என் மலர்
நீங்கள் தேடியது "General election"
- இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது.
- கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
எதிர்ப்புக்கு மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்த அவர் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறை துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில், கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று எச்சரித்தார். மேலும் ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியா, காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுடன் கசப்பான உறவை கொண்டுள்ளதால் தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது என கனடா கணித்துள்ளது.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை எதிர்ப்பதற்கும் அதன் மூலோபாய நோக்கங்காக, கனடா பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடக்கூடும் என்று கனடா தெரிவித்துள்ளது.
- ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
- கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பும்.
கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும் என்று அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும் எதிர்ப்பு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
தொடர்ந்து கனடா பாராளுமன்றத்தை முன்கூட்டியே களைத்த பிரதமர் மார்க் கார்னி, ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஞாயிறு அன்று அறிவித்தார்.
இந்நிலையில் தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறை துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளராகளை சந்தித்து பேசுகையில் இந்தியா மற்றும் சீனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கனடாவில் உள்ள இன, கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் சீனா பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

அதேபோல், ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலிலும் இந்தியா, சீனா தலையிட முயற்சித்தது. ஆனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் கனடாவின் ஜனநாயக நடைமுறைக்கு இது பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்புள்ளதாக 2023இல் அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதன் பின் கனடா - இந்தியா உறவில் ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கனடாவின் தற்போதைய குற்றச்சாட்டுக்கு, இந்தியா இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

- பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கடந்த மே 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற 300 தொகுதிகளை கொண்ட அந்த நாட்டில் 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கடந்த 5 வாரங்களில் இரண்டாவது முறையாக அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் கிரியாகோஸ் வெற்றி பெறுவார் என அங்குள்ள கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
- பாகிஸ்தானில் கடைசியாக 2018ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது
- தொகுதி மறுசீரமைப்பு இறுதி பட்டியல் நவம்பரில் வெளியிடப்படும்
342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாட்டு மக்களவையில் 272 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவையன்றி 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசியாக 2018 ஜூலை மாதம் அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முழு பெரும்பான்மையிடங்களுக்கு குறைவாக இடங்களை பிடித்தது. இருப்பதற்குள்ளேயே அதிக இடங்களில் வென்ற கட்சி என்பதால் அவர் சில கட்சிகளுடன் ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்தார்.
கடந்த ஏப்ரல் 10 அன்று அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக, பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நஆட்சியை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷெஹ்பாஸ் ஷரீஃப் பிரதமராக பதவியேற்றார். அவரது பிரதமர் பதவி காலம், 2023 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்ததையடுத்து இடைக்கால பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் என்பவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்நாட்டுக்கான பொதுத்தேர்தல் குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எந்த அறிக்கையும் அளிக்காமல் இருந்து வந்ததால் அரசியலில் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், 2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
அந்நாட்டின் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 அன்று வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு பிறகு 54-நாள் தேர்தல் பணிகள் நடைபெற்ற பிறகு ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது.
அந்நாட்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப் கட்சியும், ஷெஹ்பாஸ் ஷரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பிரதான கட்சிகளாகும்.
- விரைவில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.
- சந்திப்பு திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், அ.தி.முக. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்-ஐ நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரின் சந்திப்பு திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது.
சந்திப்பின் போது பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அந்த வகையில், விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
- மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றார்.
- ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த ஆயுதப் போராளிகளும் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அண்டை நாடான மியான்மரில் 2021 இல் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் 4 வருட ராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மியான்மரின் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளார் என மியான்மர் அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மின் ஆங் அங்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
அதில் அவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அல்லது 2026 ஜனவரி மாதத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் கூறியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட ஏற்கனவே மியான்மரின் 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவுன் சன் சுகியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு, ராணுவ அரசின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கபட்டது.
விழுப்புரம் :
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புஷ்பஸ்ரீ என்ற மாணவி 492 /500 மதிப்பெண்களை பெற்று முதலிடத்திலும் மகா என்ற மாணவி 488 மதிப்பெண்களைப் பெற்று 2-ம் இடத்திலும் தஷ்னி என்ற மாணவி 485 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மகேஸ்வரன் என்ற மாணவன் 539 /600மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்திலும் அருண்குமார் என்ற மாணவர் 525 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்திலும் ராம்குமார் என்ற மாணவர் 513 என்றும் மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப்பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு போன்நேரு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் வாசுதேவன், பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வாசுதேவன் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
- 10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், அட்சயா 396 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சாரா 385 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று உள்ளார்கள். அதேபோல் பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும், எமிமா 452 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், முகமது நிஸாருத்தீன் 441 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் செல்லம்மாள் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் பரிமளா காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.
கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் நிர்வாக குழுவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர், தலைவி, விளையாட்டு செயலாளர், கலை இலக்கிய செயலாளர் ஆகிய 4 பொறுப்பாளர்கள், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய அணிகளை கொண்ட 4 அணித்தலைவர் மற்றும் 4 துணை தலைவர்கள் என மொத்தம் 12 பொறுப்புகளுக்கு 38 மாணவ-மாணவிகள் போட்டியிட்டனர்.இவர்கள் சக மாணவர்களிடம் ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.

இதற்காக பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள அரங்கில் 8 மேஜைகள் போடப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஐ-பேடு வைக்கப்பட்டிருந்தது. வாக்குபதிவை பள்ளியின் நிறுவனர் லட்சுமி நாராயணசாமி வாக்களித்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் அந்தோணிராஜ், தலை மை ஆசிரியை அனிதா, மழலையர் பள்ளி பொறுப்பாளர் மீரா ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னதாக அவர்களுக்கு பொதுத்தேர்தலில் வைப்பது போல கை விரலில் மை வைக்கப்பட்டது.அதன்பின்னர் அவர்கள், 12 பதவிகளுக்கு போட்டியிடும் மாணவ-மாணவிகளின் புகைப்படங்களை தொட்டு இணைய தளம் மூலம் வாக்களித்தனர். அவர்களில் யாரையும் பிடிக்கவில்லையென்றால் பொதுத்தேர்தலில் உள்ளது போன்று ‘நோட்டா’ வாக்கு பதிவு செய்யும் வசதியும் இருந்தது. ஆனால் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்கவில்லை.
இதுகுறித்து பள்ளி நிறுவனர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா ஆகியோர் கூறியதாவது:-
பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளியில் படிக்கும் போதே அரசியல் அறிவுபெறவேண்டும். தேர்தல் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். தேர்தலில் வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை.நாட்டின் நலன் கருதி அதை தவற விடக்கூடாது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தலை நடத்தினோம். இதில் 742 மாணவ-மாணவிகள், 86 ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 832 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்கு பதிவு எண்ணப்பட்டு, 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.