என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flush"

    • ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சேர்வைக்காரன் ஊரணியை சேர்ந்தவர் முனீசு வரன்(வயது21). இவருக்கும் பெருங்குளத்தை சேர்ந்த காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோ ருக்கும் முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் முனீசுவரன் ராமநாதபுரத்திற்கு சென்று தனது சித்தியிடம் ரூ.58 ஆயிரம் வாங்கினார். பின்னர் உறவினர் சதீசு வரனுடன் அங்கிருந்து சேர்வைக்காரன் ஊரணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர்கள் பெருங்குளம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோர் அவர்களை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவர்களை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு முனீசு வரனும், சதீசுவரனும் அங்கிருந்து ஓடி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து உச்சிப்புளி போலீசில் முனீசுவரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பரின் சகோதரர் என்று ஏமாற்றி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(24). சம்பவத்தன்று இவருக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முத்துக்குமாரின் நண்பரா ன ராஜா என்பவரின் தம்பி பேசுவதாக கூறியுள்ளார்.

    அவரும், அவரது நண்பர்களும் அருகில் உள்ள விழா ஒன்றிர்க்கு வந்ததாகவும் அங்கே மது குடித்துவிட்டு கிணற்றில் குளித்தபோது நண்பர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறி உடன டியாக கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள கோவில் அருகே வரும்படி அழைத்துள்ளார்.

    முத்துகுமார் அவர் கூறிய இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு செல்போனில் பேசிய நபர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள அட்டைமில் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் வந்து முத்துக்குமாரை ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர்.

    அதற்கு முத்துகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். அப்போது அந்த நபர்களில் ஒருவர் கத்தியின் கீழ் பகுதியால் முத்துகுமாரை தாக்கியுள்ளார். இதையடுத்து முத்துகுமார் தனது வங்கி கணக்கு கடவுச்சொல்லை கூறியுள்ளார்.போன்பே மற்றும் ஜி-பே மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 200 எடுத்துள்ளனர்.

    பின்னர் அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.அவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்துகுமார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    மேலும் இதுகுறித்து முத்துகுமார் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.
    • சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    ஓமலூர் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதனால் அவர் கூச்சல் போட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக ஜெகதீஷ் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெகதீ சிடம் செல்போன் பறித்தது நாழிக்கல்பட்டியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • நடந்து சென்ற‌ பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே கோட்டனம் பட்டியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் தனது வீட்டுக்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் சீதாலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சீதா லட்சுமி மகன் ராம்ராஜ் சாப்டூர் போலீசில் புகார் செய்தார் .

    அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது55). இவர் அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று வெளியூர் செல்வதற்காக தோட்டத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து வந்தார். அப்போது மெயின் ரோட்டில் ஒரு காரின் அருகே 2 மர்ம நபர்கள் நின்றிருந்தனர்.

    நாகம்மாள் அருகே வந்தபோது ஒரு மர்ம நபர் திடீரென்று நாகம்மாளின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்து இருந்த கவரிங் செயினை பதித்துள்ளார். மற்றொருவர் காதில் அணிந்திருந்த கம்மலை அறுத்து எடுத்துள்ளார். நாகம்மாள் சுதாரிப்பதற்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் இருவரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த நாகம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அடுத்தடுத்து 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகரில் நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நகைகளை பறித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் புஷ்பவள்ளி(வயது55). இவர் சம்பவத்தன்று திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புஷ்ப வள்ளி அரசு பஸ்சில் சென்றார். அங்குள்ள புளியமரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் மண்டபத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் புஷ்பவள்ளியை மறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    மற்றொரு சம்பவம்

    நாகமலை புதுக்கோட்டை மேலக்குயில்குடியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சத்யா(33). இவரும் சம்பவத்தன்று திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    சன்னதி தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யா வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பினர். அதில், 2¾ பவுன் நகை இருந்தது. இந்த 2 நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனபாண்டி (வயது37). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கணவருடன் வெளியே புறப்பட்டார். முத்தமிழ்நகர் 2வது தெருவில் சென்று கொண்டி ருந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென மறித்து தனபாண்டி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சூரமங்கலம் அடுத்த குரங்குசாவடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனிதா குரங்குசாவடி அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், அனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த குரங்குசாவடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனிதா (வயது 37). இவர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் குரங்குசாவடி அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், அனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறிக் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். சம்பவம் குறித்து இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியபோது, சமீப காலமாக வழிபறிக் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. போலீசார் இதனை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    • இது குறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மூக்கணா ங்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி மஞ்சுளா

    கரூர்

    கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த, சின்ன மூக்கணா ங்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி மஞ்சுளா (வயது 37). இவர். சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் சிந்தாமணிபட்டி வரவனை பெருமாள் கோவில் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த இருவர், மஞ்சுளாவின் கழுத்தில் அணிந்திருந்த, ஆறு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).

    துணிக்கடை

    இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா ( வயது 28). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியா மணியம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பெருந்தொழுவு கரியாம்பாளையம் என்ற இடம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகவரி கேட்டு மோகனப்பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அவரை தள்ளி விட்டு சென்றனர். இதில் நிலைத்தடுமாறி விழுந்த மோகன பிரியாவுக்கும் குழந்தைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து மர்மநபர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொன்மலையில் டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு
    • பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    திருச்சி, 

    திருச்சி கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் பொன்மலை பட்டியில் உள்ள மதுபான கடையில் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவர் பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து செல்வராஜ் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரிடம் பணம் பறித்த திருவெறும்பூர் திருநகரை சேர்ந்த விஷால் ( 23) பொன்மலை பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் ( 22 ) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து 2 பேரை கைது செய்தனர்.

    • பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஊழியரிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.
    • கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்,

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 40). இவர் ஆமத்தூரை அடுத்த வடமலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அவர் தனது வீட் டில் இருந்து இருசக்கர வாக னத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று அதே போல் பள்ளிக்கு சென்ற அவர், மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார். முன்னதாக விருது நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் அவர் முடிவு செய்திருந்தார்.

    இதற்காக அவர் வந்த போது, சிவகாசி சாலையில் குமாரலிங்காபுரம் பகுதியில் அவரை பின்தொடர்ந்து மற்ெறாரு மோட்டார் சைக் கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி கள் 2 பேர் திடீரென்று ராஜலட் சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.

    இருந்தபோதிலும் அவர்க ளிடம் கடுமையாக போரா டியும் பலனின்றி போனது. இதில் 5 பவுன் செயினில் ஒன்றரை பவுன் நகையுடன் அந்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து ராஜலட்சுமி ஆமத் தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடு பட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    ×