search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food items"

    • அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
    • குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.

    பல நாடுகளில் பல நாட்டவர்கள் உண்ணும்போது கைகளைப் பயன்படுத்துவதில்லை. வேறு உபகரணங்களைக் கொண்டே வாயில் உணவை எடுத்து வைக்கின்றனர். ஆனால் அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.

    உணவு உண்ணுதல் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கான ஒரு மிக முக்கியமான வாழ்க்கை நடவடிக்கை. அதேசமயம், அது ஒரு சமூக நிலையில் ஏற்கப்படக்கூடிய முறைகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

    பல நபர்கள், எத்தனை வயதாகியும், சமூகத்தால் ஏற்கப்படக்கூடிய முறையில், உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றக்கூடிய நிலையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உண்ணும் முறை பார்க்கும் பலரை முகம் சுளிக்க வைக்கிறது.


    எனவே, இளமையில் கல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, குழந்தைப் பருவத்திலேயே, நாகரீகமான முறையில் உணவு உண்ணுதல் எப்படி என்பதை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

    சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும். சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது.

    மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான அளவில் உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, இடம் போதாமல் உணவு சிந்தும் நிலை ஏற்படுகிறது. இதைப் பிறர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

    உணவை வாயில் வைத்தப் பின்னர், அதை மூடிய நிலையில் மெல்லுமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் சவக் சவக் என்ற அநாகரீகமான சத்தம் வராது.


    உண்ணும்போது, சற்று குனிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தட்டிற்கும், வாய்க்கும் இடையேயான இடைவெளி குறைந்து, உணவு தேவையற்ற இடங்களில் சிந்துவதை தவிர்க்க முடியும்.

    டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, தட்டிற்கு கீழே விரிப்பை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்ணும்போது, உங்களின் குழந்தை தேவையற்ற இடங்களில் தட்டை நகர்த்தாமல், முறையான இடத்தில் தட்டை வைத்து உண்ணப் பழகும்.

    தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோ உண்பதற்கு, எந்த சூழலிலும் உங்களின் குழந்தையை அனுமதிக்க வேண்டாம்.

    குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.


    டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு, ஒரு கையை டேபிளிலேயே தட்டிற்கு அருகே வைத்துக்கொண்டு, இன்னொரு கையைப் பயன்படுத்தி உண்பதற்கும், கீழே அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து, ஒரு கையை கால்களின் மீது மடக்கி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் சற்று குனிந்த நிலையில் இருந்து உண்பதற்கும் சொல்லித்தர வேண்டும்.

    சிறு குழந்தைகள் சாப்பிடும்போது, அவர்களின் கைகள் மற்றும் கண்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுவடைகிறது. மேலும், அதேசமயத்தில், அவர்கள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலான உண்ணும் பழக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.

    எதையும் உண்ணும் முன்னதாக, கைகளைக் கழுவும் பழக்கத்தை உங்களின் குழந்தை கட்டாயம் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் அனைத்திற்கும் அடிப்படை.

    • வாகனத்தின் இயக்கத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்களிடையே உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தின் செயல்பாடு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வாகனத்தின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் மகாபாரதி, பின்னர் பேசியதாவது:-

    உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், உணவகங்களில் உணவு வகைகள் கலப்படமின்றி தயாரிக்க ப்படுகின்றனவா, கடைகளி ல் விற்கப்படும் உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    அதன்படி, இந்த வாக னத்தின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்த மாதம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களிடையே உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட உள்ளன.

    எனவே, பொது மக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்வோர் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது, உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களைக் கேட்டும், பரிசோதித்தும் தெரிந்து கொள்ளலாம் என் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த வாகனம் உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளது.
    • எளிய பரிசோதனை மூலம் உணவு பொருட்களின் தரம் கண்டறிப்படும்.

    தென்காசி:

    நடமாடும் உணவு பகுப்பாய்வகம் எனப்படும் வாகனம் தமிழ்நாடு அரசால் உணவு பாதுகாப்பு துறை யின்கீழ் பாளை, தஞ்சாவூர், சேலம், கோவை பகுதிகளில் இயங்கும் உணவு பகுப்பாய்வகங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு

    இந்த வாகனமானது உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளது. இதில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது அவர்களிடையே நல்ல சுகாதாரமான சத்தான உணவினை உட்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமை யும்.

    இந்த வாகனம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட பயன்பாட்டிற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

    கலெக்டர் தொடங்கி வைத்தார்

    இந்நிலையில் நேற்று முதல் ஒரு மாதத்திற்கு தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள், வியா பாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மூலம் பரிசோதனைக்காக பெறப்படும் உணவுப் பொருட்கள் இவ்வாகனத்தில் மேற்கொள்ளப்படும் எளிய பரிசோதனை மூலம் அப்பொருட்களின் தரம் கண்டறிப்படும்.

    பாதுகாப்பு அதிகாரிகள்

    மேலும் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக பள்ளி- கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    இதேபோல் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணி யாளர்கள் இவ்வாகனத்தை பயன்படுத்தி, அவர்களது பகுதியில் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள் வார்கள்.

    உணவு பரிசோதனை

    இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இவ்வாய்ப்பினை பொது மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி மாண வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தொடக்க விழா நிகழ்ச்சி யில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாது காப்புத்துறை) டாக்டர். சசிதீபா, உணவு பாது காப்புத்துறை அலுவலர்கள் மகாராஜா, செல்வராஜ், முத்துராஜா, நாகசுப்பிர மணியன், முகமது அப்துல் ஹக்கிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 2015ம் ஆண்டில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டி திறப்பு விழா செய்யப்பட்டது.
    • அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்டரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடந்த 2015ம் ஆண்டில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டி திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த நிலையில், சேமிப்புக் கிடங்கில்,அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்டரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், கிடங்கின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது .இதனை முறையாக பராமரிக்காததால் அவற்றின் வழியாக பெருச்சாளிகள் புகுந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சேமிப்பு கிடங்கு தரமில்லாத கட்டுமான பணியால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கூட்டுறவு சங்க நிர்வாகமும் அலட்சியப்படுத்தி வருவதால் அந்தப் பள்ளத்தின் வழியாக பெருச்சாளிகள் புகுந்து உணவுப் பொருட்களை நாசமாக்கி வருகின்றன. இதனால் சுத்தமான உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

    எனவே கூட்டுறவு சங்க நிர்வாகம், ரேஷன் கடை நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு.
    • மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு

    விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியின் விகிதத்தை கடுமையாக உயர்த்தியதோடு, பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை புதிதாக ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

    அண்மையில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் இனிமேல் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒன்றிய அரசின் இத்தகைய முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவிற்கு ரூ 3 முதல் ரூ 5 வரையிலும் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே பணவீக்கத்தாலும், கடுமையான விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

    மத்திய அரசின் இத்தகைய மோசமான முடிவை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 4000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, சத்தீஷ்கர், மேற்குவங்காளம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறுகின்றன.

    மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சவுமியாசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பொதுமக்கள் எந்த ஒரு வணிக நிறுவனத்திற்கு சென்றாலும் உணவுப்பொருட்களை வாங்கும்போது, அதில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, உணவுப்பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை இருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். பொருட்களை வாங்கும்போது ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய உணவுப்பொருளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், அந்த பொருளை உடனடியாக மாற்றி வாங்கி தரப்படும் குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் பி.ஐ.எஸ். உள்ளிட்ட எண்கள் இல்லை என்றால் அது போலியானது.

    கடந்த 6 மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உணவு வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பேரில் உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வகத்தில் இருந்து வரப்பெற்ற முடிவினை தொடர்ந்து தரமில்லாத 30 உணவு பொருட்களை விற்பனை செய்த உணவு வணிக நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் வழக்கு தொடரப்பட்டது. அவரின் துரித விசாரணையின் முடிவில் அபராத தொகையாக அந்த நிறுவனத்திற்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் கலப்படம் பற்றிய புகார்களை 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம். சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்-அப் எண்ணை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    சத்தியமங்கலத்தில் ஒரு கடையில் பலகாரத்தின் மீது ஊர்ந்த எலியால் பரபரப்பு ஏற்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் இருந்த 25 கிலோ பலகார வகைகளை அழித்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி அறிவுரை பேரில் சத்தியமங்கலத்தில் உள்ள பலகார கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    உணவு தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், குழந்தைவேலு ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு கடையில் இருந்த பலகாரங்களில் எலி ஒன்று இருந்தது தெரிய வந்தது. பலகாரத்தின் மீது ஊர்ந்த அந்த எலியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றினர்.

    பிறகு கடைகளில் இருந்த 25 கிலோ பலகார வகைகள் பினாயில் மூலம் அழிக்கப்பட்டது.

    தொடர்ந்து அதிகாரிகள் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர். கடையில் உள்ள அனைத்து பலகாரங்களையும் மூடி போட்டு வைத்து தயாரிப்பு தேதியையும் ஒட்டி வைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர்.



    ×