்குளம் - 22 முதுகுளத்தூர்-25 பரமக்குடி -57.80 ஆர்.எஸ்.மங்கலம்-106.80 மண்டபம் -27.70 ராமநாதபுரம்-25.20 பாம்பன்-32.40 ராமேசுவரம்-40.20 தங்கச்சிமடம்-25.40 தீர்த்தாண்டத்தனம் -35 திருவாடானை -29.80 தொண்டி-53.70 வட்டாணம் -38 மாவட்டம் முழுவதும் 639.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தொண்டி பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியது. நள்ளிரவு 11 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்தபடி இருந்தது.

    இன்று காலை வரை தொண்டியில் 53.7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவாடானை பகுதியிலும் நீண்ட நேரம் மழை பெய்தது. இந்த மழை தற்போதைய விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், சிறிய அளவு சின்ன வெங்காயம் ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.
    • சில்லரை கடைகளில் இதை விட அதிகமாக விற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தை, தினசரி சந்தைகளுக்கு தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் லோடு அதிக அளவில் வருகிறது.

    அறுவடை

    மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம் மற்றும் மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்னவெங்காயம் உள்ளூர்களில் கூடும் சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்தும் வியாபாரிகள் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இந்த நிலையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெங்காயம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

    ரூ.100 -ஐ எட்டியது

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னவெங்காயத்தின் சில்லரை விலை ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையானது. பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது.

    இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை இன்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ரூ.50 அதிகரித்துள்ளது.

    சந்தைகளில் முதல் தர சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், சிறிய அளவு சின்ன வெங்காயம் ரூ.80-க்கும் விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் இதை விட அதிகமாக விற்கப்படுகிறது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகிழக்கு பருவமழையின்போது சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சின்ன வெங்காயம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த விலை உயர்வின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • காலையில் வெயில் வாட்டி வதைத்தது.
    • ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது.

    மாலையில் மேக–மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாவட்டத்தில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- காடையாம்பட்டி 17, மேட்டூர் -13.2, பெத்தநாயக்கன்பாளையம் -13, ஆனைமடுவு - 8, சங்ககிரி - 7.4, ஆத்தூர் 6.2, கெங்கவல்லி - 6, எடப்பாடி - 4, தம்மம்பட்டி-2 என மாவட்டம் முழுவதும் 51.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.
    • வட்டமலைக்கரை ஓடையில் 1.37 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    அவினாசி:

    மேற்கு திசை காற்றின் வேகம் ,மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துவருகிறது. தென்மேற்குப் பருவமழையால், அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது. அமராவதி அணை மொத்தம் 90 அடியில், 88.46 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,772 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 1,810 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடியில் 28.77 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 31 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.அணையிலிருந்து 27 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. உப்பாறு அணை 4.64 அடி,நல்லதங்காள் அணை 13.29, வட்டமலைக்கரை ஓடையில் 1.37 அடிக்கு தண்ணீர் உள்ளது.தொடரும் மழையாலும் பாசனத்துக்கு கைகொடுக்கும் அணைகளில் நீர் இருப்பு சிறப்பாக உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×