என் மலர்
நீங்கள் தேடியது "flag"
- இதுவரை கட்சியில் புதிய உறுப்பினர்களாக 80 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- கட்சியின் முதல் அரசியல் மாநாடாக நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு எனவும் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் அறிக்கை வாயிலாக விஜய் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடைபெற்று வருகிறது. இதுவரை கட்சியில் புதிய உறுப்பினர்களாக 80 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிதாக கட்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக இணைந்துள்ளனர். 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதை இலக்காக கொண்டு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விஜய் ஆலோசனையின் பேரில் தொண்டர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
புதிய கட்சி தொடங்கியதை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கட்சிக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணைய விதிமுறைப்படி விளம்பரமாக வெளியிட்டனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணி அசுர வேகத்தில் நடைபெற உள்ளது.
விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு இடைவெளியில் கட்சி வளர்ச்சி பற்றி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வரும் விஜய் தனது பிறந்த நாளை அடுத்த மாதம் 22-ந்தேதி கொண்டாட இருக்கிறார்.
இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் மாநாடு நடைபெற இருக்கும் இடத்தை நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் முதல் அரசியல் மாநாடாக நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் கோடிக்கணக்கான தொண்டர்கள் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மாநாட்டில் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் கொடி வடிவமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்சியில் புதிதாக திரையுலக நடிகர், நடிகைகள் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணைய இருக்கின்றனர்.
மாநாடு நடைபெற இருப்பதை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சமூக வலைதளத்தில் விரைவில் மாநாடு.... என ஆர்வத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். புதிதாக தொடங்கிய போதும், தே.மு.தி.க.வை விஜயகாந்த் தொடங்கிய போதும் மதுரையில் முதல் மாநாட்டை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
- வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என பல மணிநேரம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆளில்லா டிரோன்கள் மூலம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே மறைந்த ஈரான் அதிபர் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று 'இந்தியா' முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
- பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது.
- பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பெருமைக்கு உரியது.
இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நடைபெற்றது
தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது
தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்து றை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது.
விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிகாரி இருதயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், நாகை சுகாதாரப் பணிகள் உதவி இயக்குனர்விஜய குமார் ஆகியோர் வழிகாட்டு தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இடையன்குளம் கிராமத்தில் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
- ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் பள்ளிக் கல்வி துறையின் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் 75-வது சுதந்திர தின நிறைவைக் குறிக்கும் வகையில் வீடுதோறும் தேசிய கொடி வைக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்தது.
இடையன்குளம் கிராமத்தில் சுமார் 650 குடியிருப்பு உள்ளது. இங்கு 5 இ்ல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 140 மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள்.
தன்னார்வலர்கள் சித்ரா, மதனா, மனோன்மரியா, லதாபிரியா, சந்திராஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய கொடி ஏந்தி கிராமத்தின் தெருக்களின் வழியே வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை மாணவர்கள் வைத்து மரியாதை செய்தனர். மேலும் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளிலும் தேசிய கொடி வைக்கப்பட்டது.
பாட்டக்குளம் கிராமத்தில் உள்ள திருமலாபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் தன்னார்வலர் மீனாட்சி தலைமையில் மாணவ- மாணவிகள் தேசிய கொடியேந்தி வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.
நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதி மணிராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் , ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
- பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
- வீடுகளில் ஏற்றுவதற்கான வழிமுறைகளை தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் ஆகியோரின் அறிவுரைபடி 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி பேரூராட்சியில் வருகிற 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றுவதற்கு வீடு வீடாக தேசிய கொடி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்குவதற்கு பணியாளர்களுக்கு ஆணையிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடியினை வழங்கி வீடுகளில் ஏற்றுவதற்கான வழிமுறைகளை தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வார்டு உறுப்பினர்கள் இலக்கியா, கார்த்திக், உலகம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வளர்மதி, ஷோபா, பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
- தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகின்ற 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளு க்கும் தேசியக்கொடிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 2562 வீடுகளுக்கு சென்று தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுர ங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா 18 இடங்களில் நடைபெற்றது.
- அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 18 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.
முஸ்லிம் லீக் நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மஹ்மூத் ஹசன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகரச் செயலாளர் அபுசாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட துணைச்செய லாளர்பெத்தப்பா சுல்தான், மாவட்ட நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், காதர் சாகிப் மற்றும் முகைதீன் தம்பி, முகமது அலி, லெப்பையப்பா ரஹமத்துல்லா, காயிதே மில்லத் பேரவை செயலாளர் வாவு சம்சுதீன் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கொடி ஏற்றினர்.
அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது. நகர நிர்வாகிகள் சித்திக், அப்துல் கரீம், கடலூர் ஜாபர், முகமது முகைதீன், அப்துல் ரகுமான், உமர் அப்துல் காதர், சுகைல் இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.