என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Financial institution"
- சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
- இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.
அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.
ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
- நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
- வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.
உத்தமபாளையம்:
கரூர் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பரமசிவம் என்பவர் மேலாளராக உள்ளார்.
சின்னமனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து அதனை வசூல் செய்வதற்காக பல ஊழியர்களையும் கணேசன் நியமித்துள்ளார். கணேசன் 2 மாதத்துக்கு ஒரு முறை நிதி நிறுவனத்துக்கு வந்து வரவு செலவு கணக்குகளை பார்த்து பணத்தை பெற்றுச் செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று பைனான்ஸ் மேலாளர் பரமசிவம் மற்றும் ஊழியர் கண்ணன் ஆகியோர் வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொண்டு காமயகவுண்டன்பட்டியில் இருந்து நாராயணதேவன் பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
செல்லாயி அம்மன் கோவில் அருகே இவர்கள் நின்று கொண்டு இருந்த போது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் பணம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றனர்.
மிளகாய் பொடி தூவியதால் நிலை குலைந்து கீழே விழுந்த அவர்கள் அதன் பின்னர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்ணன் தனது நண்பர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு வசூல் செய்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர். பணம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் ரூ.2 லட்சமே கிடைத்ததால் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான கரூரைச் சேர்ந்த அபிஷேக் (36), வேலூரைச் சேர்ந்த பாஸ்கரன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.2 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- மதுரை பைனான்ஸ் அதிபர் மிரட்டலால் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
- பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
மதுரை
மதுரை பெத்தானியா புரம் பாஸ்டின் நகர் பகுதி யைச்சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தை யும் உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் வசித்து வந்த இவர்கள் கடந்த ஒரு வருடத் திற்கு முன்பு மதுரைக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறு வனத்தில் கார்த்திக் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் தனது சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளார். இதையறிந்த பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் வீடு கட்டுவ தற்கு பணம் எங்கிருந்து வந்தது? என கேட்டுள்ளார்.இதில் அவர்களுக்குள் பிரச் சினை ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த சிலர் கட்டப்பஞ்சா யத்து செய்ததாக கூறப்படு கிறது. இந்த பிரச்சினைக்கு பின் கட்டப்பஞ்சாயத்து கும்பல் தொடர்ந்து கார்த்திக் கிடம் பணம் கேட்டு மிரட்டி யதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்ப வத்தன்று பவித்ரா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பவித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பவித்ரா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பவித்ரா கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படை யில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதி நிறுவன ஊழியர் கார்த்திக் மிரட்டப்பட்டாரா? அல்லது யாரேனும் அவரை தற்கொலைக்கு தூண்டி னார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோலையழகுபுரம் 3-வது தெரு, ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் பிரபு (31). சுமை தூக்கும் தொழி லாளியான இவர் கடன் பிரச்சினையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருப்பாயூரணி அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன் (36) இவருக்கு காவிரி என்ற மனைவியும்,2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்த விஜயன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
- மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (வயது40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை பங்குசந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக கூறினர்.
மேலும் 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூ. 10 ஆயிரமும் சேர்த்து கொடுப்பதாகவும், 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய மதன்குமார் கடந்த மே மாதம் 6-ந்தேதி தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 9-ந் தேதி தனது உறவினர்களிடம் இருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மதன்குமாருக்கு அவர்கள் 3 பேரும், ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர். ஆனால் கார் வாங்க முன்பணம் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த ஜூன் 26-ந்தேதி அவர்களிடம் நகைகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மதன்குமார் போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 25 லட்சம் மதிப்புள்ள 69 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, பிள்ளைமுத்து, லலிதா மற்றும் தலைமை காவலர்கள் சுப்பையா, செந்திவேல் முருகேயன், முதல் நிலை பெண் காவலர் ஜெயலட்சுமி ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதில் மோசடி செய்த தங்க நகைகளை நிதிநிறுவனத்தில் அடகு வைக்க உதவியாக இருந்த அந்நிதிநிறுவன ஊழியர்களான ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த சந்தியா (24), தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த கிஷோர் ராகுல் (23), தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த தங்ககுமார் (31), புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரும்படை பட்டு மாரியப்பன் (31), புதியம்புத்தூர் ஆர். சி. தெருவை சேர்ந்த சுந்தரவிநாயகம் (23), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (29), புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராஜலெட்சுமி (27) மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (42) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சீட்டுக்கான காலக்கெடு முடிவுற்ற போதிலும் பலருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சுமார் 60 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி நிறுவனத்தை ராஜேஷ் கண்ணா என்பவர் நடத்தி வந்தார்.
இந்நிறுவனத்தில் மேலாளராக நரேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார்.
நிரந்தர வைப்பு நிதியாக 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 4000 ரூபாய் வட்டியாக தருவதாக கூறியிருந்தனர். இதில் 200க்குமேற்பட்டோர் முதலீடும் செய்திருந்தனர்.
மேலும் பலர் மாதாந்திர சீட்டும் கட்டியிருந்தனர். சீட்டுக்கான காலக்கெடு முடிவுற்ற போதிலும் பலருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கும்பகோணத்தில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென மூடப்பட்டுள்ளது.
இங்கு முதலீடு செய்தவர்கள் இந்நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணாவை பலமுறை நேரில் சந்தித்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பலருக்கு ராஜேஸ்கண்ணா செக் கொடுத்துள்ளார்.
கொடுத்த செக்குகள் அனைத்தும் கணக்கில் பணம் இல்லை என செக் ரிட்டன் ஆகி உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சுமார் 60 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த 60 நபர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடியில் செய்யப்பட்ட தொகை சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கும்பகோணம் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த இந்நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மன்னார்குடியில் பதுங்கியிருந்த நரேந்திரன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இவர்கள் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்
இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கீழக்கரை அருகே நிதி நிறுவனத்தில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
- இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது48). இவர் தனது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றுஇரவு வழக்கம்போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பினர்.
இன்று காலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே வந்து தனது நிதி நிறுவனத்தை பார்த்தார்.
அப்போது நிதி நிறுவன த்தின் கதவு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதையடுத்து அவர் நிதிநிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது நிதி நிறுவனத்தில் வைக்ககப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்தை பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கீழக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் நிதி நிறுவன த்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
நிதிநிறுவனத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கீழக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல கோடி மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வதி நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை பெற்றுக்கொள்ள சென்றார்.
புதுச்சேரி:
புதுவையில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை லெனின் வீதியில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தை தங்கபழம், ஜெயவேல், பிரேம் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் மேலாளராக பெருமாள் மற்றும் கலெக்ஷன் ஏஜெண்டாக ஸ்டெல்லா, கிளை மேலாளராக கன்னியக்கோவிலை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மகள் சிவாகணேஷ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் லெனின் வீதியை சேர்ந்த ராம் என்பவரின் மனைவி பார்வதி (வயது56) என்பவர் ரூ.4 லட்சம் வைப்பு தொகையை செலுத்தினார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வதி நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை பெற்றுக்கொள்ள சென்றார். அப்போது நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. பல நாட்கள் சென்று பார்த்தும் நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சிய டைந்த பார்வதி செல்போன் மூலம் கிளை மேலாளரான ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் சிவாகணேசை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பார்வதி நிறுவனத்தின் மேலாளர் பெருமாள் மற்றும் கலெக்ஷன் ஏஜெண்ட் ஸ்டெல்லா ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களும் சரியான பதில் கூறவில்லை.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை பார்வதி உணர்ந்தார்.
இதுபோல் இந்த நிதி நிறுவனம் பலரிடம் பல கோடி ரூபாய் வைப்பு தொகையாக பெற்று பணத்தை மோசடி செய்து விட்டு நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பார்வதி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
- மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை பி.பி.குளம் பகுதியில் பி.டி.ராஜன் ரோடு, ஏ.வி.ஆர். காம்பிளக்சில் இயங்கி வந்த பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (பி.எம்.சி.) என்ற நிதிநிறுவனத்தை சேக் முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குநராக இருந்து கொண்டு நடத்தினார். அவர் பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக உறுதி அளித்தார். உறுதி மொழியில் கூறியது போல் லாபத்தை திரும்ப செலுத்தாததால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை டான்பிட் சிறப்பு கோர்ட்டில் எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. அதன் பின்பு மேற்கண்ட நிதி நிறுவனத்தின் மீது பணம் மோசடி செய்ததாக இதுவரை பல புகார் மனுக்கள் பெறப்பட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் ஏப்ரல் மாத இறுதிக்குள் எமது அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் நேரில் புகார் கொடுக்குமாறு முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும் தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அலுவலக தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீதிபதி சத்யநாராயணன் உத்தரவின்படி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
- இந்நிலையில் வேலூரில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி மன்னாா் முதலி தெருவில் வசிக்கும் சரவணன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்துக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் தீபக் உள்பட 2 பேரை கத்திமுனையில் கட்டிபோட்டுவிட்டு ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக சையது ரியாஸ் (22) என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை இல்லாத பட்டதாரி நண்பர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை பெரியார் நகர், ஆழ்வார் திருநகர் அண்ணா சாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் (21), அவரது நண்பரான கிஷோர் கண்ணன் (23) ஆகிய இருவரும் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதி சத்யநாராயணன் உத்தரவின்படி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வேலூரில் தலைமறைவாக இருந்த தினேஷ், சந்தோஷ் ஆகிய மேலும் இருவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனம் நெருக்கடியால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
- வீடு கட்டுவதற்கு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே அணுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி ஜெயந்தி (வயது 45).இவர்கள் வீடு கட்டுவதற்கு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். இதற்காக அவர்கள் மாத தவணை கட்டி வந்தனர். கடந்த மாதம் தவணை கட்டவில்லை. இதனை அறிந்த நிதிநிறுவனத்தினர் நேராக செல்வராஜ் வீட்டுக்கு விரைந்தனர். அப்போது செல்வராஜ், அவரது மனைவி யந்தி வீட்டில் இல்லை. அங்கு ஜெயந்தியின் மகள் மட்டும் இருந்தார்.
உடனே நிதிநிறுவனத்தினர் ஜெயந்தி மகளிடம் தவணை கட்டுவதற்கு குறித்து தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் மாலைநேரம் ஜெயந்தி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது நடந்த விவரம் குறித்து மகள் கூறினார். இதனால் ஜெயந்தி மனமுடைந்தார். நிதி நிறுவனம் பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தற்கொலை செய்வது என தீர்மானித்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெயந்தி தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கான கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கும்பகோணம் அடுத்த நாககுடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சண்முகவேல். ஸ்தபதியான இவர் கும்பகோணம் மாதப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் ஏலச்சீட்டுக்கு சேர்ந்திருந்தார்.
இவருக்கான ஏலச்சீட்டு ரூ.5 லட்சம். இதில் இதுவரை சண்முகவேல் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 750 கட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த 8.5.2018-ல் அவருக்கு ரூ. 3 லட்சம் சீட்டு விழுந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த பணத்தை நிதிநிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணத்தை கொடுக்காமல் இவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வேதனையடைந்த சண்முகவேல் மீண்டும் நிதி நிறுவனத்துக்கு சென்று நான் கட்டிய ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 750 திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
பின்னர் நிதி நிறுவனம் சண்முகவேலுக்கு ரூ.97 ஆயிரத்து 750-க்கான காசோலையை வழங்கியுள்ளது. இதனை அவர் வங்கியில் சென்று போட்டுள்ளார். ஆனால் காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் இன்று காலை நிதி நிறுவனம் முன்பு பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சண்முகவேலை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்